புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு.. பதவி பெற்ற மந்திரிகளின் மகன்கள்!
சென்னை : திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களின் பட்டியலும் திமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுகவில் சமீபத்தில் இணைந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வம், திமுகவின் தலைமை நிலைய அலுவலக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தேமுதிகவில் இருந்து திமுகவில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பணப்பட்டி தினகரன் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதமசிகாமணி எம்.பி, சேலம் எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன், இளைஞரணியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் பைந்தமிழ் பாரி ஆகியோர் விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தலைமை அறிவிப்பு
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டு, அனைத்து மட்டங்களிலும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் பொதுக்குழு கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது. தி.மு.க சட்ட திட்ட விதிகளின்படி, திமுகவில் உள்ள பல்வேறு அணிகளின் தலைவர், துணைத் தலைவர்கள் - செயலாளர் - இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் - உறுப்பினர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

உயர்நிலை செயல் திட்டக்குழு
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உறுப்பினர்கள்
மேலும், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக ஆற்காடு வீராசாமி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதி மாறன், சுப.தங்கவேலன், எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், கரூர் கேசி பழனிசாமி, கோவை மு.கண்ணப்பன், எல்.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி சிவா, எவ வேலு, பொன் முத்துராமலிங்கம், ஜெகத்ரட்சகன், முபெ சாமிநாதன், எல்.மூக்கையா, திருச்செங்கோடு கந்தசாமி, கும்மிடிப்பூண்டி கி.வேணு, பெ.குழந்தைவேலு, குத்தாலம் பி.கல்யாணம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

குழுக்கள் - புதிய நிர்வாகிகள்
திமுக சட்ட விதி 18,19 பிரிவுகளின்படி தலைமைக் கழக நிர்வாகிகளாகவும், குழுத் தலைவர்களாகவும், செயலாளர்களாகவும், இணை மற்றும் துணை செயலாளர்களாகவும், குழு உறுப்பினர்களாகவும் இடம்பெறுவோரின் பட்டியலும் வெளியாகியுள்ளது.
அமைப்புச் செயலாளர் - ஆர்.எஸ்.பாரதி
இணை அமைப்புச் செயலாளர் - அன்பகம் கலை
துணை அமைப்புச் செயலாளர்கள் - எஸ் ஆஸ்டின், ப.தாயகம் கவி
தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் - வழக்கறிஞர் பி.வில்சன்
கழக சட்டத்துறை தலைவர் - ஆர்.விடுதலை
சட்டத்துறைச் செயலாளர் - என்.ஆர். இளங்கோ

சட்டத்துறை
சட்டத்துறை இணைச் செயலாளர்கள் - இ.பரந்தாமன், வீ. கண்ணதாசன், என்.மணிராஜ், கரூர் கே.எஸ்.இரவிச்சந்திரன், கே.எம்.தண்டபாணி, சு.ராதாகிருஷ்ணன் (கண்ணன்), அருள்மொழி.
சட்டத் துறை துணைச் செயலாளர்கள் - ஜெ.பச்சையப்பன், கே. சந்துரு, பட்டி ஜெகன்னாதன், வி. வைத்தியலிங்கம், எஸ். தினேஷ்,
தலைமைக் கழக வழக்கறிஞர்கள் - ப.கணேசன், சூர்யா வெற்றிகொண்டான், கே.ஜெ. சரவணன், வீ. கவிகணேசன், எம்.எல். ஜெகன், ஏ.என். லிவிங்ஸ்டன், கே.மறைமலை

கொள்கை பரப்புச் செயலாளர்கள்
கொள்கை பரப்பு செயலாளர்கள் - திருச்சி சிவா, திண்டுக்கல் ஐ.லியோனி, எஸ்.ஜெகத்ரட்சகன், முனைவர் சபாபதிமோகன்
கொள்கை பரப்பு இணைச் செயலாளர்கள் - நெல்லிக்குப்பம் புகழேந்தி, வி.சி.சந்திரகுமார்
கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள் - வேலூர் டாக்டர் விஜய், பி.ஆர். சுந்தரம், கம்பம் இரா.பாண்டியன், குத்தாலம் அன்பழகன், கரூர் முரளி, வி.பி.ஆர்.இளம்பரிதி, ச.அ.பெருநற்கிள்ளி, குடியாத்தம் குமரன், ஆரணி வெ.அன்புவாணன், வேலூர் ரமேஷ், சேர்க்காடு கென்னடி.

கு.க.செல்வம்
தலைமை நிலைய அலுவலகச் செயலாளர்கள் - துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், கு.க.செல்வம்
தொழிலாளர் அணிச் செயலாளர் - பிடிசி ஜி.செல்வராஜ்
தொழிலாளர் அணி துணைச் செயலாளர்கள் - பிடிசி வெ.பாலு, இராஜா குப்புசாமி, கொல்லாபுரம் இராஜேந்திரன்

அமைப்புசாரா ஓட்டுநர் அணி
கழக சட்டத்திட்டத்தில், கழக துணை அமைப்புகள், சார்பு மன்றங்கள் தலைப்பிலான விதி 31 - பிரிவு 21ன் படி அமைப்புச் சாரா ஓட்டுநர்களின் நலன்கருதி "திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி" என்ற புதிய துணை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அமைப்புச் சாரா ஓட்டுநர் அணித் தலைவர் - டி.எம்.கதிர் ஆனந்த்
அமைப்புச் சாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் - டி.செங்குட்டுவன்
அமைப்புச் சாரா ஒட்டுநர் அணித் துணைச் செயலாளர்கள் - டாக்டர் முத்துராஜா, பணப்பட்டி கே.தினகரன், நாகர்கோவில் எம். சிவராஜ், பொன்னேரி ஏ.ஆர்.டி. உதயசூரியன், விஷ்ணு பிரபு.

விளையாட்டு மேம்பாட்டு அணி
விதி 31 பிரிவு 22ன் படி, தமிழகத்தில் உள்ள விளையாட்டுத் துறையை மேம்படுத்திட "திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி" என்ற புதிய அணியும் உருவாக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர்தயாநிதி மாறன்
விளையாட்டு மேம்பாட்டு அணித் துணைச் செயலாளர்கள் - கெளதம சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், ஈஸ்வரப்பன், பைந்தமிழ் பாரி, வே.நம்பி.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications