’கவசம்’ முத்துராமலிங்கத் தேவரை வைத்து உருவான பஞ்சாயத்து! நேரடியாக மோதும் ஓபிஎஸ்-இபிஎஸ்! பரபர அதிமுக!
சென்னை : அதிமுகவில் அதிகாரத்தை கைப்பற்றப் போவது யார் என்ற என்ற போட்டி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் தற்போது அதிமுகவில் முத்துராமலிங்க தேவரை மையமாக வைத்து புது வகையான மோதல் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இதில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது.
சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்த பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பாளர் பதவியும் பறிக்கப்பட்ட நிலையில், கட்சியிலிருந்தே ஓபிஎஸ் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து சிறு இடைவெளிக்குப் பிறகு தனது தரப்பில் ஏற்கனவே பொருளாளராக இருந்தவரும், மூத்த முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசனை புதிய அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதிமுக பொருளாளர்
அதே நேரத்தில் தான் பொருளாளராக தொடர்வதாக ஓ.பன்னீர் செல்வம் கூறிய, நிலையில் அதிமுக வங்கி கணக்குகள் உள்ள கரூர் வைஸ்யா, இந்தியன் வங்கி மேலாளர்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், 'அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் வரவு-செலவு கணக்குகளை இனி திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார்' என கடிதத்தில் எடப்பாடி கூறி இருந்தார்.

மீண்டும் மோதல்
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக வங்கிகளுக்கு பதில் கடிதம் அனுப்பினார். அதன்படி கரூர் வைஸ்யா மற்றும் இந்தியன் வங்கி மேலாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், 'அதிமுக வரவு-செலவு கணக்கை தன்னை கேட்காமல் மேற்கொள்ளக் கூடாது என கடும் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்புகளால் இந்த விவகாரம் சில காலம் ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பொருளாளர் பதவி அதிகாரம் யாருக்கு என்ற மோதல் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு முந்திக் கொண்டு வங்கியை அணுகி இருக்கிறது.

தேவரின் தங்க கவசம்
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் 2014-ம் ஆண்டு ஜெயலலிதா தங்க கவசம் அணிவித்தார். இந்த தங்க கவசம் தற்போது பேங்க் ஆப் இந்தியாவின் பாதுகாப்பில் உள்ளது. 13 கிலோ எடை கொண்ட இந்த தங்கக் கவசம் அதிமுகவின் பொறுப்பில் மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வைத்திருக்கவும், ஒவ்வொரு ஆண்டு ஜெயந்தி விழாவின் போது, அதிமுக பொருளாளர் மூலமா விழாக் குழுவினரிடம் ஒப்படைக்கவும் ஜெயலலிதா வழிவகை செய்திருந்தார். இந்நிலையில் தான் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு முந்திக் கொண்டுள்ளது.

திண்டுக்கல் சீனிவாசன்
கடந்த வாரம் மதுரை அண்ணாநகர் வங்கி நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வ கடிதம் வழங்கியதோடு, தான் தான் அதிமுக பொருளாளர் என முத்துராமலிங்கத்தேவர் தங்க கவசம் பெற உரிமை கோரினார் திண்டுக்கல் சீனிவாசன். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வங்கிக்கு நேரில் சென்ற அவர் தேவர் தங்க கவசத்திற்கு உரிமை கோருவதற்கான அலுவல் நடைமுறை மேற்கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக உடன் முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

ஓபிஎஸ் தீவிரம்
ஏற்கனவே அதிமுகவின் பொருளாளர் தான் எனக் கூறிவரும் ஓ.பன்னீர்செல்வமும் முத்துராமலிங்கத் தேவரின் கவசத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே ரிசர்வ் வங்கி வரை தான் பொருளாளர் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வரும் நிலையில் தற்போது முத்துராமலிங்கத் தேவர் கவச விவகாரத்திலும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது என மிக தீவிரமாக இருக்கின்றனர். இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது விழாவுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் வேறு ஏதேனும் வழி இருக்கிறதா எனவும் ஆராயப்பட்டு வருகிறது.

மாற்று வழி என்ன?
கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக விவகாரம் தொடர்பாக பிரச்சனை எழுந்த போது தங்க கவசத்தை மாவட்ட ஆட்சியர் பெற்று குருபூஜை விழா முடிந்த பிறகு மீண்டும் வங்கியில் ஒப்படைத்தார். தற்போது அதேபோல எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கும் நிலையில் கடந்த ஆண்டுகளைப் போல மாவட்ட ஆட்சியர் தங்க கவசத்தை பெற்று விழா முடிந்த பின் வங்கியில் ஒப்படைக்கலாம் எனக் கூறப்படுகிறது. எது எப்படி எனினும் தேவர் கவச விவகாரத்தில் விட்டுக் கொடுத்து விடக்கூடாது என இரு தரப்பினரும் உறுதியாக இருப்பதால் அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
-
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications