வெளுத்துடுச்சு சாயம்.. மோடி பிம்பம் + மாறிய காலம்.. கப்சிப் மோடில் பாஜக.. ஒரே போடு.. யார்னு பாருங்க
முரசொலி நாளிதழ் பாஜக மோடி அரசை கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளது
சென்னை: நடந்து முடிந்த ஒரே ஒரு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியையும், 6 சட்டமன்ற இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது... ஆனால், இந்த முடிவுகள் குறித்து பாஜகவினர் பேசுவதே இல்லையே ஏன் என்று முரசொலி கேள்வி எழுப்பி உள்ளது.. அத்துடன், தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல பாஜக என்பதையே இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்றும் விமர்சித்திருக்கிறது முரசொலி.
உத்தரபிரதேசம் கட்டௌலி சட்டசபை இடைத்தேர்தலில் ராஷ்டிரிய லோக்தளம் வேட்பாளர் மதன் பையா வெற்றி பெற்றுள்ளார்.. சட்டீஸ்கரில் பானுபிரதாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாவித்திரி மனோஜ் வெற்றி பெற்றுள்ளார்..
ஒடிசாவில் பதம்பூர் தொகுதியில் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் பர்சா சிங் வெற்றி பெற்றுள்ளார்.. ராஜஸ்தான் சர்தர்ஷாஹர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அணில் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

குஷி குஷி
பீகாரில் மட்டும், குர்ஹானி தொகுதியில் பாஜகவின் கேசவ பிரசாத் வென்றுள்ளார்... அதாவது 5 மாநில இடைத்தேர்தல்களில் 4 இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.. ஆனால், 4 தோல்வியை பற்றி வாயே திறக்காமல், குஜராத்தில் வெற்றிபெற்றதை மட்டுமே குஷியில் கொண்டாடி கொண்டிருக்கிறது.. 4 மாநில லோக்சபா தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தல், இமாச்சல பிரதேச தேர்தல்களில் தோல்வி அடைந்ததை பற்றி எதுவுமே பேசவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாத கட்சி கிடையாது என்று முரசொலி தெரிவித்திருக்கிறது.

சாயம் வெளுத்துடுச்சு
முரசொலியில் மேலும் உள்ளதாவது: "மோடியின் பிம்பம் என்ற சாயும் வெளுத்துக் கொண்டிருக்கிறது என்பதையே இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.. குஜராத், இமாச்சலப் பிரதேசத்திற்கு அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் குஜராத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது பாஜக. ஆனால் இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இது குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலியில் எழுதப்பட்டிருக்கும் தலையங்க கட்டுரையில், ஒரே மாதிரியான வெற்றியை இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு வழங்கவில்லை.

வெளுத்த சாயம்
உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜக தோற்றுவிட்டது. சமாஜ்வாடி வெற்றி பெற்றிருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் கதாலி. ராம்பூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் கதாலியில் பாஜக தோற்றுவிட்டது. ராஷ்டிரிய லோக் தளம் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ராம்கூரில் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது. இதுதான் உபியில் உண்மையான நிலவரம்.. ராஜஸ்தானில் சர்தார் சாகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை கண்டு இருக்கிறது. காங்கிரஸ் அங்கே வென்று இருக்கிறது.

மைனஸ் வெற்றி
சத்தீஸ்கர் மாநிலத்தில் பானு பிரதாப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்திருக்கிறது. காங்கிரஸ் அங்கே வென்றிருக்கிறது . ஒடிசாவில் பதம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தோல்வி கண்டிருக்கிறது. பிஜூ ஜனதா தளம் வெற்றி பெற்றிருக்கிறது. பீகாரில் குக்கானி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. நடந்து முடிந்த ஒரே ஒரு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியையும் 6 சட்டமன்ற இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது.

வெளுத்த சாயம்
இந்த முடிவுகள் குறித்து பாஜகவினர் பேசுவதே இல்லை. இவை அனைத்துக்கும் மேலாக டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல பாஜக என்பது இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மோடியின் பிம்பம் என்ற சாயம் வெளுத்துக் கொண்டிருக்கிறது என்பது இவை காட்டுகின்றன. மக்கள் மனதை பிரச்சாரங்களின் மூலமாக மாற்ற முடியும் என்பதையே இவை காட்டுகின்றன. மொத்தத்தில் காலம் மாறும் என்பதையே காட்டுகின்றன" என்றும் முரசொலி காட்டமாக விமர்சித்துள்ளது.
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications