சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டிரிக்ட்.. ஃபைன் போடுங்கள்.. லாக்டவுன் இல்லையென்றாலும்.. முதல்வருக்கு அதிகாரிகள் தந்த அட்வைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலினுடன் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முக்கிய பரிந்துரைகளை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 34 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவானது. கடந்த வாரம் 1 ஓமிக்ரான் கேஸ் பதிவானது. இந்த நிலையில் வெளிநாட்டு பயணிகள், காண்டாக்ட்கள் என்று 33 பேருக்கு நேற்று ஓமிக்ரான் பதிவானது.

தமிழ்நாட்டில் மேலும் 23 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறி உள்ளது.இவர்களுக்கு ஜீன் பரிசோதனை செய்ய மாதிரி அனுப்பப்பட்டுள்ளது.

ஆலோசனை

ஆலோசனை

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். லாக்டவுன் கொண்டு வரலாமா வேண்டாமா என்று முதல்வர் ஸ்டாலின் இந்த ஆலோசனையில் பேசினார். மருத்துவ துறை வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், சில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தனிமைப்படுத்தலாம்

தனிமைப்படுத்தலாம்

இதில் அதிகாரிகள் வைத்த முதல் பரிந்துரை.. தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கேஸ்கள் 34 இருந்தாலும் இன்னும் லோக்கல் பரவல் ஏற்படவில்லை. தொடர்ந்து விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். விமான நிலையங்களில் கண்காணிப்பதை அதிகமாக்க வேண்டும். இங்கு காண்டாக்ட் டிரேசிங் செய்வதன் மூலம் லோக்கல் பரவல் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று கூறினர்.

கட்டாய மாஸ்க் பரிந்துரை

கட்டாய மாஸ்க் பரிந்துரை

இப்போது லாக்டவுன் தேவை இல்லை. இரவு நேர லாக்டவுன் பயன் அளிப்பது. இரவு நேரத்தில் லாக்டவுன் போடுவது எப்படி இருந்தாலும் வீண்தான். மக்கள் அதிக அளவில் இரவு நேரத்தில் வெளியே செல்வது இல்லை. ஆனால் கட்டாய மாஸ்க் விதியை கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாடு லாக்டவுன்

தமிழ்நாடு லாக்டவுன்

மக்கள் மாஸ்க் அணியாமல் சுற்றுகிறார்கள். மாஸ்க் அணியாமல் அதிக அளவில் வெளி இடங்களுக்கு செல்கிறார்கள். இவர்களுக்கு சாலையிலேயே அதிக அளவில் அபராதம் விதிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். அதுதான் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

ஒரே விதி

ஒரே விதி

அதேபோல் கூட்டமான இடங்களை கண்காணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது பதிவாகும் கேஸ்களில் 1 சதவிகிதம் கூட ஓமிக்ரான் இல்லை. இது 5 சதவிகிதத்தை தாண்டினால் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வரலாம். 10% நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து முடிவு எடுக்கலாம் என்று மீட்டிங்கில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Recommended Video

    கிருஷ்ணகிரி: ஒமிக்ரான் தீவிரத்தை உணரவில்லையா? அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!
    பணியாளர்கள் பணி பரிந்துரை

    பணியாளர்கள் பணி பரிந்துரை

    அதே சமயம் இப்போது கொரோனா கேஸ்கள் குறைவாக இருந்தாலும் மருத்துவமனைகளை தயார் செய்ய வேண்டும். அதேபோல் ஒப்பந்த பணியாளர்களின் பணிக்காலம் இந்த மாத இறுதியோடு முடிவடைவதால் அதை மேலும் நீடிக்க வேண்டும், என்று நிர்வாகிகள் பரிந்துரை வழங்கி உள்ளனர்.

    English summary
    Coronavirus; No lockdown now, But when will Tamilnadu get new restrictions amid rising omicron cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X