சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முகேஷ் நெத்தியில் சும்மா விளையாட்டுக்குதான் வைத்தேன்.. அது சுட்ருச்சு.. அதிர வைக்கும் விஜய்!

மாணவன் முகேஷை சுட்ட விஜய்க்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    மாணவர் மீது துப்பாக்கிச் சூடு... நெற்றியில் குண்டு பாய்ந்து பலி

    சென்னை: "துப்பாக்கியை ஒரு குப்பை தொட்டியில் இருந்துதான் எடுத்தேன். முகேஷ் வீட்டுக்கு வந்தான்.. அவன் நெத்தியில துப்பாக்கியை வெச்சு, சும்மா விளையாட்டுக்கு சுட பார்த்தேன்.. அது படார்ன்னு வெடிச்சிடுச்சு.." என்று மாணவனை சுட்ட விஜய் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

    சென்னை தாம்பரம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தவர் முகேஷ். உதயா, விஜய் ஆகியோர் முகேஷின் நெருங்கிய நண்பர்கள்! நேற்று காலை விஜய்யின் வீட்டுக்கு உதயா சென்றுள்ளார். அங்கு விஜய்யுடன் முகேஷ் ஒரு ரூமில் பப்ஜி விளையாடி கொண்டு இருந்திருக்கிறார்கள்.

    ஹாலில் விஜய்யின் அண்ணன் உதயாவும், இன்னொருரூமில் விஜய்யின் மற்றொரு சகோதர் அஜித், அவர் மனைவி இருந்திருக்கிறார்கள். அப்போதுதான் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது.

    சென்னையில் பயங்கரம்.. பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கிச் சூடு.. நெற்றியில் குண்டு பாய்ந்து பலிசென்னையில் பயங்கரம்.. பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கிச் சூடு.. நெற்றியில் குண்டு பாய்ந்து பலி

    ரத்த வெள்ளம்

    ரத்த வெள்ளம்

    இதனால் வீட்டில் இருந்தவர்கள் பதறிப்போய் ரூமுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, சரியாக நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு பாய, முகேஷ் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததை கண்டு அலறினார்கள். உயிருக்கு பேராடிய முகேஷை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் அனுமதித்தும், பலனின்றி உயிரிழந்தார்.

    விசாரணை

    விசாரணை

    இதுகுறித்து தாழம்பூர் போலீசார் துரிதமாக இந்த வழக்கு விசாரணையில் இறங்கினார்கள். விஜய்யின் அண்ணன்கள் உதயா, மற்றும் அஜீத்தை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஏற்பட்ட மோதல் காரணமாகவே முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கக்கூடும் என்றும் முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவித்தன.

    துப்பாக்கி

    துப்பாக்கி

    தொடர்ந்து, முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்ட வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் வேலை பார்த்து வரும் விஜய்க்கு இந்த துப்பாக்கி கிடைத்தது என்பதுதான் பெரும் வியப்பாகவே இருந்தது.

    ஆஜர்

    ஆஜர்

    அதனால் விஜய்யை பிடித்து விசாரித்தால்தான் எல்லா விவரமும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டு கோர்ட்டில் இன்று காலை விஜய் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து, நீதிபதி முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது விஜயகுமார், தனக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதைத் தெரிவித்தார்.

    சும்மா.. விளையாட்டுக்கு..

    சும்மா.. விளையாட்டுக்கு..

    "கொஞ்ச நாளைக்கு முன்னாடி குப்பை தொட்டியில் ஒரு துப்பாக்கியை பார்த்தேன். உடனே அதை யாருக்கும் தெரியாம எடுத்து வெச்சுக்கிட்டேன்... வீட்டு பக்கம் அதை புதைச்சுட்டேன். அப்பறம், தீபாவளி நேரத்தில அதை எடுத்து கையில் வெச்சிருந்தேன். முகேஷ் நேத்து வீட்டுக்கு வந்தான்.. அப்போ அந்த துப்பாக்கியை எடுத்து அவன்கிட்ட காட்டினேன். அவன் நெத்தியில வெச்சு விளையாட்டுக்கு சுட பார்த்தேன்.

    கடலில் வீசினேன்

    கடலில் வீசினேன்

    அந்த நேரத்துலதான் தெரியாம, கை பட்டு துப்பாக்கி வெடிச்சிடுச்சு. அது, முகேஷின் தலையை துளைச்சுட்டு போயிடுச்சு. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல.. அதனாலதான் அங்கிருந்து துப்பாக்கியுடனே தப்பிச்சு ஓடிட்டேன். நேரா கோவளம் பீச்சுக்கு போனேன்.. அங்க கடலில் வீசிவிட்டேன்" என்றார். கோர்ட்டில் விஜய் இவ்வாறு சொன்னதையடுத்து, 15 நாள்கள் அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் 20 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    English summary
    vijay the youth who escaped after gunshot his friend was surrendered in court and 15 days custody
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X