சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கதற ஆரம்பித்த "பழம் பெருசுகள்".. தெறிக்க விட காத்திருக்கும் இளசுகள்.. பிகேவின் அதிரடி.. திமுக தடாலடி

பிரசாந்த் கிஷோரின் அதிரடிகளால் சீனியர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: பிகே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அதிரடிகளும் திமுகவை வேற லெவலுக்கு எடுத்து சென்று கொண்டிருக்கின்றன.. இதனால் பழம்பெருச்சாளிகள் கதறி கொண்டிருக்க.. இளம் ரத்தங்களோ துடிப்புடன் களமிறங்கி கொண்டிருக்கிறார்கள்.. இதனால் மற்ற கட்சிகளும் அண்ணா அறிவாலயத்தையே உற்று நோக்க தொடங்கிவிட்டன!

Recommended Video

    DMK-BJP Alliance|மீண்டும் நடக்குமா 'யதார்த்த அரசியல்?' | Oneindia Tamil

    5 மாசத்துக்கு முன்பேயே சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராக தொடங்கியது.. அதற்கான வியூகங்கள், பிளான்களை கையில் எடுக்கும் முன்பேயே இந்த கொரோனா வந்து அனைத்தையும் தடுத்து நிறுத்திவிட்டது.

    இருந்தாலும், அந்த கொரோனா தாக்கத்தின் வீரியம் அதிகரித்த சமயத்திலும், ஒருங்கிணைவோம் வா போன்ற பல ஐடியாக்களை பிரசாந்த் கிஷோர் களமிறக்க, அவை பட்டிதொட்டி எங்கும் சென்றடைந்தது.

    துயரத்தில் மக்கள்... குடும்பங்களில் தாண்டவமாடும் வறுமை... என்ன செய்யப் போகிறது அரசு ? -காங்கிரஸ்துயரத்தில் மக்கள்... குடும்பங்களில் தாண்டவமாடும் வறுமை... என்ன செய்யப் போகிறது அரசு ? -காங்கிரஸ்

    திமுக

    திமுக

    இப்போது வைரஸ் தாக்கம் குறைந்து, சட்டசபை தேர்தலுக்கான பார்வை திரும்பி உள்ள நிலையில், கட்சிகள் அந்த விவகாரத்தில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளன.. அந்த வகையில், திமுகவும் சுறுசுறுப்புடன் தயாராகி வருகிறது.

    கழகம்

    கழகம்

    அதன்படி, திமுக சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.. அந்த அறிக்கையில் "கழகத்தின் நிர்வாக வளர்ச்சிக்காகவும், கழகத்தின் பணிகள் செவ்வனவே நடைபெற்றிடவும் விழுப்புரம் தெற்கு மாவட்டம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்), கள்ளக்குறிச்சி தெற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு என்று பிரிக்கப்படுகிறது. புதிய மாவட்டங்களுக்கான பொறுப்பாளர் மற்றும் பொறுப்புக்குழுவும் அறிவிக்கப்படுகிறது" என்று வெளியாகியுள்ளது.

     பொறுப்பாளர்கள்

    பொறுப்பாளர்கள்

    மேலும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக உதயசூரியனும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக வசந்தம் கார்த்திகேயனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.. இப்படி ஒரு அறிக்கையை பார்த்ததுமே திமுக மூத்த நிர்வாகிகள் அரண்டு போய்விட்டனர்.. காரணம், இப்போதுதான் கோவை மாவட்ட திமுகவை, நிர்வாக வசதிக்காக பிரித்தனர்.. அடுத்து, கள்ளக்குறிச்சி பிரிக்கப்பட்டுள்ளது.. இன்னும் அடுத்தடுத்து மாவட்டங்கள் பிரிக்கப்பட உள்ளதாம்.

     பிரசாந்த் கிஷோர்

    பிரசாந்த் கிஷோர்

    எதற்காக இப்படி மாவட்டங்களை பிரிக்கவேண்டும், எதற்காக அதற்கு ஒரு பொறுப்பாளரை நியமிக்க வேண்டும் என்பதே மூத்த தலைகளின் ஐயமாக எழுந்துள்ளது.. அதுமட்டுமல்ல, இவர்களின் ஆதங்கம் அப்படியே பிகே பக்கம் திரும்பி உள்ளது.. பிகே-வை பொறுத்தவரை எதையுமே புதுசாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்.. கட்சிக்கு இளம் ரத்தம் பாயவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

    இளைஞர்கள்

    இளைஞர்கள்

    அவர் கணக்குபடி பார்த்தால், திமுக-வின் பல மா.செ.க்கள் எல்லாம் 60 வயசை கடந்தவர்கள்தான்.. அதுமட்டுமல்ல, இவர்கள்தான் பல வருஷமாக அந்த மாவட்டத்தின் செயலாளராகவும் விடாப்பிடியாக இருந்து வருகிறார்கள்.. இதனால் இவர்களுக்கு கீழ் உள்ள நிர்வாகிகள் அடுத்த பதவிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதை முதலில் மாற்றி, இளசுகளை களம் இறக்குவதே பிகேவின் முக்கிய வேலையாக இருக்கிறது.

     உதயநிதி

    உதயநிதி

    இவர்தான் இப்படி என்றால், உதயநிதியும் அவர் போலவே யோசிக்கிறார்.. திருச்சியில் அன்பில் மகேஷ் உட்பட பல முக்கிய பொறுப்புகளை ஒதுக்கி தந்துள்ளதே அதற்கு சாட்சி.. உண்மையை சொல்ல போனால், திமுகவில் இளைஞர் அணிதான் தற்போது எழுச்சியுடன் இருந்து வருகிறது.. "யாரையும் டிஸ்கஸ் பண்ணாமல் இவராகவே பேட்டி தருகிறார்.. சில சமயம் ஸ்டாலின் பேச்சுகூட உதயநிதி முன்பு எடுபடுவதில்லை" என்ற விமர்சனங்கள் வந்தாலும், உதயநிதியின் சுறுசுறுப்பை ஒரு தரப்பு ரசிக்கவே செய்கிறது.

     நிர்வாக வசதி

    நிர்வாக வசதி

    இதே கருத்துதான் பிகேவினுடையது என்றாலும், அணுகுமுறைகளில் மாற்றம் காணப்படுகிறது.. அதில் ஒன்றுதான், இந்த மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிப்பது என்பது.. இப்படி ஒரு ஐடியாவை சொன்னதே ஐபேக் தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. இதற்கு கட்சி தலைமையும் பச்சை கொடி காட்ட, ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரிக்கும் பொறுப்பு நேரு வசம் ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு பக்கம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் இது சம்பந்தமாக ஆலோசனையும் நடத்தினார்.. தற்போதும் தீவிரமாக நடத்தி வருகிறார்.

    நேரு

    நேரு

    அதாவது ஒவ்வொரு மாவட்டத்தையும் எத்தனை வகையாக பிரிக்கலாம், யாரை பொறுப்பாளராக போடலாம் என்று கள ரீதியாக ஆய்வு செய்து, அந்த ரிப்போர்ட்டை தலைமைக்கு அனுப்புகிறார் முன்னாள் அமைச்சர் நேரு.. அதன்பிறகே அந்த மாவட்டத்துக்கு பொறுப்பாளர் யார் என்பது பற்றி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவாகும் என்று தெரிகிறது. இது கிட்டத்தட்ட அதிமுகவின் பாணிதான் என்றாலும், அந்த பாணியை திமுகவும் கையில் எடுத்துள்ளது பிகேவின் அடுத்த சபாஷாக பார்க்கப்படுகிறது.

    சீனியர்கள்

    சீனியர்கள்

    மேலோட்டமாக பார்த்தால், இதெல்லாம் உள்கட்சி விவகாரம் என்றாலும், ஸ்டாலினின் மேற்பார்வையிலேயே எல்லாம் நடக்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கது. இந்த நியமனங்கள் எல்லாமே அவர் விருப்பப்படியே நடப்பதால், மற்ற சீனியர்களுக்கு சற்று அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது போல தெரிகிறது.

    புகைச்சல்

    புகைச்சல்

    ஏனென்றால், ஒருசில சீனியர்கள், தங்கள் ஆதரவாளர்களும் அந்த பொறுப்பாளர்கள் லிஸ்ட்டில் இடம்பெற விரும்புகிறார்கள். அதற்கான சாத்தியக்கூறுகள் எளிதாக இப்போது அமையவில்லை.. அதுதான் சிக்கலாக உள்ளது. இப்படி சீனியர்கள் புகைச்சல் ஒரு பக்கம் இருந்தாலும், இளைஞர்கள் எழுச்சியும், நியமனமும் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச தொடங்கிவிட்டது என்றே கருதப்படுகிறது!

    English summary
    DMK senior leaders disappoint with prashant kishore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X