ஆஹா.. என்ன இப்படி இறங்கிட்டாங்க.. தியேட்டர் மாறியே.. 'தினமும் ரெண்டு ஸோ'. மாறிய தொலைக்காட்சிகள்
சென்னை: தியேட்டர் போல் தொலைக்காட்சிகள் இப்போது மாறிவிட்டன. ஒரே படங்களை திரும்ப திரும்ப தினமும் ஓட்டத் தொடங்கி விட்டன
குறிப்பாக விஜய் சூப்பர், கலர்ஸ் தொலைக்காட்சி, ஜி திரை போன்றவை தியேட்டர்களை போல் தினமும் குறிப்பிட்ட படங்களையே சலிக்காமல் ஓட்டி வருகின்றன.
கடந்த 2019 மார்ச் வரை தியேட்டர்கள் தான் சினிமாக்களின் பிறப்பிடமாக இருந்தது. மக்கள் ஆர்வமுடன் தியேட்டர்களுக்கு சென்று படங்ளை பார்த்து ரசித்து வந்தனர்.ஆனால் கொரோனா தியேட்டர்களை காலி செய்துவிட்டன. கிட்டத்தட்ட 8 மாதங்கள் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

மக்கள் ஆர்வம்
கடந்த ஆண்டு இறுதியில் தான் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் பெரிய வரவேற்பு இல்லை. விஜய்யின் மாஸ்டர் படம் ஒன்று தான் தியேட்டர்களை நோக்கி மக்களை வரவைத்தது. அதன்பின்னர் எந்த படத்தையும் பார்க்க மக்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. காரணம் ஒடிடிக்கள், இன்னும் ஒரு மாதம் காத்திருந்தால் ஒடிடியில் பார்க்கலாம் என்ற மனநிலைக்கு மக்கள் மாறியது தான்.

மாஸ்டர்
ஒடிடியில் படங்களை மக்கள் ஆர்வமுடன் பார்க்க காரணமாக அமைந்தது சூர்யாவின் சூரரை போற்று படம். ஒருவேளை சூரரை போற்று படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கும். வசூலில் பெரும் சாதனை படைத்திருக்கும். ஆனால் அந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது தியேட்டர்களின் எதிர்காலத்தையே புரட்டி போட்டது. மாஸ்டர் படம் தியேட்டர் பக்கம் மக்களை இழுத்தது என்றாலும் அதேபடம் அடுத்த இரண்டு வாரத்தில் ஒடிடியில் வெளியானது மக்களை தியேட்டர் பக்கம் செல்லும் மனநிலையை முற்றாக உடைத்தது.

துரதிஷ்டம்
அதன்பிறகு வெளியான எந்த படமும் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா ஆரம்பிக்கும் முன்பு தனுஷின் கர்ணன் படம் மட்டுமே ஓரளவு வரவேற்பை பெற்றது ஆனால் அப்போது துரதிஷ்டவமாக தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டன. இன்றுவரை தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. மூன்றாவது அலை வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது தெரியவில்லை.

தொலைக்காட்சிகள்
இந்த சூழலில் ஒடிடிக்களில் தான் அனைத்து படங்களுமே வெளியாக தொடங்கி உள்ளன, சிறுபடங்கள், பெரிய படங்கள் என எல்லாமே அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஒடிடிக்களில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தொலைக்காட்சிகளிலும் இப்போது படங்கள் நேரடியாக வெளியாக தொடங்கி உள்ளன.

கடம்பன்
கலர்ஸ் தொலைக்காட்சி அண்மையில் சர்பத் என்ற படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிட்டது. அந்தபடத்தை தியேட்டரில் ஓட்டுவது போல், காலையில் ஒரு காட்சி மாலையில் ஒரு காட்சி என்று ஓட்டியது. அதன்பின்னர் கடம்பன் படத்தையும் இன்று அதே பாணியில் திரையிட்டுள்ளது. கலர்ஸ் தொலைக்காட்சியில் தற்போத முத்துக்காளை, அரன்மணை கிளி, சர்பத் ஆகிய படங்கள் திரும்ப திரும்ப ஒளிபரப்பாகின்றன.

கேடிவி
விஜய் சூப்பர் தொலைக்காட்சி தன்னிடம் உள்ள படங்களை தவிர்த்து, ஒரு தெலுங்கு படத்தையும் விடாமல் டப்செய்து தினமும் திரும்ப திரும்ப போட்ட படங்களையே ஒளிபரப்பி வருகிறது. ஜி திரையும் தன் கையில் வைத்திருக்கும் படங்களை மீண்டும் மீண்டும் தியேட்டர் போல் ஒளிபரப்பி வருகிறது. சன் குழுமத்தின் கேடிவி ஒரு காலத்தில் இப்படித்தான் செய்தது. கேடிவி இப்போது நிறைய படங்களை வைத்திருந்தாலும் ரேட்டிங் வரும் படங்களை திரும்ப திரும்ப ஒளிபரப்பி வருகிறது.

சினிமா தொழில்
மொத்தத்தில் தியேட்டர்கள் போல் தொலைக்காட்சிகள் இப்போது மாறிவிட்டன. ஒடிடிக்கள், தொலைக்காட்சிகளில் படங்கள் வெளியாவதால் இனி பெரிய பட்ஜெட் படங்களோ, பெரிய ஊதியங்களோ இனி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கிடைப்பது கடினம் ஆகும். கொரோனாவால் தியேட்டர் தொழில் அடியோடு அழியும் அபாயத்தில் உள்ளது. ஓடிடிக்கள், தொலைக்காட்சிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் , சினிமா தொழிலுக்கு நிச்சயம் நல்லது அல்ல.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications