ஆக.22-ல் சென்னை தினம்: ஓவியம், போட்டோ, ஷார்ட் பிலிம் போட்டிகளை கனஜோராக நடத்துகிறது சென்னை மாநகராட்சி
சென்னை : சென்னை தினம் ஆகஸ்ட் 22-ந் தேதி கொண்டாட உள்ள நிலையில், ஓவியம், புகைப்படம், குறும்படம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு, மாநகராட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகர தினம் ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கொண்டாட்டத்திற்கு, ஓவியம், புகைப்படம், குறும்படம் உள்ளிட்ட போட்டிகள் மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : கடந்த 1639-ம் ஆண்டு மெட்ராசாக உருவான சென்னை, சிங்காரச் சென்னையாக பிரமாண்டமாக வளர்ந்து, அனைவரது மனதிலும் உணர்வுப் பூர்வமான இடத்தை பிடித்துள்ளது. சென்னை பிறந்த தினமான, ஆகஸ்டு 22-ந்தேதியை கொண்டாட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக ஓவியம், புகைப்படம், குறும்படம் மற்றும் "சோசியல் மீடியா ரீல்ஸ்" போட்டிகள் நடத்தபடுகின்றன. ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்கள், தேசிய கொடியை தலைப்பாக வைத்து, தங்கள் படைப்பாற்றலை வெளிக்கெண்டு வரும் வகையில், ஓவியம் வரைந்து அனுப்பலாம்.
புகைப்படப் போட்டியில் பங்கேற்பவர்கள் சென்னையின் கலாசாரம், பாரம்பரியம் ஆகிய தலைப்பில் புகைப்படம் எடுத்து அனுப்பலாம். சிறந்த புகைப்படங்கள், மாநகராட்சியின் சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்படும்.

"சோசியல் மீடியா ரீல்ஸ்" போட்டியில் பங்கேற்பவர்கள், சென்னையின் கலாசாரம், பாரம்பரியம் ஆகிய தலைப்பில் 'சோசியல் மீடியா ரீல்ஸ்' அனுப்பலாம். சிறந்த 'ரீல்ஸ்'க்கு பரிசு உண்டு. மாநகராட்சி 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் இவை வெளியிடப்படும்.
குறும்படப் போட்டியில் கலந்துகொள்பவர்கள், 'சென்னை' என்ற தலைப்பில் குறும்படம் எடுத்து அனுப்பலாம். சிறந்த குறும்படங்கள், சென்னை தின வலைதளம் மற்றும் மாநகராட்சி ஊடக பக்கத்தில் வெளியிடப்படும். மேலும் ஏழை எளிய மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை அழகுபடுத்தி மறுவடிமைப்பு செய்யும் வகையில், திட்ட வடிவமைப்புகளை தயார் செய்து அனுப்பலாம்.
போட்டியாளர்கள் தங்கள் படைப்புகளை, shorturl.at/dlU89 என்ற இணைய தளத்தில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டிகள் குறித்த அறிவிப்புகளுக்கு, GCC Twitter, Facebook@chennaicorp/Greater Chennai Corporation பக்கங்களை பின் தொடரலாம் என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications