எதிர்க்கட்சிகளின் கிண்டலுக்குள்ளான சென்னை 'ரோடு ஷோ'.. அதிருப்தியில் மோடி?
சென்னை: லோக்சபா தேர்தலுக்காக பிரதமர் மோடி சென்னையில் நடத்திய ரோடு ஷோவில் கூட்டம் சேராததால் திட்டமிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே முடிக்கப்பட்டது. இதனால் மோடியின் ரோடு ஷோ பெரும் கிண்டலுக்குள்ளாகிவிட்டது. இது தொடர்பான தகவல்களால் தமிழ்நாடு பாஜக மீது பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் அதி உச்சத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 6 முறை தேர்தல் பிரசாரம் செய்ய வருகை தந்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்டோரும் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பல்வேறு பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார். கோவையில் வட இந்திய பாணியில் ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தினார். கோவையில் ரோடு ஷோ வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து தலைநகர் சென்னையில் ரோடு ஷோ நடத்தி பலத்தை காட்டுவோம் என திட்டமிட்டது தமிழ்நாடு பாஜக. இதற்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடத்தப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை சிக்னல் தொடங்கி பாண்டி பஜார் வரையிலான இந்த ரோடு ஷோ 1 மணிநேரம் நடத்தப்பட திட்டமிட்டிருந்தனர். போலீசாரும் இதற்கு அனுமதித்தனர். பாஜகவினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் ரோடு ஷோ வெறும் 40 நிமிடத்திலேயே முடிந்தது. பாஜகவினர் எதிர்பார்த்தபடி கூட்டம் கூட்ட முடியாததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டதாம்.
தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டுக்கு டூர் போன மோடி, தேர்தல் வந்துவிட்டதால் உள்நாட்டில் டூர் செல்கிறார். சென்னையில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோ ஃப்ளாப் ஷோ என்றெல்லாம் சாடி இருந்தார். சமூக வலைதளங்களிலும் மோடியின் ரோடு ஷோ விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கிறது.
சென்னை ரோடு ஷோ குறித்த உளவுத் துறை தகவல்களைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர்களிடம் தமது கடுமையான அதிருப்தியை கோபக் குரலில் வெளிப்படுத்தினாராம். இனி வரும் பொதுக் கூட்டங்களில் என்ன செய்தாலும் கூட்டத்தைக் கூட்டிக் காட்ட வேண்டும் என கறார் உத்தரவையும் பிறப்பித்துள்ளாராம் பிரதமர் மோடி.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications