’அங்க’ ஏன் போறீங்க..நம்மகிட்ட வாங்க! அதிமுக நிர்வாகிகளை வளைக்கும் ‘தாமரை’! ஓட்டமாய் ஓடும் ர.ர.க்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் இருந்து அதிருப்தி காரணமாக நிர்வாகிகள் சிலர் திமுகவுக்கு தாவியுள்ள நிலையில் மேலும் பலர் செல்ல இருப்பதாகவும், திமுகவுக்கு செல்ல வேண்டாம் பாஜகவுக்கு வந்தால் உரிய மரியாதை கிடைக்கும் என 'முக்கியமான நிர்வாகி' ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அவர்கள் பாஜகவுக்கு செல்ல மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல்வர் ஸ்டாலினின் கோவை பயணம் திமுகவினரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதுவரை காணாத அளவு பிரம்மாண்டம் மிகப் பெரிய அளவில் தொண்டர் படை என மாஸ் காட்டினார் திமுக முக்கிய அமைச்சரான செந்தில் பாலாஜி.

பெயர், தொலைபேசி எண், ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை என 55 ஆயிரம் உறுப்பினர்களை மாற்றுக் கட்சியில் இருந்து திரட்டி திமுகவில் இணைய வைத்த சம்பவம் தான் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறத. இது எப்படி சாத்தியமானது என ஒரு புறம் யூகங்களும் பரபர ஆலோசனைகளும் நடைபெற்று வருகிறது.

 திமுகவில் அதிமுக!

திமுகவில் அதிமுக!

இது ஒருபுறம் இருக்க அதிமுகவில் பரபரப்பான அரசியல்வாதியாக கருதப்பட்ட கோவை கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, தேமுதிக முன்னாள் எம்எல்ஏ தினகரன், பாஜக நிர்வாகிகளை மேடையில் கட்சியில் இணைய வைத்தார் செந்தில் பாலாஜி. ஆறுகுட்டி திமுகவில் இணைவார் என அவரது நெருங்கிய ஆதரவாளர்களே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் ஒரே வாரத்தில் இதனை முடித்துக் காட்டி இருக்கிறார் செந்தில் பாலாஜி. அது மட்டுமல்லாமல் மேலும் பல அதிமுக நிர்வாகிகளும் மாஜிக்களும் விரைவில் திமுகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

அதிமுக நிர்வாகிகள்

அதிமுக நிர்வாகிகள்

அடுத்ததாக நடைபெற இருக்கும் முதல்வரின் சுற்றுப்பயணத்தின் போது மேலும் சில அதிமுக நிர்வாகிகள் திமுகவில் தங்களை இணைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் இபிஎஸ் மோதல் காரணமாக அதிமுகவில் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் தங்களது அரசியல் எதிர்காலம் கருதி பல முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் திமுகவுக்கு சென்று விடலாம் என தனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் கூறி இருக்கின்றனர். இதனை மோப்பம் பிடித்த திமுக தரப்பு அவர்களை தங்கள் தரப்புக்கு இழுக்க வேண்டும் என முயற்சித்ததில் ஓரளவு வெற்றி கிடைத்திருக்கிறது.

கட்சி தாவும் ர.ர.க்கள்

கட்சி தாவும் ர.ர.க்கள்

ஏற்கனவே சேர்ந்த ஆறுகுட்டியை வைத்து மேலும் பல கொங்கு மண்டல அரசியல்வாதிகளை திமுகவுக்கு இழுக்கும் முயற்சியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அதிமுக நிர்வாகிகளை திமுகவுக்கு செல்ல வேண்டாம் பாஜகவுக்கு வந்தால் உரிய மரியாதையும் முக்கியத்துவமும் அளிக்கப்படும் என மூத்த அரசியல்வாதி ஒருவர் நேரடியாகவே அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசியதாகவும் தற்போது இல்லை என்றாலும் வரும் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவு பாஜக வெற்றி பெறும் அப்போது கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய மரியாதையும் பதவிகளும் அளிக்கப்படும் என பேசியுள்ளார்.

பாஜக தோல்வி

பாஜக தோல்வி

ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோவையைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தற்போதைய மாநில அளவிலான பதவியில் இருக்கும் நிர்வாகி ஒருவர் நேரடியாகவே அழைப்பு விடுத்ததாகவும் அதிமுக திமுக எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், கொள்கை ரீதியாக மாறுபட்டது அல்ல. ஆனால் பாஜகவில் கொள்கை ரீதியாக தங்களால் சமரசமாக செல்ல முடியாது என நேரடியாகவே தெரிவித்திருக்கிறார். இதனால் பாஜக தரப்பு அதிருப்தியில் இருந்தாலும் மீண்டும் பேச்சுவார்த்தை படலங்களை தொடங்கி இருக்கிறது. இதனிடைய மதுரை சேலம் கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நிர்வாகிகளை பாஜகவில் இணைக்க வேண்டும் என முயற்சித்தாலும் தற்போது அது கை கூடுவதாக தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+