சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல் அறிக்கை.. பரபர பணியில் திமுக.. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கூட்டம், அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற பரபரப்பில் உள்ள 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதில், கே.பி.முனிசாமி, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் உள்ளனர்.தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்கு 7 பேர் கொண்ட குழுவை அதிமுக அறிவித்துள்ளது. அதில், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, பி.ஹெச்.மனோஜ் பாண்டியன், ரபிபெர்னார்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பிரச்சாரம், குழுக்கள் அமைப்பு

பிரச்சாரம், குழுக்கள் அமைப்பு

அதிமுகவின் பிரச்சார பணிகளை முறைப்படுத்தவும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதில், தம்பிதுரை எம்.பி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, வேணுகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தயார்

திமுக தயார்

அதிமுகவின் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க... தமிழகத்தின் பிரதான கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சிகளுடன் தேர்தலைச் சந்திக்கிறது. லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஒவ்வொரு கட்சியும் தயாரித்து அளிப்பது வழக்கம். 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை பல்துறை நிபுணர்கள், ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என அனைவரின் கருத்துகளைக் கேட்டு தயாரிக்கப்பட்டது.

திமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கை

இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் மும்முரத்தில் திமுக உள்ளது. அதற்கான கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

முதல் கூட்டம் கூடியது

முதல் கூட்டம் கூடியது

குழுவின் முதற்கட்ட கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைகள், அறிவுரைகள்

ஆலோசனைகள், அறிவுரைகள்

திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசாஇடி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோரும் பங்கேற்றனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்த ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

English summary
DMK manifesto team headed by M.K.Stalin discussed in Chennai to draft loksabha 2019 election manifesto.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X