ஊர் விட்டு ஊர் சென்று.. வாலாட்டிய "சென்னை கேங்க் லீடர்".. துவைத்து தூர்வாரிய "ஆந்திரா கேங்ஸ்டர்ஸ்"
சென்னை: ஆந்திராவுக்கு சென்று மாஸ் காட்டிய சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரை அடித்து துவைத்த அங்குள்ள ரவுடிகள், அவரை ரத்தக்கோரையுடன் ரயிலில் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரலில் உடம்பெல்லாம் ரத்தத்துடன் குத்துயிரும் கொலை உயிருமாக வந்திறங்கிய அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் ஆந்திராவில் என்ன நடந்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல ரவுடி..
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சதீஷ் (28). அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக இவர் வலம் வந்தார். இவர் மீது பல கொலை, ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் அங்குள்ள காவல் நிலையங்களில் உள்ளன. வட சென்னையை சேர்ந்த ஒரு பெரிய ரவுடியின் கேங்கில் இருப்பதால் இவருக்கு அந்தப் பகுதியில் நல்ல செல்வாக்கு இருந்துள்ளது. இதை பயன்படுத்தி பல கட்டப்பஞ்சாயத்துகளையும் சதீஷ் செய்து வந்துள்ளார்.

கொலை வழக்கில் தலைமறைவு..
இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராயபுரத்தில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவத்தில் சதீஷ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சதீஷ் தலைமறைவானார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் வட சென்னை பகுதிகளில் உள்ள தனது உறவினர்கள் வீடுகளில் தங்கி வந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. எனினும், போலீஸார் அவரை பிடிக்கவில்லை.

பிரித்து மேய்ந்த ஆந்திரா ரவுடிகள்..
இந்நிலையில், ரவடி சதீஷின் நண்பர் ஒருவர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இறந்து போனார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சதீஷ் நெல்லூருக்கு கடந்த வாரம் சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் உள்ளவர்களை மிரட்டுவது; தாக்குவது போன்ற அடாவடி நடவடிக்கையில் சதீஷ் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள், சதீஷை தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது சதீஷ் அவர்களை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆந்திரா ரவுடிகள், சதீஷை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அலறிய சென்ட்ரல்..
மேலும் சதீஷின் முகம், கழுத்து, நெஞ்சு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியாலும், பிளேடுகளாலும் அவர்கள் அறுத்துள்ளனர். பின்னர் ரத்தம் வழிய வழிய அவரை சென்னைக்கு செல்லும் ரயிலில் ஆந்திரா ரவுடிகள் தூக்கிப் போட்டுள்ளனர். இந்நிலையில், தலை முதல் கால் வரை உடல் முழுக்க ரத்தக்கோரையுடன் சென்னை சென்ட்ரலுக்கு வந்து இறங்கிய சதீஷை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், அங்கு வந்து பார்த்த போது அவர் பிரபல ரவுடி சதீஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். சென்னையை போலவே ஆந்திராவிலும் ரவுடியாக ஃபார்ம் ஆக நினைத்து, கந்தல் கோலமாக வந்த ரவடி சதீஷ்தான் இன்று வட சென்னையில் 'ஹாட் டாப்பிக்' ஆக மாறியுள்ளார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications