வேகம் எடுக்கும் திமுக.. வேட்பாளர்கள் யார் யார்.. 17 ஆம் தேதி நேர்காணலை தொடங்குகிறார் ஸ்டாலின்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜனநாயக திருவிழா தொடங்கியிருக்கும் நிலையில் திமுகவும் வேகம் காட்டியுள்ளது. அதன்படி, திமுக வேட்பாளர் நேர்காணல் வரும் 17 ஆம் தேதி (மார்ச் 17) முதல் 22 ஆம் தேதி வரை நடக்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் செய்ய உள்ளார்.
திமுக சார்பில் போட்டியிட 15,000-க்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில் இந்த நேர்காணல் நடத்தப்படுகிறது. இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;-

தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல்
தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் செலுத்தியவர்களை கழகத் தலைவர் அவர்கள் 17-03-2026 முதல் 22-03-2026 ஆம் தேதி வரை, பின்வரும் மாவட்ட வாரியாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்கள்.
குறிப்பிட்டுள்ள தேதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர் மட்டும் வரவேண்டும். மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள் வரவேண்டிய அவசியமில்லை. வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையும் 'அவர்களுக்காக விருப்ப மனு' செலுத்தியோரையும் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெறும் நாள் விவரம்
மார்ச் 17 செவ்வாய்
காலை 9.00 மணி: புதுச்சேரி மற்றும் காரைக்கால்
மார்ச் 18 புதன்
காலை 9.00 மணி: தூத்துக்குடி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, திருநெல்வேலி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு
மாலை 4.00 மணி: மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, இராமநாதபுரம், சிவகங்கை
மார்ச் 19 வியாழன்
காலை 9.00 மணி: கரூர், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, ஈரோடு மத்திய, கோவை வடக்கு, கோவை மாநகர், கோவை தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் மத்திய, நீலகிரி
மாலை 4.00 மணி: கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருப்பூர் கிழக்கு, திருப்பூர் தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு
மார்ச் 20 வெள்ளி
காலை 9.00 மணி: ராணிப்பேட்டை, வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு, திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு,
மாலை 4.00 மணி: தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, சேலம் மத்திய, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு.
மார்ச் 21 சனி
காலை 9.00 மணி: திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, பெரம்பலூர், அரியலூர்
மாலை 4.00 மணி: புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர்
மார்ச் 22 ஞாயிறு
காலை 9.00 மணி: கடலூர் கிழக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, விழுப்புரம் தெற்கு, காஞ்சிபுரம் தெற்கு.
மாலை 4.00 மணி: திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, சென்னை வடக்கு சென்னை வடகிழக்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை கிழக்கு" என்று கூறப்பட்டுள்ளது.
-
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications