“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மே 31 ஆம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது. அவ்வாறு அமல்படுத்தத் தவறினால், அதன்பின் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் வீதம் சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடாக டாஸ்மாக் நிர்வாகத்திடமிருந்து வசூலிக்க உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. அதன்படி, பத்து ரூபாய் கூடுதலாக கொடுத்து மதுபான பாட்டில் வாங்கிவிட்டு, காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம் ஏற்கனவே நீலகிரி, கோவை, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், தருமபுரி, தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காலி மதுபான பாட்டில்களை வீசப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த, சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 28 மாவட்டங்களில் இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்று, ஒரு மாத அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, மதுபாட்டில்களுக்கு QR கோடு பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அந்த பணிகள் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால், காலி பாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரத்தில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் சுமை இருக்காது என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், முழுமையாக அமல்படுத்த இயலவில்லை என்றும், தற்போது 29 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மாவட்டங்களில் அமல்படுத்த கடைசி வாய்ப்பாக மே மாத இறுதி வரை அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஒரு மாத அவகாசம் வழங்கியும், மீதமுள்ள மாவட்டங்களில் திட்டத்தை அமல்படுத்துவதில் என்ன பிரச்சனை உள்ளது என, அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, பணியாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். தினமும் 2 கோடி மது பாட்டில்களில் விற்கப்படுவதை சுட்டிக்காட்டி, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த மே 31ஆம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அவ்வாறு அமல்படுத்தத் தவறினால், அதன்பின் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் வீதம் சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடாக டாஸ்மாக் நிர்வாகத்திடமிருந்து வசூலிக்க உத்தரவிடப்படும் என எச்சரித்தனர்.
மேலும் காலி பாட்டில்களை சேகரிக்கும் போது, மூட்டை மூட்டையாக கட்டிப்போடுவதால், அவற்றில் சில உடைந்து சேதமாவதாகக் கூறிய நீதிபதிகள், காலி பாட்டில்களை முறையாக கையாளும்படி உரிய அறிவுறுத்தல்களை வழங்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications