நான் மிக மிக மிக மிக முக்கியத்துவம் கொடுக்கும் துறை இது தான்! பள்ளிநாட்கள் பற்றி சிலாகித்த முதல்வர்!
சென்னை: பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு கொடுத்து வரும் முக்கியத்துவத்திற்கு எத்தனை மிக மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நம் பள்ளி நம் பெருமை பள்ளி மேலாண்மை குழுவை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனைக் கூறியுள்ளார்.
அந்த விழாவில் முதல்வர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

பள்ளிப் பருவம்
பள்ளிப் பருவம் என்பது திரும்பக் கிடைக்காத ஒரு மகிழ்ச்சியான காலம். அத்தகைய பள்ளிப் பருவத்தில் இருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை, என்னுடைய பாராட்டுக்களை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு மகிழ்ச்சியைச் சொல்கிறபோது, வாழ்த்துகளைச் சொல்கிறபோது ஒரு ஏக்கத்தோடு அந்த வாழ்த்தை நான் சொல்கிறேன். ஏக்கத்தோடு அந்த வாழ்த்தைச் சொல்வதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்களானால், இத்தகைய மகிழ்ச்சியும், மன நிறைவும், கொண்டாட்டமும் வேறு எந்தப் பருவத்திலும் யாருக்கும் கிடைக்காத பருவம் இந்தப் பருவம். இத்தகைய பள்ளிப் பருவ காலத்தை நீங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்வி அறிவு
ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். உங்களிடம் இருந்து யாராலும் அதை பறிக்க முடியாது, திருட முடியாத ஒரு சொத்து இருக்கு என்றால், அது உங்களது கல்வி மட்டும்தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதனால்தான் பள்ளிக் கல்விக்கு இந்த அரசு மிகமிக முக்கியத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது, எத்தனை மிக மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். அந்த அளவிற்கு, கல்விக்காக இந்த அரசு மிக மிக மிக முக்கியத்துவத்தை தொடர்ந்து கொடுத்து வருகிறது.

கல்வி நீரோடை
மாணவர்கள் - ஆசிரியர்கள் - பெற்றோர் ஆகிய மூவரது சிந்தனையும் ஒரே நேர்கோட்டில் இருந்தால்தான், கல்வி நீரோடை மிக சீராகச் செல்லும். அதில் எவர் ஒருவர் தடங்கல் போட்டாலும் கல்வியானது தடம் புரண்டுவிடும். உங்கள் குழந்தைகள் என்னவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களுக்குத் நீங்கள் தடை போடாமல், அவர்களுக்கு உதவி செய்யுங்கள், வழிகாட்டுங்கள். உங்கள் கனவுகளை தயவு செய்து அவர்கள் மீது திணிக்காதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

மாணவச் செல்வங்கள்
பெற்றோராக இருந்தாலும் ஆசிரியர்களாக இருந்தாலும், பள்ளிகளாக இருந்தாலும் மாணவச் செல்வங்களை வளர்த்தெடுப்பததை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். 'புத்தகங்களே! குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்'' என்று நமது கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் எழுதியிருக்கிறார். இதை மனதில் வைத்துக்கொண்டு அனைவபரும் செயல்பட வேண்டும்.

தரமான கல்வி
குழந்தைகளின் கல்வி என்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளம். அவர்களுக்கு அளிக்கப்படும் தரமான கல்விதான் சமுதாய முன்னேற்றத்தின் திறவுகோல். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதுதான் நமது அரசினுடைய நோக்கம், குறிக்கோள், இலட்சியம். பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் இந்திய துணைக்கண்டத்திற்கே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

கல்வியின் முக்கியத்துவம்
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.36 ஆயிரத்து 895 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அரசுப் பள்ளிகளை முழுமையாக மேம்படுத்துவதற்காக பள்ளி மேலாண்மைக் குழுக்களை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளைப் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

பள்ளியின் தேவைகள்
பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோர் இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம் பெறுவார்கள். ஒவ்வொரு அரசுப் பள்ளியையும் தன்னிறைவு பெற்ற பள்ளியாக மாற வேண்டும். அந்தப் பள்ளியின் தேவைகள் என்ன என்று அறிந்து அதை வழங்க வேண்டும்.

எதற்காக குழு
குழந்தைகளுக்குத் தரமான, சமமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும், அதற்குரிய நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். இதனைச் செயல்படுத்துவதற்காகத் தான் பள்ளி மேலாண்மைக் குழுவை நாம் இப்போது அமைத்திருக்கிறோம்.
- குழந்தைகளின் கற்றல் அடைவை மேம்பாடு அடையச் செய்தல்
- பள்ளி வளங்களைப் பராமரித்தல்
- பள்ளியின் சுற்றுப்புற சூழலைத் தூய்மையாக்குதல்
- இடைநிற்றலை தவிர்த்தல் மற்றும் இடைநின்ற குழந்தைகளை வயதுக்கேற்ற வகுப்பில் மீண்டும் பள்ளியில் சேர்த்தல்
- பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குதல், போன்ற செயல்பாடுகளில் புதிய மேலாண்மைக் குழுக்கள் ஆக்கப்பூர்வமாக செயலாற்ற வேண்டும்.

37,558 அரசுப் பள்ளிகள்
20.03.2022 அன்று 37,558 அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டங்களில், மொத்தம் 23 இலட்சத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியினுடைய வரலாற்றில் இது முக்கியமான மைல்கல் ஆக அமைந்திருக்கிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் ஒருசேர இதுபோல் பங்கேற்றது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நம் பள்ளி
நம் பள்ளி! நம் பெருமை என ஆனால்தான் நம் நாடு, நம் பெருமை என ஆகும் என்பதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு, உங்கள் அனைவருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளை, நன்றியைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications