இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,988 பேருக்கு கொரோனா.. 378 பேர் பலி.. 19,370 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,988 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக 16 ஆயிரத்திற்கும் அதிகமாக இந்தியாவில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது.
Recommended Video
ஐசிஎம்ஆர் வெளியிட்ட கணிப்பின்படி இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை அக்டோபர் மாதத்திற்கு பின்பாக ஏற்படும் என்று கூறப்பட்டது. டிசம்பருக்குள் மூன்றாம் அலை உச்சம் தொட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.
நாடு முழுக்க இந்த மாதமும், அடுத்த மாதமும் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் அதிக அளவில் வெளியே வர தொடங்கி உள்ள நிலையில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலாத்தளம்
சுற்றுலாத்தலங்களும் திறக்கப்பட்டுள்ளதால் அதன் காரணமாக கொரோனா கேஸ்கள் உயரும் வாய்ப்புகளும் உள்ளன. இந்தியாவில் சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளதால் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக ஏற்கனவே ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,988 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பலி
கடந்த 24 மணி நேரத்தில் 378 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,51,847 ஆக உயர்ந்துள்ளது. 1,97,239 பேர் இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் மொத்த கேஸ்களில் எண்ணிக்கை 3,40,36,684 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை பேர் 3,33,74,485 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் 19,370 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு
தேசிய அளவில் ஆங்காங்கே கொரோனா கேஸ்கள் அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,83,396 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரண்டாவது நாளாக நேற்று 1300க்கும் குறைவான கேஸ்கள் பதிவானது. தமிழ்நாட்டில் புதிதாக 1,259 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 35,853 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,32,092 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 15,451 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் தமிழ்நாட்டில் 20 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் ஒரு நாள் கேஸ்கள் உயர்ந்தும், ஒருநாள் குறைந்தும் பதிவாகி வருகிறது. நேற்று முதல்நாள் 11 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 9,246 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 48,29,944 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 95,892 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 26,667 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 47,06,856 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 96 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாஷ்டிராவில் மூன்று நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக கேஸ்கள் உயர்ந்து வருகின்றன. மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,86,280 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 2384 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 29,560 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,39,705 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,13,418 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 35 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,82,399 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 310 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 37,922 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,34,870 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 9578 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் கர்நாடகாவில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications