சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது! புத்தாடைகள் அணிந்து வாழ்த்து பரிமாறி மக்கள் உற்சாகம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவல், ஊரடங்கு என கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து காணப்பட்ட தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இந்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மக்கள் அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதேபோல் காலையிலேயே அதிரடி சரவெடியாக பட்டாசுகளையும் வெடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளி பண்டிகையை குதூகலமாக கொண்டாடுகின்றனர்.

Diwali celebrations are in full swing across the country

சென்னை, மதுரை, திருச்சி, போன்ற நகரங்களில் விடிய விடிய தீபாவளி ஜவுளி வியாபாரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதே போல் இறைச்சிக் கடைகளிலும் அதிகாலை முதலே கூட்டம் நிரம்பி வழிகிறது.

தீபாவளியன்று காலை சிற்றூண்டியிலேயே மட்டன் இருக்க வேண்டும் என விரும்பும் பலரும் ஆட்டுக்கறி கடைகளில் அலைமோதி வருகின்றனர்.

Diwali celebrations are in full swing across the country

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தீபாவளி பண்டிகை களையிழந்து காணப்பட்ட நிலையில் இந்தாண்டும் மீண்டும் பழைய உற்சாகத்துடன் மக்கள் கொண்டாடுகின்றனர்.

பட்டாசுகள் வெடிக்கும் போது ஏதேனும் அசம்பாவித நிகழ்வுகள் நடந்தால் அதனை எதிர்கொண்டு சமாளிக்க தமிழகம் முழுவதும் தீயணைப்புப்படை வீரர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

திமுகவிலிருந்து ஒரு தீபாவளி வாழ்த்து.. பெரியார் டூ உதயநிதி! ஐவர் படத்துடன் செந்தில்பாலாஜி ட்வீட் திமுகவிலிருந்து ஒரு தீபாவளி வாழ்த்து.. பெரியார் டூ உதயநிதி! ஐவர் படத்துடன் செந்தில்பாலாஜி ட்வீட்

English summary
The festival of Diwali, which has been neglected for the past 2 years due to the spread of Corona and curfew, is being celebrated with enthusiasm across the country this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X