இந்த ஆவணங்கள் இருக்கா? நீங்களும் இலவச வீட்டுமனை பட்டா பெறலாம்.. ஆண்டு வருமானம் இவ்வளவு இருக்கணுமா?
சென்னை: தமிழகத்தில் சொந்தமாக ஒரு சென்ட் நிலமாவது இருக்காதா என்று ஏங்கும் ஏழை எளிய மக்களின் கனவை நனவாக்கும் உன்னதமான திட்டம்தான் அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம்.. இந்த திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன? யார் யாருக்கு இலவச பட்டா கிடைக்கும்? தகுதிகள் என்ன? எல்லா அரசு நிலங்களுக்கும் பட்டா கிடைத்துவிடுமா? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி போன்ற வளர்ந்து வரும் மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற ஏழைகளுக்கு, அவர்கள் நீண்டகாலமாக வசித்து வரும் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் ஒரு சென்ட் வரையிலான நிலத்தை அரசு இலவசமாக வழங்குகிறது.

இலவச வீட்டு மனை பட்டா
இந்த நிலத்தை பெறுவதற்கு முக்கியத் தகுதியாக விண்ணப்பதாரர் தமிழகத்தைச் சேர்ந்தவராகவும், 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதிமுறையாகும்..
எல்லாவற்றிற்கும் மேலாக, விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வேறு எந்த ஒரு நிலமோ அல்லது வீடோ இருக்கக்கூடாது என்பது மிக முக்கியமான விதியாகும்.
ஒருவருடைய ஆண்டு வருமானம் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் மட்டுமே இந்தப் பட்டாவை முழுமையாக இலவசமாக பெற முடியும். வருமானம் இதற்கு மேல் இருக்கும் பட்சத்தில், அவர்கள் நிலத்திற்கான குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
அரசு ஆவணங்கள்
பொதுவாக புறம்போக்கு நிலங்களில் குறைந்தது 5 ஆண்டுகளாவது வசித்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்கு ஆதாரமாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் அந்த இடத்தில் வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது அல்லது மின்சார ரசீது போன்ற ஆவணங்கள் அவசியமாகும்.
அதே சமயம், எல்லா அரசு நிலங்களுக்கும் பட்டா கிடைத்துவிடும் என்று நினைப்பது தவறு. பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் இயற்கை சமநிலைக்கும் பாதிப்பு ஏற்படும் இடங்களில் வசிப்பவர்களுக்குப் பட்டா வழங்கப்படாது.
உதாரணமாக, நீர்நிலைகளான ஏரி, குளம், கால்வாய் போன்ற இடங்களிலும், வனத்துறைக்குச் சொந்தமான காடுகள் மற்றும் மலைப் பகுதிகளிலும் வசிப்பவர்களுக்குப் பட்டா கிடைக்க வாய்ப்பே இல்லை. மேலும் மயானங்கள், சாலை ஓரங்கள் மற்றும் மத்திய அரசுக்குச் சொந்தமான ரயில்வே அல்லது ராணுவ நிலங்களில் குடியிருப்பவர்களுக்கும் மாநில அரசு பட்டா வழங்க முடியாது.
ஆண்டு வருமானம்
இந்த திட்டம் முழுக்க முழுக்க வசிப்பதற்கான குடியிருப்புகளுக்கு மட்டுமே என்பதால், வணிக ரீதியான ஆக்கிரமிப்புகளுக்குப் பட்டா கோர முடியாது. கோவில், மசூதி அல்லது தேவாலயங்களுக்குச் சொந்தமான நிலங்களிலும் தனிநபர் பட்டா பெற இயலாது.
அரசு வழங்கும் இந்தப் பட்டா என்பது வெறும் காகிதம் அல்ல, அது ஒரு குடும்பத்தின் வாழ்வாதார பாதுகாப்பு ஆகும்.. இந்தப் பட்டாவைப் பயன்படுத்தி வங்கிகளில் கடன் பெற்றுத் தரமான வீடுகளைக் கட்டிக்கொள்ள முடியும் என்பது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.
தமிழக அரசு பலே
அதேபோல, இந்த பட்டாக்கள் பெரும்பாலும் குடும்பத் தலைவிகளின் பெயரிலேயே வழங்கப்படுவதால், பெண்களுக்கு சொத்துரிமை கிடைப்பதோடு குடும்பத்தில் அவர்களின் மதிப்பும் உயர்கிறது.
ஆனால், இந்தப் பட்டா நிலங்களை உடனடியாக விற்க முடியாது என்பதால், இதனை ஒரு முதலீடாகப் பார்க்காமல் வாழ்நாள் சொத்தாகக் கருதிப் பராமரிக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகம் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து, உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் நீங்களே கண்காணிக்கும் வசதி இன்று இருப்பதால், இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடியாகப் பயன் பெறுவதே புத்திசாலித்தனம்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications