சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாமி பற்றி பேசினாலே சங்கினு சொல்றாங்க! ராஜராஜ சோழன் இந்து தான்! வெற்றிமாறனை விடாத ’பாஜக’ பேரரசு!

Google Oneindia Tamil News

சென்னை : இந்தியர்கள் அனைவருமே இந்துக்கள்.. ராஜராஜ சோழன் இந்து சமயத்தை சேர்ந்தவர் தான் எனவும், சாமி பற்றி பேசிவிட்டால் சங்கி என்கிறார்கள் என பிரபல இயக்குனரும் பாஜகவைச் சேர்ந்தவருமான பேரரசு கூறியுள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்னை சாலி கிராமத்தில் தமிழ் ஸ்டூடியோ சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது.

இதில் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு சினிமா குறித்தும் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து பேசினார். குறிப்பாக பாஜக ஆட்சி குறித்து பல்வேறு கருத்துகளை மறைமுகமாகக் குறிப்பிட்டார் வெற்றிமாறன்.

அடுத்த ஜெயலலிதா..! தமிழ்நாட்டு மம்தா குஷ்பு தான்! போட்டுத் தாக்கிய பேரரசு! என்ன காரணம் சொன்னார்? அடுத்த ஜெயலலிதா..! தமிழ்நாட்டு மம்தா குஷ்பு தான்! போட்டுத் தாக்கிய பேரரசு! என்ன காரணம் சொன்னார்?

ராஜராஜ சோழன்

ராஜராஜ சோழன்

அதில் ராஜராஜ சோழன் குறித்து பேசிய வெற்றிமாறன்,"கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

சினிமாவிலும் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணியே இதற்கெல்லாம் ஒரு உதாரணம் தான் என நினைக்கிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் என்னால் முடிந்த பங்களிப்பைக் கொடுப்பேன்'' என்றார்.

பேரரசு கண்டனம்

பேரரசு கண்டனம்

வெற்றிமாறனின் இந்த கருத்தி திரையுலகிலும் அரசியல் களத்திலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறனின் கருத்துக்கு பலரும் ஆதரவாகப் பேசி வரும் நிலையில், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் ராஜராஜ சோழன் இந்து சமயத்தை சேர்ந்தவர் தான் எனவும், சாமி பற்றி பேசிவிட்டால் சங்கி என்கிறார்கள் என பிரபல இயக்குனரும் பாஜகவைச் சேர்ந்தவருமான பேரரசு கூறியுள்ளார்.

சங்கி என்கிறார்கள்

சங்கி என்கிறார்கள்

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "எந்த மேடையை எடுத்தாலும் இந்து மக்களை இழிவுப்படுத்துவது சிலர் ஒரு வேலையாக வைத்திருக்கிறார்கள். ஒருவர் இந்து மதத்தை இழிவுபடுத்தும்போது, அவருக்கு நாங்கள் பதில் சொன்னால், உடனே எங்களுக்கு மத வெறியர்கள் முத்திரை குத்தப்படுகிறது. சாமி பற்றி பேசிவிட்டால் சங்கி என்கிறார்கள். ராஜராஜ சோழனை இந்து என்று அடையாளம் கொடுக்கிறாங்கன்னு இயக்குனர் வெற்றிமாறன் சொல்றாரு.

ராஜராஜ சோழன் கிறிஸ்துவரா?

ராஜராஜ சோழன் கிறிஸ்துவரா?

சரி ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் வேறு என்ன கிறிஸ்துவரா இல்லை இஸ்லாமியரா? இந்தியர்கள் அனைவருமே இந்துக்கள்.. ராஜராஜ சோழன் இந்து சமயத்தை சேர்ந்தவர் தான். ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆட்சி செய்தபோது இந்தியா மாகாணம், மாகாணங்களாக பிரிந்திருந்தது. அதில் மாற்றம் ஏற்பட்டு ஒன்றாக இணைத்து இன்று இந்தியா என்ற நாடாக்கியுள்ளனர். சாமி கும்பிடாதவர்களுக்கு இங்கு என்ன பிரச்னை? உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள், நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை" என கடுமையாக விமர்சித்துள்ளார்.

English summary
a famous director and a member of the BJP perarasu says All Indians are Hindus. Raja Raja Cholan belongs to the Hindu religion, and if we talks about god some one called me Sangi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X