நாளை தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம்.. விவாதிக்கப்படவுள்ள முக்கிய பிரச்சினைகள்.. பரபர தகவல்!
சென்னை: தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:- 'திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் (21-11-2021) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அதுபோது, திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் மழை நிவரான பணிகள், மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெற தொகை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. இதில் தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? எந்தெந்த பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும்? என்பது
குறித்தும் எம்.பி.க்களுடன் ஆலோசனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து சர்ச்சையாக இருந்து வரும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை குறித்து முக்கியமாக பேசப்பட உள்ளதாக தெரிகிறது.
மேலும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள், நீட் தேர்வு விவகாரம், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications