திமுக பக்கம் செல்லும் ஓபிஎஸ்? நொடியும் யோசிக்காமல் அவரே கொடுத்த அடடே பதில்! இதுதான் ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கும் நிலையில், கூட்டணி கணக்குகள் இப்போது இறுதியாகி வருகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற ஓபிஎஸ், இப்போது வரை எந்தக் கூட்டணியில் சேரப் போகிறார் என்பதை அறிவிக்கவில்லை. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு அவர் அளித்த பதில் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது. திமுக தலைமையிலான அணிக்கு எதிராக அதிமுக வலிமையான கூட்டணியை உருவாக்கி வருகிறது. பாஜக, பாமக, அமமுக என்று வலிமையான ஒரு என்டிஏ கூட்டணியை அதிமுக- பாஜக இணைந்து உருவாக்கி வருகிறது. அதேநேரம் ஓபிஎஸ் எதிர்காலம் என்னவாகும் என்பதில் கேள்விக்குறியே நிலவுகிறது.

கூட்டணி
கடந்த மாதம் கூட்டணி தொடர்பான கேள்வி எழுந்தபோது "தை பிறந்தால் வழி பிறக்கும்" என ஓபிஎஸ் கூறியிருந்தார். ஆனாலும், தை மாதம் பிறந்த பிறகும் அவர் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதும் தை மாதம் முடிய டைம் இருக்கு என்றே சொல்லி வருகிறார். இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை கூட்டணி தொடர்பாக அவர் அளித்த பதில் பேசுபொருள் ஆகியுள்ளது.
சென்னையில் நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்ற ஓபிஎஸிடம் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கூட்டணி தொடர்பான அறிவிப்பை எப்போது எதிர்பார்க்கலாம் எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ஓபிஎஸ் அதற்கு எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.. அதேபோல நீங்கள் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை..
ஷாக்கான ஓபிஎஸ்
என்ன நடந்தாலும் ஓபிஎஸ், சசிகலா அதிமுக கூட்டணிக்குப் பாதகமாகச் செயல்பட மாட்டார் என டிடிவி தினகரன் சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, "ஓ அப்படியா!" என்று மட்டும் பதிலளித்தார். கூட்டணி குறித்து அறிவிப்பை எப்போது எதிர்பார்க்கலாம் என்ற மீண்டும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே அவர், "இந்த மாத இறுதிக்குள் எதிர்பார்க்கலாம்" என அவர் பதிலளித்தார்.
முடிவு என்ன
திமுக கூட்டணியில் சேர்வது தொடர்பாகவும் ஆலோசனை நடக்கிறதா என்ற கேள்விக்கு அவர், "நீங்கள் எதற்காக இந்த மாதிரி கேள்விகளைக் கேட்கிறீர்கள் எனப் புரிகிறது" என மட்டும் பதிலளித்துச் சென்றார். கூட்டணி குறித்த முடிவை ஓபிஎஸ் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் பதில் கொடுக்காமலேயே செய்து வருகிறார்.
பின்னணி
டிடிவி தினகரனை தொடர்ந்து ஓபிஎஸும் என்டிஏ கூட்டணியில் இணைய வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிமுகவில் மீண்டும் அவரை இணைத்துக் கொள்ள விரும்புகிறார். இதற்காகப் பேச்சுவார்த்தை எல்லாம் நடந்துள்ளது. ஆனால், ஓபிஎஸை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக இருக்கிறார்.
எடப்பாடி ஆதரவாளர்கள் வரிசையாக விட்டுச் செல்லவே ஒரு கட்டத்தில் பிரஸ் மீட்டில் எடப்பாடி பழனிசாமியை அண்ணன் எனச் சொல்லிக் கூட தூதுவிட்டார். ஆனால், எடப்பாடி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஓபிஎஸை நீக்குவது என்பது தான் எடுத்த முடிவு இல்லை.. பொதுக்குழு எடுத்த முடிவு என்றும் அதை மாற்ற முடியாது என்றும் சொல்லிவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருத்தணியில் தவெக வேட்பாளருக்கு வந்த தனிமை கொடுமை.. விஜய் கட்சியில் தெறித்து ஓடும் நிர்வாகிகள்? -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
1000 சவரன் தங்க நகை, மகளுக்கு கடன்! விஜய்யின் சொத்து பத்திரத்தில் முரண்பாடு? திமுக புள்ளி கூறுவதென்ன -
என்னது திமுகவுக்கு வாழ்த்தா? பெரம்பலூர் நாம் தமிழர் வேட்பாளரை மாற்றிய சீமான்.. என்ன நடந்தது? -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
தர்மபுரியில் மாறுது கணக்கு! சௌமியா அன்புமணியை அதிரவைத்த ராமதாஸின் அந்த ஒரு முடிவு! பலே -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications