சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தது தென்மேற்கு பருவ மழை.. கைகொடுத்த மக்கள்.. ஒரே மாதத்தில் சென்னையில் நடந்த சூப்பரான விஷயம்

Google Oneindia Tamil News

சென்னை: தென்மேற்கு பருவமழையால் கிடைக்கும் மழை நீரை அப்படியே சேமிக்க வேண்டும் என்று மக்கள் பேராவல் காரணமாக சென்னையில் நல்லதொரு நிகழ்வு நடந்துள்ளது. மக்களின் முயற்சியால் சென்னையில் 15 இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் சென்னையில் சுமார் 6 மாதங்கள் சுத்தமாக மழை பெய்யவில்லை இதனால் சென்னையைச் சுற்றிய ஏரி மற்றும் குளங்கள் நீர் இல்லாமல் வறண்டு போனது. இதனால் கடந்த தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக காணப்பட்டது. நிலத்தடி நீரும் வற்றிப்போனதால் மக்கள் செய்வதறியது தவித்தனர்.

இதனால் கல்குட்டை நீரையும், விவசாய கிணறு நீரையும் சுத்தப்படுத்தி சென்னை மக்களுக்க அரசு விநியோகித்து சமாளித்தது. தென்மேற்கு பருவமழை வழக்கமாக 23 செ.மீ பெய்யும் நிலையில் தற்போது 26 செ.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 12 சதவீதம் அதிகம் ஆகும். இந்த மழை நீரை சென்னை மக்கள் பலரும் சேமிக்க ஆரவம் காட்டியதலோ என்னவோ, நிலத்தடி நீர் மட்டம் சென்னையில் உயர தொடங்கியது.

வளசரவாக்கத்திலும் உயர்வு

வளசரவாக்கத்திலும் உயர்வு

சென்னை குடிநீர் வடிகால் வாரியம் ஆய்வு மேற்கொண்டதில், சோழிங்கநல்லூரில் 21 அடியாக கீழ் சென்ற நீர்மட்டம் தற்போது 18 அடியாக உயர்ந்துள்ளது. இதன் போல் பெருங்குடியில் ஜுன் மாதம் 28 அடியில் இருந்து 24 அடியாகும் அடையாரில் 25 அடியில் இருந்து 24 அடியாகவும், ஆலந்தூரில் 31 அடியில் இருநது 29 அடியாகும், வளரசவாக்கத்தில் 25 அடியில் இருந்து 23 அடியாகவும் உயர்ந்துள்ளது.

அண்ணா நகரில் சிறப்பு

அண்ணா நகரில் சிறப்பு

கோடம்பாக்கத்தில் ஜூன் மாதம் 27 அடியில் இருந்து 28 அடியாக கீழே சென்று விட்டது. எனினும் தேனாம்பேட்டையில் ஜூன் மாதம் 25 அடியில் இருந்த நீர் ஜூலை மாதம் 23 அடியாகும், அண்ணா நகரில் 26 அடியில் இருந்து 22 அடியாகவும், அம்பத்தூரில் 35 அடியில் இருந்து 32 அடியாகவும், திருவிக நகரில் 29 அடியில் இருந்து 27 அடியாகவும் உயர்ந்துள்ளது.

ஜூலையில் உயர்ந்தது

ஜூலையில் உயர்ந்தது

ராயபுரத்தில் ஜூன் மாதம் 27 அடியாக கீழ்சென்ற நிலத்தடி நீர்மட்டம் ஜூலை மாதம் 26 அடியாகவும் தண்டையாளர் பேட்டையில் 27 அடியாக இருந்த நீர்மட்டம் 24 அடியாகவும், மாதவரத்தில் 24 அடியில் இருந்த நீர்மட்டம் 23 அடியாகவும், உயர்ந்துள்ளது. இதேபோல் மணலி மற்றும் திருவெற்றியூரிலும் ஜூன் மாதத்தை விட ஜூலையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மழைநீர் சேகரிப்பு

மழைநீர் சேகரிப்பு

அனைவரும் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி நிலத்தடி நீரை சேமித்தால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத சூழல் உருவாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

English summary
chennai ground water level increased with in month after people using rain water harvesting management system by south west monsoon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X