Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நெருப்பு".. தாஜா செய்யும் திமுக.. ஹிந்துக்கள் ஆதரவை இழக்கிறது.. பொங்கிய வானதி.. திரண்ட திராவிடம்

ஆ ராசா, முதல்வர் ஸ்டாலின் மீது தமிழக பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆ.ராசாவுடன் மீண்டும் ஒருமுறை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளார் பாஜக மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன்.. சர்ச்சை பேச்சு என்பதையும் தாண்டி, திமுகவின் இந்துமத அரசியல் சரியா? இந்து மத வாக்குகள் கிடைக்குமா? என்பன போன்ற பல விவாதங்களை வானதி சீனிவாசனின் பேச்சு, எழுப்பி விட்டுள்ளது.

நிதியமைச்சர் எப்போது பேட்டி தந்தாலும், அவரது கருத்தை முதன்மையாக வந்து எதிர்க்கும் கட்சி பாஜகதான்.. அதிலும் எச்.ராஜாவை போலவே வானதி சீனிவாசன் வலுவான கண்டனத்தை முன்வைப்பார்.

அதேபோல, திமுக மூத்த தலைவரும், எம்பியுமான ஆ ராசாவின் பேச்சுகள் இணையத்தில் வைரலாகும்போதெல்லாம், அதற்கும் முதல்நபராக வந்து கண்டனம் தெரிவித்துவிடுவார் பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசன்.

 தனித்தமிழ்நாடு

தனித்தமிழ்நாடு

அன்று நாமக்கல்லில் நடைபெற்ற திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசியிருந்தது, தேசிய அளவில் பெரும் அதிர்வலையை உருவாக்கியது.. "எல்லா மாநிலங்களையும் சம அளவில் பார்க்கிறோம் என்கிறார் மோடி.. ஆனால் தேசிய ஒருமைப்பாடு ஏற்பட அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேசுகிறார்.. நாங்கள் ஆளுங்கட்சியில் இருக்கிறோம் என்னும் திமிரில் பேசவில்லை. தனி தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு, திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருந்த பெரியார் சாகும் வரை தனி தமிழ்நாடு கேட்டு போராடினார்.

 அமித்ஷா

அமித்ஷா

அதனால், பாஜக அமித்ஷாவுக்கு சொல்கிறேன், இந்திய பிரதமர் மோடிக்கும் சொல்கிறேன்... உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்... இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக் கொண்டே சொல்கிறேன்... அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர்... எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்... மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்" என்றார் ஆவேசமாக.

நெருப்பு

நெருப்பு

இதற்கு வானதி சீனிவாசன், தனி தமிழ்நாடு எந்நாளும் சாத்தியமற்றது என்று திமுகவினர் அறிவர்... ராசாவின் பேச்சை முதல்வர் ஏற்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.. தேவையில்லாமல் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்று காட்டமாக கூறினார்.. அதேபோல, 5-ஜி அலைக்கற்றை ஏலம் முறையாக நடைபெறவில்லை என திமுக எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டியிருந்த நிலையிலும்கூட, நாட்டிற்கு மிகப்பெரிய வருமானத்தை 5-ஜி கொடுத்துள்ளதாக வானதி சீனிவாசன் பதிலளித்தார். அதுமட்டுமல்ல, ஆதாரம் இருந்தால் இதை அவர் நிரூபிக்கலாம். 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்து பேச திமுக ஆ.ராசாவுக்கு தகுதி இல்லை என்றார்.

சூத்திரர்

சூத்திரர்

இன்றும் ஆ.ராசாவின் "விபச்சாரி மகன்" என்ற பேச்சின் சர்ச்சை ஓயவில்லை.. முதல்வர் ஸ்டாலினின் மவுனம் குறித்தும், ஆ.ராசா பேசில், முதல்வரின் கருத்து என்ன என்பது குறித்தும் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார் வானதி சீனிவாசன்.. பிறப்பின் அடிப்படையிலான எந்த வேறுபாட்டையும் தீண்டாமையும் ஆர்எஸ்எஸ்.ஸும், பாஜகவும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்துக்களை மதம் மாற்றி, இந்தியாவை பிளந்து கொண்டிருக்கிறார்கள்.

தாஜா

தாஜா

ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் உருவான நீதிக் கட்சியின் தொடர்ச்சியே திமுக. சிறுபான்மை மதத்தினர் திமுகவின் முக்கிய வாக்கு வங்கியாக இருப்பதால், சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காக, அவ்வப்போது இந்துக்களை சீண்டிக்கொண்டே இருப்பார்கள். அதைத்தான் இப்போது ஆ.ராசா செய்திருக்கிறார்" என்று வானதி கண்டித்துள்ளார். அத்துடன், 2021 தேர்தலில் சிறுபான்மையினர் முழுமையாக திமுக கூட்டணிக்கு வாக்களித்தும், அதிமுக - பாஜக அணியை விட சுமார் 6 சதவீதம் மட்டுமே அதிகம் பெற முடிந்துள்ளது... அதுவும் 10 கட்சிகள் கூட்டணியை வைத்துக் கொண்டும் இதுதான் திமுக நிலை என்றும் தற்போதைய திமுகவின் பலத்தையும் விமர்சித்துள்ளார்.

 இந்துக்களுக்கு குறி

இந்துக்களுக்கு குறி

இது மிகப்பெரிய விவாதத்தை சோஷியல் மீடியாவில் கிளப்பி விட்டுள்ளது.. இந்துக்களுக்கு எதிரி என்பதுபோலவே திமுகவை மக்களிடம் போலியாக சித்தரித்து கொண்டிருக்கிறார்கள் என்று திராவிட தலைவர்கள் கூறி வருகிறார்கள்.. மற்றொருபக்கம், 95 சதவீதம் இந்துக்கள் குறித்து பலமுறை முதல்வர் ஸ்டாலின் ஆதரித்து பேசியும் வந்துள்ள நிலையில், இந்த கருத்து ஏற்றுக் கொள்ளாமலேயே உள்ளது. கருணாநிதி இருந்தபோது, சிறுபான்மையினருக்கு செய்த நன்மைகள் ஏராளம், ஆனாலும் இந்து மத ஆதரவாளர்கள் திமுகவை பழித்து கொண்டே இருக்கிறார்கள்..

இந்துத்துவா

இந்துத்துவா

ஆ.ராசா சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உண்மையைதானே சொன்னார்? இருக்கும் இந்துமத ஆதாரங்களைதானே காட்டினார்? வேண்டுமானால் இதை எதிர்த்து மற்றொரு ஆதாரத்தை இந்துத்துவவாதிகள் காட்ட வேண்டியதுதானே? வெறுமனே வார்த்தைகளில் பழிப்பதால் மட்டும் உண்மை மாறிவிடாது என்று கருத்துக்களை பதிவிடுகிறார்கள் திமுக தரப்பில்..

கிழிசல்

கிழிசல்

ஆனால் பாஜக தரப்பிலோ, தேர்தல் சமயத்தில் மட்டும் சிறுபான்மையினரை தாஜா செய்து, வாக்கு அரசியலை கையில் எடுக்கும் திமுக, மற்ற நேரங்களில் அவர்களின் தலையில் ஏறி மிதித்து அவமானப்படுத்துகிறது.. திமுகவின் இந்த முகத்திரையைதான் நாங்கள் கிழிக்கிறோம்.. 2021 தேர்தல் புள்ளி விவரங்களே இதற்கு உதாரணமாக இருக்கிறதே.. இதைதான் தந்திர அரசியல் என்கிறோம் என்று காட்டமான கருத்துக்களை பதிவு செய்கிறார்கள் பாஜக தரப்பில். இப்படி இரு தரப்பிலுமே கருத்துக்கள் மாறி மாறி வெடித்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+