ரூ 60 ஆயிரத்தால் வந்த வினை! கணவர் அடித்ததால் ரூமில் கதவை தாழிட்ட பெண் போலீஸ்! விடிந்ததும் அதிர்ச்சி!
சென்னை: சென்னையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் போலீஸ் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக தாயார் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (29). சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் சிலம்பரசன் (32).

இவர் ஆவடி சிறப்பு காவல் படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் எழும்பூர் காவல் நிலையம் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
திருமணத்திற்கு முன்பு புவனேஸ்வரி தனக்கு தெரிந்த ஒருவருக்கு ரூ 60 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அந்த கடனை அந்த நபர் கட்டாததால் தனது சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் பணம் எடுத்ததாக தெரிகிறது.
இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சிலம்பரசன், "யாரோ வாங்கிய கடனுக்கு நீ ஏன் இஎம்ஐ கட்ட வேண்டும்" என மனைவி புவனேஸ்வரியிடம் கேட்டு வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
அப்போது வாய்தகராறு முற்றியதில் புவனேஸ்வரியை சிலம்பரசன் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் மனமுடைந்த புவனேஸ்வரி கோபித்துக் கொண்டு தனது அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாராம்.
போதையில் இருந்த சிலம்பரசன், மனைவி தாழிட்டுக் கொண்டதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஹாலில் படுத்து தூங்கிவிட்டாராம். இந்த நிலையில் நேற்று காலை விடிந்தும் மனைவி வெளியே வராததால், கதவை தட்டியுள்ளார்.
அவர் திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக பார்த்த போது புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புவனேஸ்வரியின் தாய் அன்புக்கரசி, எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "திருமணமான நாளில் இருந்தே சிலம்பரசன், எனது மகளை கொடுமைப்படுத்தி வந்தார்.
அவர் தினமும் குடித்துவிட்டு என் மகளை அடித்தார். என் கண் முன்பே நிறைய முறை மகளை அடித்துள்ளார். அது போல் வரதட்சிணை வாங்கி வருமாறு கேட்டும் மகளை கொடுமை செய்தார். என் மகளிடம் ரூ 2 லட்சம் கேட்டு துன்புறுத்தியதாக எனக்கு போனில் தெரிவித்தார்.
நான் எதற்காக 2 லட்சம் என கேட்ட போது, நிலம் வாங்குவதற்காக கேட்கிறார் என என் மகள் அழுது கொண்டே சொன்னார். நானும் ஆறுதல் கூறினேன். ஆனால் என் மகள் இரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக எனக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து தகவல் கிடைத்தது.
அதிலும் என் மகள் உள்ளாடைகளுடன் தொங்கியதாக தெரிவித்தனர். இதனால் எனது மகள் சாவில் சந்தேகம் இருக்கிறது. சிலம்பரசனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
-
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications