ஆளுநர் ரவி சொல்லவே இல்லையாமே? உண்மையா? அப்போ நடந்த சம்பவத்திற்கு பக்கா பதிலடி? கொதித்து நின்ற திமுக
சென்னை: ஆளுநர் ரவி தலைமையில் இன்று ஊட்டியில் நடக்க இருக்கும் துணை வேந்தர்கள் மாநாடு பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடக்க உள்ளது. இன்றும், நாளையும் இந்த மாநாடு ஊட்டியில் நடக்கிறது. புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு என்ற தலைப்பில் இந்த மாநாடு நடக்கிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று ஆளுநர் ரவி நீலகிரி சென்றார். இவருக்கு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமைச்சர்களை அழைக்கவில்லையா?
இந்த நிலையில்தான் ஆளுநர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்விற்கான அழைப்பு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அமைச்சர்கள் யாரிடமும் ஆளுநர் ரவி சொல்லாமல் இந்த மீட்டிங்கை நடத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்நாட்டு உயர்கல்வித்துறை அமைச்சரை ஆளுநர் ரவி இந்த நிகழ்விற்கு அழைத்தாரா இல்லை அழைப்பு விடுக்காமலே ஆளுநர் ரவி தனியாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன காரணம்? பதிலடியா?
தமிழக அரசிடமோ உயர்கல்வித் துறை அமைச்சரிடமோ ஆலோசனை செய்யாமல் அவர் இந்த மீட்டிங்கை நடத்துவதாக தகவல்கள் வந்துள்ளது. ஒருவேளை ஆளுநர் ரவி அமைச்சர்களை இந்த நிகழ்விற்கு அழைக்கவில்லை என்றால் அது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பல்கலைக்கழக வேந்தர் தான்தான் என்பதால், அமைச்சர்கள் யாரையும் அழைக்காமல் ஆளுநர் ரவி விட்டுவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேநீர் விருந்து
இல்லையென்றால், ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தில் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. ஆளும் கூட்டணி மொத்தமாக இந்த நிகழ்வை புறக்கணித்தது. அதோடு ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் மயிலாடுதுறையில் ஆளுநருக்கு கருப்பு கொடியும் காட்டின. ஆளும் கட்சியின் இந்த எதிர்ப்பு செயலுக்கு பதிலடி தரும் விதமாக இப்போது அமைச்சர்களை அழைக்காமல் ஆளுநர் புறக்கணித்து இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆளும் தரப்பு எதிர்க்கவில்லை - இருந்தாலும்
ஆளுநர் ரவி தலைமையில் இன்று ஊட்டியில் நடக்க இருக்கும் துணை வேந்தர் மாநாட்டை ஆளும் திமுக தரப்பு நேரடியாக எதிர்க்கவில்லை. நேரடியாக ஆளும் தரப்பில் இருந்தும் யாரும் இந்த நிகழ்வை அதிகாரபூர்வமாக யாரும் எதிர்க்கவில்லை. ஆனாலும் திமுக தரப்பு இந்த விழாவால் கொதிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆளுநர் இப்படி தனியாக மாநாடு நடத்துவது தவறு. அவர் தனியாக இப்படி செயல்படுவது அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது என்று திமுக தலைகள் சிலர் கொதிப்பில் புலம்பி வருகின்றனர்.
Recommended Video

பதிலடி மூவ்
இந்த நிலையில்தான் துணை வேந்தர்களை வைத்து மீட்டிங் நடத்தும் ஆளுநருக்கு பதிலடியாக தமிழ்நாடு அரசு மசோதா ஒன்றை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசே துணை வேந்தர்களை நியமனம் செய்யும் வகையில் சட்டசபையில் புதிய மசோதாவை ஆளும் திமுக அரசு இன்று தாக்கல் செய்ய போவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கான மசோதாவை இன்று தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்ய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications