டாப் சீக்ரெட் மீட்டிங்.. குமுறித் தள்ளிய மேயர்கள்.. ‘நோட்ஸ்’ எடுத்த முக்கிய புள்ளி! விரைவில் அதிரடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை : மாநகராட்சி மேயர்கள், பதவிக்கு வந்து ஒன்பது மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் இருக்கும் 21 திமுக மேயர்களையும் அழைத்து, பிரச்சனைகளை கேட்டு நோட்ஸ் எடுத்திருக்கிறாராம் திமுகவின் அதிகாரப் புள்ளி ஒருவர்.

பல இடங்களில் மேயர்கள் - திமுக கவுன்சிலர்கள் இடையில் பிரச்சனைகள் நிகழ்ந்து வருகின்றன. இது தலைமையின் கவனத்திற்கும் சென்றது.

இந்நிலையில், மேயர்கள் அனைவரையும் அழைத்துப் பேசி, அவர்கள் சொல்லும் விஷயங்களை அப்செர்வ் செய்திருக்கிறாராம் திமுகவின் அதிகார மையமாக விளங்கும் ஒருவர்.

சில வாரங்களுக்கு முன்பு முதல்வருக்கு மிக நெருக்கமான அந்தப் புள்ளி, முதல்வரின் ஆலோசனைப்படி, எம்.எல்.ஏக்களை அழைத்து கருத்துகளைக் கேட்டு, முதல்வருக்கு ரிப்போர்ட் அனுப்பியதாக தகவல் வெளியாகி இருந்தது.

இலாகா மாற்றம்

இலாகா மாற்றம்

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பதவி ஏற்றார். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை அமைச்சர்கள் பலர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, கடுமையான விவாதங்கள் எழுந்தபோதும் அமைச்சரவை மாற்றம் நடைபெறவில்லை. அமைச்சர் ராஜ கண்ணப்பனின் இலாகா மட்டும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி பல அமைச்சர்களின் துறைகள், இலாகாக்கள் மாற்றப்பட்டன.

 ரிப்போர்ட் அடிப்படையில்

ரிப்போர்ட் அடிப்படையில்

ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் புதிதாக இணைக்கப்பட்டார். அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக கிடைத்த ரிப்போர்ட், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் இருக்கும் கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் இந்த அமைச்சரவை இலாகா மாற்றங்கள் நடந்ததாக கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உளவுத்துறை மட்டுமல்லாமல் இன்னொரு நம்பிக்கைக்குரிய புள்ளி கொடுத்த ரிப்போர்ட்டும் இந்த இலாகா மாற்றத்தில் பங்காற்றி இருக்கிறதாம்.

எம்.எல்.ஏக்களை அழைத்து

எம்.எல்.ஏக்களை அழைத்து

முதல்வர் ஸ்டாலினுக்கு எல்லாமும் ஆன அதிகாரமிக்க புள்ளி, நேரடியாக எம்.எல்.ஏக்களை அழைத்து பேசியதாக கூறப்பட்டது. ஆட்சி பற்றி தொகுதி மக்களின் கருத்து என்னவாக இருக்கிறது, நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்றெல்லாம் கேட்டதாகவும், பெரும்பாலான எம்.எல்.ஏக்கள், தங்கள் மாவட்ட அமைச்சர்கள் பற்றி குமுறிக் கொட்டியதாகவும் கூறப்படுகிறது. எம்.எல்.ஏக்களின் கருத்துகளை அப்சர்வ் செய்த அவர், முதல்வருக்கு தனியாக ஒரு ரிப்போர்ட்டை கொடுத்திருக்கிறாராம்.

மேயர்களிடம் என்கொயரி

மேயர்களிடம் என்கொயரி

இதையடுத்து, சமீபத்தில், தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சி மேயர்களையும் அழைத்து விசாரித்திருக்கிறாராம் அவர். இன்னும் 16 மாதங்களில் எம்.பி தேர்தல் வரவிருக்கும் நிலையில், அதற்குள் கட்சிக்குள் மேல் மட்டத்தில் நிலவும் சிக்கல்களைத் தீர்த்துவிட வேண்டும் என்பது தான் முதல்வர் ஸ்டாலினின் திட்டமாம். அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கையில் அந்த முக்கிய புள்ளி ஈடுபட்டு வருகிறாராம்.

 மேயர் vs கவுன்சிலர்கள்

மேயர் vs கவுன்சிலர்கள்

பல மாநகராட்சிகளில் திமுக கவுன்சிலர்களே மேயர்களுக்கு எதிராகச் செயல்படுவது தலைமையின் கவனத்திற்குச் சென்றுள்ளது. சில மாநகராட்சிகளில், திமுக கவுன்சிலர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களுக்கு தகவல்கள் கொடுத்து உதவி வருகிறார்களாம். இது மேயர்களுக்கு குடைச்சலாகவும் மாறியுள்ளது. மாநகர ஆணையர்கள் மீதும் மேயர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களாம். இதையெல்லாம் வைத்துத்தான் அவர்களை அழைத்திருக்கிறார் அந்த அதிகார மையப் புள்ளி.

ப்ளீஸ்.. மாத்துங்க

ப்ளீஸ்.. மாத்துங்க

அப்போது சில மேயர்கள், முந்தைய அதிமுக ஆட்சியில் மாநகராட்சி ஆணையர்களாக இருந்தவர்களே பெரும்பாலான இடங்களில் இப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் நாங்கள் சொல்வதைக் கேட்பதாகவே இல்லை. அவர்களை வைத்து வேலை வாங்க முடியவில்லை. சின்ன திட்டங்கள் கூட இழுத்தடிக்கப்படுகின்றன. வேண்டுமென்றே திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது போலவே அவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன. ஆணையர்களை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்துள்ளனராம்.

விரைவில் அதிரடி

விரைவில் அதிரடி

மேலும், மதுரை, கோவை மாநகராட்சி மேயர்கள் மீது திமுகவினரே புகார் கூறுவது தொடர்ந்து வருவதால் அவர்களிடம் தனியாகவும் விசாரித்துள்ளார் அந்தப் புள்ளி. இந்த 21 மேயர்களின் கருத்துகளும், நிலவும் பிரச்சனைகளும், முதல்வர் ஸ்டாலினின் டேபிளுக்கு ரிப்போர்ட்டாக செல்ல இருக்கிறதாம். இதனால், விரைவில் மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+