தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில், தமிழக உள்துறை செயலர், பொறுப்பு டிஜிபி உள்ளிட்டோர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாக" தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் திமுக அரசு சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு அளிப்பதில் தோல்வி அடைந்துவிட்டதாகவும் தொடர்ந்து பாஜக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளால் குற்றம்சாட்டப்பட்டு வந்தன.

இதுபோன்ற குற்ற செயல்கள் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தாலும் கூட சில நேரங்களில் அலட்சியமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழக உள்துறை செயலர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் குற்றசம்பவங்கள் குறித்து இன்று தமிழ்நாடு உள்துறை செயலர் தீரஜ்குமார் மற்றும் தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் விளக்கம் அளித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாவே உண்மைக்கு புறம்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. உண்மைக்கு மாறான தோற்றங்கள் காண்பிக்கப்படுகின்றன
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. கோவில் விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்படுகின்றன.
வழக்குகள் அதிகம் பதிவாகுவதால் குற்றங்கள் அதிகமாக நடப்பதாக கருத முடியாது. சிவகங்கை காவல் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் மரணங்களை சகித்து கொள்ள முடியாது. கடந்த 2021 ஆம் ஆண்டு 422 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவானது. ஆனால் கடந்த 2025 ஆம் ஆண்டு 401 என குறைந்து இருக்கிறது.
குற்றங்கள் எதுவாயினும் உடனே பொதுமக்கள் புகார் கொடுக்க வேண்டும். தற்போது பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மக்கள் தாமாக முன் வந்து துணிச்சலோடு புகார் தருகிறார்கள். விசாரணையை எப்படி நடத்துவது என காவல் நிலையங்களுக்கு வழிகாட்டு நெரிமுறைகள் வெளியிடப்படும்" என்று கூறினர்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications