சபாஷ்... பிக் பாஸ் 2 புகழ் நித்யா, மகள் போஷிகாவுடன் சேர்ந்து செய்த செயல்...!
நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவும், அவரது மகள் போஷிகாவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தங்களுடைய முடியை தானமாக அளித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவும், அவரது மகள் போஷிகாவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தங்களுடைய முடியை தானமாக அளித்துள்ளது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
வாலி உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் காமெடியனாக நடித்தவர் தாடி பாலாஜி. சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவராக அவர் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் அவரது மனைவி நித்யாவும் கலந்து கொண்டார்.

கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த மனக்கசப்பு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மாறியது. ஒரு சில வாரங்களே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோதும், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தார் நித்யா. தினமும் காலையில் குட்மார்னிங் சொன்னது மூலம் அவரது மகள் போஷிகாவும் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, அவரது சமூகவலைதளப் பக்கங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமூகவலைதளப் பக்கங்களில் நித்யா வெளியிடும் பதிவுகள் மக்களால் அதிகம் கவனிக்கப்படுகிறது.
View this post on InstagramA post shared by Nithya official (@nithya_dheju) on
இந்நிலையில், நித்யாவும், போஷிகாவும் தங்கள் ஹேர் ஸ்டைலை மாற்றி, புதிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான பதிவில், 'தங்கள் முடியை அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்வதற்காக அவர்கள் தானமாக அளித்துள்ளதாக’ தெரிவித்துள்ளனர்.
இச்சிறு வயதில் தாயோடு சேர்ந்து தானும் முடியை தானமாக அளித்துள்ள போஷிகாவிற்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications