நயன்-விக்கி மட்டுமல்ல! வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற சினிமா பிரபலங்கள் யார் யார்? நீளும் பட்டியல்!
சென்னை : நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது தற்போது பேசு பொருளாக மாறி இருக்கும் நிலையில் இதற்கு முன் பல சினிமா பிரபலங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று வளர்த்தெடுத்து வருகின்றனர். இந்த பட்டியலில் ஷாருக்கான் முதல் பிரீத்தா ஜிந்தா என இந்திய பாலிவுட் பிரபலங்களை அதிகம் இடம் பெற்றுள்ளனர்.

1/8.சன்னி லியோன் - டேனியல் வைபர்
பாலிவுட் மட்டுமல்லாது உலகம் முழுவதும் தனது கவர்ச்சியான நடிப்பால் பிரபலமான சன்னி லியோன் - டேனியல் வைபர் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர். ஆஷர் நோவா என்ற இரட்டை ஆண் குழந்தைகள் அவர்களுக்கு பிறந்தன.

2/8.ஷாருக் கான் - கவுரி கான்
இந்தியாவின் சூப்பர் ஸ்டாரில் ஒருவரான ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான் கடந்த 2013 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர். ஷாருக்கானின் இளைய மகனான அப்ரான் கான் தான் வாடகை தாய் மூலம் பிறந்த இரண்டாவது குழந்தை

3/8.அமீர் கான் - கிரண் ராவ்
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் பாலிவுட் நட்சத்திரமான அமீர்கான். இவரது மனைவி கிரண் ராவ். இவர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆஷாத் ராவ் கான் என்கிற மகனை வாடகை தாய் மூலம் பெற்று எடுத்தனர். இந்திய துறையுலகில் முதன் முறையாக வாடகைத்தாய் முறையை அறிமுகம் செய்து வைத்தவர்களும் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

4/8. ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் பாலிவுட் நடிகையும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மூலம் கிரிக்கெட் உலகிலும் தடம் படித்தவருமான ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்திரா தம்பதியினர். முதல் குழந்தையை ஷில்பா ஷெட்டியே பெற்ற நிலையில் இரண்டாவது குழந்தையை ஷமிஷா என்ற மகளை வாடகைத்தாய் மூலம் பெற்றுக் கொண்டனர்.

5/8. ப்ரீத்தி ஜிந்தா - ஜீன் குட் இனாஃப்
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பாலிவுட் பிரபலங்கள் பட்டியலில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா கடந்த 2021 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டார். குட் எனாஃப் மற்றும் கியா ஜிந்தா குட் எனாஃப் என்பது அந்த குழந்தைகளின் பெயர்.

6/8. பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ்
தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா பின்னர் பாலிவுட் படங்களில் கலக்கி வருகிறார். ஹாலிவுட் வரை சென்ற அவர் பாப் பாடகரான நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களும் சில மாதங்களுக்கு முன்னர் மல்டி மேரி என்கிற குழந்தையை வாடகைத்தாய் முறை மூலம் பெற்றுக் கொண்டனர்.

7/8.கரண் ஜோஹர்
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட பாலிவுட் பிரபலமான கரன் ஜோகர் 2017 ஆம் ஆண்டு வாடகை தாயின் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார்.

8/8.நயன் - விக்கி
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக இந்த பட்டியலில் இணைந்து இருப்பவர்கள் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர். இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. நீண்ட காலமாக காதலித்து வந்து அவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பிறகு குழந்தை பெற்றுக் கொண்டுள்ளதாக தற்போது விளக்கம் அளித்து இருக்கின்றனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications