பேருந்து பயணங்கள்.. மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து இருக்கும் தமிழகம்!
சென்னை : பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக அரசுப் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை 2020 முதல் 2021 வரை மிகவும் குறைந்துள்ளது. கொரோனா காரணம் என்றாலும் , மக்களிடையே அதிகரித்த தனிநபர் வாகனப்பெருக்கம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் தற்போது பொது போக்குவரத்தை விரும்புவதில்லை. பெரும்பாலான மக்கள் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்பது விரும்புகிறார்கள். இதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
கடந்த 2010ஆம் ஆண்டுகளில் பேருந்து போக்குவரத்து பயணம் என்பது பெரும்பாலானவர்களின் தேர்வாகவே இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல எல்லோரும் இருசக்கர வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். அதனால் இருசக்கர வாகன விற்பனையில் நான்கு சக்கர வாகன விற்பனையும் அதிகரித்தது .

அலுவலகம் செல்ல
வேலைக்கு செல்வதற்கு அலுவலகம் செல்வதற்கு தொலைதூர அல்லது குறைவான தூர பயணத்திற்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பொதுப் போக்குவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏழை மக்கள் நடுத்தர வர்க்கத்தினர் தற்போது நீண்ட தூரங்களுக்கு மட்டுமே பொதுப் போக்குவரத்தை நாடும் நிலை உருவாகி வருகிறது.

லட்சங்களில் சரிவு
ஏனெனில் அரசின் போக்குவரத்து துறை தொடர்பான கொள்கை விளக்கக் குறிப்புகளில் பெரிய அளவில் பயணிகள் எண்ணிக்கை சரிந்துள்ளது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது . 2011-12-ம் ஆண்டு அரசுப் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை 2.08 கோடியாக இருந்தது. ஆனால் 2020-21-ல் அரசுப் பேருந்துகளில் பயணிப்போரின் தினசரி எண்ணிக்கை 73.64 லட்சமாக குறைந்துள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்
பேருந்து பயணம் குறைந்து போக முக்கிய காரணம், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்தது காரணம் என்றாலும், கால மாற்றத்திற்கு ஏற்ப பொதுபோக்குவரத்து மக்களின் வசதிகளுக்கு ஏற்ப அதிகரிக்கப்படாதது. மக்களுக்கு தேவையான புதிய வழித்தடங்களில்
பேருந்துகளை இயக்காதது, மக்கள் விரும்பும் வகையில் கட்டண முறையை எளிதாக்காதது போன்றவை முக்கிய காரணம் ஆகும்.

பொதுபோக்குவரத்து
இன்னொரு காரணம் வேகம். இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களில் செல்வதை விட பேருந்தில் சென்றால் நேரம் ஆகும், அத்துடன் சரியான இடத்திற்கு செல்ல நடந்து செல்ல வேண்டும் என்ற நிலையும் ஒரு காரணம் ஆகும். மக்களுக்கு மெட்ரோ ரயில் போல் வேகமாக செல்ல விரும்புகிறார்கள். அதற்கு ஏற்ப பஸ் வேக்கள் உருவாக்குவது பொதுப்போக்குவரத்தின் மீதான ஆர்வத்தை மக்களிடையே அதிகரிக்கும். அதேபோல் பொதுப்போக்குவரத்தை ஐடி நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் அப்படி செய்தால் ஓரளவு மக்கள் போக்குவரத்து நெருக்கடி குறைவதுடன் நல்ல மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications