Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பார்ரா.. யாருன்னு தெரியுதா.. கோட் சூட்டில் ஜம்முன்னு இருக்காரே.. நம்ம எடப்பாடியாரா இது!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Watch Video : TN CM Edapadi palanisamy wears Suit in his foreign Trip

    சென்னை: கோட் சூட்டில் ஜம்முன்னு இருக்காரே.. யார்னு தெரியுதா.. நம்ம முதல்வரேதான்.. லண்டனில் புது கெட்டப்பில் கலக்கி வருகிறார்!

    பதவி ஏற்றது முதலே தான் ஒரு விவசாயி என்பதை ஆணித்தரமாக சொல்லி வருபவர்தான் எடப்பாடி பழனிசாமி. எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் சரி, யாருடைய கல்யாணத்துக்கு போனாலும் சரி.. "நானும் விவசாயிதான். இன்று வரை விவசாயம் செய்து வருகிறேன்" என்பதை மறக்காமல் பதிவு செய்துவிட்டு வருவார் எடப்பாடி பழனிசாமி.

    அதனால் ஒரு விவசாயி என்ற பிம்பமே எடப்பாடியார் மீது நமக்கு விழுந்து விட்டது. அது மட்டுமில்லை.. இவர் மிக மிக எளிமையான முதல்வரும்கூட!

    மாநாடு

    மாநாடு

    உண்மையிலேயே, எடப்பாடி பழனிசாமி, ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்தான். நேற்றுகூட வெளிநாடு செல்வதற்கு முன்பு, "தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன். நான் பெரிய தொழிலதிபர் இல்லை. சாதாரண விவசாயி" என்று சொல்லிவிட்டுதான் பிளைட் ஏறினார்.

    கோட்-சூட்

    கோட்-சூட்

    ஆனால் லண்டனில் கால் வைத்தவுடனேயே உஜாலுக்கு மாறிவிட்டார் முதல்வர். கோட்-சூட் போட்டு ஆளே அடையாளம் தெரியவில்லை. அந்த போட்டோதான் இப்போது வைரலாகி வருகிறது. எப்பவுமே எடப்பாடியாரின் நெற்றியில் விபூதி பளிச்சென காணப்படும். அதுவும் இப்போது மிஸ்ஸிங்.

    தனிநபர் உரிமை

    தனிநபர் உரிமை

    பொதுவாக, வெளிநாட்டுக்கு திமுக, அதிமுக, விசிக, மதிமுக என எந்த கட்சி தலைவர்கள் போனாலும்சரி, தங்கியிருக்கும் நாட்கள் வரை, அந்த நாட்டுக்கு ஏற்றவாறு தங்கது உடைகளை மாற்றி கொள்வது இயல்பு. அது தவறு என்றும் சொல்லிவிட முடியாது. இது தனிநபர் உரிமையும்கூட.

    வித்தியாசம்

    வித்தியாசம்

    அந்த வகையில் எடப்பாடியாரும் மாறி உள்ளார். (ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் ஜப்பானுக்கு சென்றபோது, வேட்டி-சட்டையுடனே அந்த நாட்டில் நடமாடினார்) வழக்கமாக, எடப்பாடியாரை ஒயிட் & ஒயிட் வெள்ளை வேட்டி, விபூதி என பார்த்து பார்த்து பழகிய நமக்கு இப்போது கோட்-சூட்டில் பார்க்க வித்தியாசமாக உள்ளது.

    ஜம்முன்னு இருக்கு

    ஜம்முன்னு இருக்கு

    தமிழ்நாட்டில் கோட்-சூட் போட்ட முதல்வர்களை பார்ப்பதே அரிதானது. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்ப்பது நன்றாகத்தான் இருக்கிறது. கண்ணுபடப் போகுதய்யா.. என்றுதான் பாடத் தோன்றுகிறது படத்தைப் பார்த்தால்.!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+