வட சென்னையை அள்ளும் திமுக.. விஜய் கட்சி 3 தொகுதிகளில் வெல்லும்! அதிமுகவுக்கு பெரிய ஷாக்! புதிய சர்வே
சென்னை: சென்னை மண்டலத்திற்கான ஸ்பிக் மீடியா சர்வே வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு சென்னையில் 9 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் 3 தொகுதிகளில் தவெக வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் ஸ்பிக் மீடியோ சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சி தரும் வகையில் அதிமுக எந்தவொரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல களச் சூழல் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டப் பல கருத்துக்கணிப்புகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சென்னை மண்டலத்திற்கான ஸ்பிக் மீடியா சர்வே இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மண்டலம்
இதில் மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர், ஆர்கே நகர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.விக நகர், எழும்பூர், துறைமுகம் ஆகிய 9 தொகுதிகளில் திமுக வெல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பலருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் தவெக 3 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதிமுக எந்தவொரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
9 இடங்களில் திமுக கூட்டணி
மதுரவாயல் தொகுதியில் திமுக 35.46% வாக்குகளைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக 28% வாக்குகளுடன் 2வது இடத்தைப் பெறும் என்றும் அதிமுக 25% வாக்குகளுடன் 3வது இடத்திற்குத் தள்ளப்படும் என ஸ்பிக் மீடியா சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மாதவரம் தொகுதியில் திமுக 35.9% வாக்குகளைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தவெக (28%), அதிமுக(22%) தொகுதிகளில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவெற்றியூரில் திமுக 33% வாக்குகளைப் பெறும் நிலையில், தவெக (29%), அதிமுக (23%) அடுத்தடுத்த இடங்களில் வரும் கூறப்பட்டுள்ளது. ஆர்கே நகர் தொகுதியில் திமுக 39% வாக்குகளையும், அதிமுக 25% வாக்குகளையும், தவெக 24% வாக்குகளையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் தொகுதி
முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் திமுக 32% வாக்குகளைப் பெற்று வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக மற்றும் அதிமுக முறையே 29% மற்றும் 27% வாக்குகளை மட்டுமே பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர வில்லிவாக்கம் (திமுக- 32%, தவெக- 31%, அதிமுக- 24% வாக்குகள்), திரு. விக நகர் (திமுக- 44%, தவெக- 24%, அதிமுக- 23% வாக்குகள்), எழும்பூர் (திமுக- 34%, தவெக- 27%, அதிமுக- 25% வாக்குகள்), துறைமுகம் (திமுக- 35%, தவெக- 29%, அதிமுக- 25% வாக்குகள்) தொகுதிகளில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவுக்கு 3 தொகுதி
தவெகவை பொறுத்தவரை ராயபுரம் தொகுதியில் 34% வாக்குகளைப் பெற்று வெல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு திமுக, தவெக இடையே கடும் போட்டி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல அம்பத்தூர் தொகுதியிலும், பெரம்பலூர் தொகுதியிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தவெக வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு தான் பெரிய ஷாக்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வடக்கு சென்னையில் எந்தவொரு தொகுதியிலும் வெல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சர்வேயில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே 2வது இடத்தை பிடித்து இருக்கிறது. மற்ற தொகுதிகளில் 3வது இடத்தையே பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
Election-லிருந்து Escape சரி! 3000000 ரூபாயை எப்போ திருப்பி தருவீங்க கமல்? எதிர்ப்பார்ப்பில் மநீம -
அண்ணாமலை வாபஸ் வாங்க போகிறாரா? கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஷாக் கண்டிஷன்? விழிக்குது பாஜக -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம்












Click it and Unblock the Notifications