ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு விஜய்யைக் கூட்டணிக்குள் கொண்டு வர என்டிஏ தீவிரமாக முயன்று வருகிறதாம். இதற்காக விஜய்க்கு 80 சீட் மற்றும் துணை முதல்வர் பதவியைக் கொடுக்கக் கூட ரெடியாக இருக்கிறதாம். விஜய்யைக் கூட்டணிக்குள் கொண்டு வர இந்தளவுக்கு பாஜக முயல்வது ஏன்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாடு, கேரளா உட்பட 5 மாநிலங்களில் சீக்கிரமே தேர்தல் நடக்கவுள்ளது. தற்போதுள்ள தமிழக சட்டசபை மே 10ம் தேதியுடன் முடியும் சூழலில், அதற்கு முன்பு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இதன் காரணமாகத் தேர்தலுக்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

விஜய்
இதற்கிடையே வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற்றால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்குத் துணை முதலமைச்சர் பதவியை வழங்க பாஜக முன்வந்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இத்தோடு சுமார் 80 சட்டமன்றத் தொகுதிகளையும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்க பாஜக தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரு தரப்பும் அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றாலும் திரைமறைவில் இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தயக்கம்
விஜய் யோசனை
இருப்பினும், பாஜகவின் ஆஃபரை ஏற்பதில் விஜய்க்கு தயக்கம் இருக்கிறது. முதல்வர் பதவியை நோக்கியே விஜய் செல்லும் சூழலில், இந்த நேரத்தில் கூட்டணி வைப்பது சரியாக இருக்குமா என யோசிக்கிறார். இதுவே பேச்சுவார்த்தைகளில் முக்கிய அம்சமாக நீடிப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொடக்கம் முதலே பாஜகவை கொள்கை எதிரி எனவும் விஜய் சொல்லி வருகிறார். இந்த நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தப்பாகிவிடுமோ என அவர் யோசிக்கிறார்.
அதேநேரம் இந்த கூட்டணி உறுதியானால், தமிழக தேர்தல் கணக்குகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் சிறிய சதவீத வாக்குகள் கூட வெற்றியைத் தீர்மானிக்கும்.
நடிகரும் அரசியல்வாதியும் ஆன விஜய்யைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் கொண்டுவர பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாகவே இந்த பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிரவும் கூட பல வழிகளில் விஜய்யுடன் தொடர்பு கொள்ள பாஜக முயன்று வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யோசிக்கும் பாஜக
தமிழகம் முழுவதும் விஜய்க்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும் சூழலில், பாஜக அவரை எப்படியாவது உள்ளே கொண்டு வந்துவிட வேண்டும் என யோசிக்கிறது. அவரது ரசிகர்களில் ஒரு சிறிய பகுதியினர் கூட தங்கள் பக்கம் வந்தால் அது சட்டமன்றத் தேர்தல்களில் மிக முக்கியமானதாக மாறும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
2 சதவீத வாக்குகள் கூட வெற்றி தோல்வியை முடிவு செய்யலாம் என்று பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள். . தமிழகத்தின் தேர்தல் வரலாற்றில் பலமுறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.. இதனால் மிகச் சிறிய வாக்கு வித்தியாசம் கூட அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன. இதன் காரணமாகவே முடிந்தவரை அனைத்து கட்சிகளையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயல்கிறது.
மறுக்கும் விஜய்
அதேநேரம் விஜய்யின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள சிலர் என்டிஏ கூட்டணி வேண்டாம் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்களாம். கட்சி தொடங்கி இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை. இந்த நேரத்தில் கொள்கை எதிரி எனச் சொல்லும் கட்சி உடனேயே கூட்டணியை அமைப்பது என்பது அரசியல் தளத்தின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் இப்போது அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
-
தவெக தலைவர் வயது 51ஆ, 52ஆ? திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த விஜய்.. பலே -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
விஜய்க்கு ஓட்டு போட மாட்டியா? பெற்றோரின் SIR படிவத்தை வேண்டுமென்றே சமர்பிக்காமல் வைத்த மகன்! -
Election-லிருந்து Escape சரி! 3000000 ரூபாயை எப்போ திருப்பி தருவீங்க கமல்? எதிர்ப்பார்ப்பில் மநீம -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications