அன்புமணிக்கு டபுள் ஷாக்? வன்னியர் வாக்குகளில் பிளவு.. யாருக்கு லாபம்? பாமகவில் திருப்பம்
சென்னை: அன்புமணி ராமதாஸ் தனது தந்தைக்கும், குருவுக்கும் துரோகம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டிய விருதாம்பிகை, அவரை தோற்கடிக்க கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.. தந்தை ராமதாஸ் ஒருபுறம், காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மறுபுறம் என இருமுனை நெருக்கடியில் அன்புமணி சிக்கியுள்ளதால் வன்னியர் வாக்குகள் சிதறி திமுகவுக்கு சாதகமாக மாறும் நிலை உருவாகியுள்ளது..
மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

பிறகு விருதாம்பிகை செய்தியாளர்களிடம் பேசும்போது, "2019 தேர்தலில் இருந்தே நாங்கள் திமுகவுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கிறோம். காரணம், மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து, அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய பங்கீடு கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
பாமகவில் புதிய திருப்பம்
27 எம்எல்ஏ சீட் வன்னியர்களுக்கு கொடுத்திருக்கிறார். கலைஞர் ஆட்சியிலும் கூட அந்த 21 தியாகிகளுக்குமே 3 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். ஓய்வூதியம் இப்போதுவரை கொடுத்து வருகிறார்கள். 21 தியாகிகளுக்கும் சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு போராளி என்று எங்களுக்கான ஒரு அங்கீகாரத்தை கொடுத்து, விழுப்புரத்தில் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டி கொடுத்திருக்கிறார்.
இந்த 21 தியாகிகளுக்கோ, இந்த வன்னியர் சமுதாய மக்களுக்கோ, அன்புமணி, எடப்பாடி எதுவும் செய்தது கிடையாது. 2021 தேர்தலில், 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுக்கபோவதாக சொல்லிவிட்டு, அன்புமணி என்ன செய்தாரு? 20 சதவிகிதம் வன்னியர் இருக்கும்போது, கணக்கெடுப்பே எடுக்காமல் சரியான முறையில் கொடுக்காமல் நீங்கள் சொன்னதால் அது அமலுக்கு வராமல் போய்விட்டது. அதெல்லாம் முடிந்து போன விஷயம் என்று எடப்பாடி சொல்கிறார்.
என் அப்பா குரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு 2-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், "அப்படியே விட்டுவிடுங்கள், பணம் செலவு செய்ய வேண்டாம்" என அன்புமணி தெரிவித்துள்ளார்.
அப்பாவுக்கு துரோகம்
அன்று எங்கள் அப்பாவுக்கு துரோகம் செய்தார்கள், இப்போது அவர்களுடைய அப்பாவுக்கு துரோகம் செய்கிறார். அன்புமணி காசுக்காகவும், சீட்டுக்காகவும் தான் ஒவ்வொரு கட்சிக்கும் விலை போகிறார். இந்த தேர்தலில், அன்புமணியின் முகத்திரையை கிழிப்பதுதான் எங்களின் முக்கியமான ஒரே நோக்கமாக இருக்கும். எடப்பாடியின் டெபாசிட்டையும் காலி செய்வோம்" என்றார் ஆவேசமாக,
விருதாம்பிகை தெரிவித்த மேற்கண்ட தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. ஏற்கனவே பாமக 2 பிரிவுகளாக சிதறியுள்ள சூழலில், அன்புமணி ராமதாஸ் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. தருமபுரி தொகுதியில் அன்புமணியின் மனைவி சௌமியா வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்..
வன்னியர் வாக்குகள் பிளவு?
அதேபோல, தந்தை ராமதாஸ் தனது மகனுக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கி சசிகலாவின் அஇபுதமமுக கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.. அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற பெயரில் தனது ஆதரவாளர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ள ராமதாஸ், அன்புமணி தரப்பு போட்டியிடும் 11 தொகுதிகளில் நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தி மகனுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார்..
ஒருபுறம் தந்தை ராமதாஸ், மறுபுறம் தங்கை போன்ற விருதாம்பிகையின் தீவிர எதிர்ப்பு என இருமுனை தாக்குதல்களை அன்புமணி எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது..
விருதாம்பிகையின் இந்த அதிரடி முடிவும், பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவும் வடதமிழகத்தில் வன்னியர் வாக்குகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.. அதேசமயம், அதிமுக கூட்டணியில் உள்ள அன்புமணிக்கு இந்த உட்கட்சி மோதல்கள் மற்றும் குடும்ப எதிர்ப்புகள் பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றன..
யாருக்கு லாபம்? திமுகவுக்கா
வன்னியர் சங்கத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் மற்றும் ராமதாஸின் ஒரு பகுதியினர் தனித்து நிற்பது வன்னியர் வாக்குகளை சிதறடிக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்த வாக்குச் சிதறல் நேரடியாக திமுகவுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்..
வன்னியர் சமூக வாக்குகளை அறுவடை செய்வதில் திமுக முந்துமா அல்லது அதிமுக - பாமக கூட்டணி தக்கவைக்குமா என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியவரும்.. ஆனால் இப்போதைக்கு இந்த மோதல் போக்கு திமுகவுக்கு மிகப்பெரிய அரசியல் பலமாக மாறியுள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
துணை முதல்வர் பதவி.. நாக்பூர் ரூட்டில் எடப்பாடிக்கு செக் வைத்த நயினார், வானதி! கேம் அப்படியே மாறுது? -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
"எனக்கும் மரணம் வரும்.. என்னைப் புதைத்தாலும் எனது திட்டங்களைப் புதைக்க முடியாது” - முதல்வர் ஸ்டாலின் -
11% வாக்கு வித்தியாசம்.. திமுக 200+ கண்டிப்பாக வரும்! சர்வே சொல்லும் ரகசிய தகவல்.. கவனிச்சீங்களா! -
அங்க மூணாவதா ஒருத்தன் இருப்பானே.. தம்பி மூலம் செந்தில் பாலாஜி செக்..விஜய பாஸ்கருக்கு ஷாக் -
எடப்பாடி ரொம்ப டென்ஷன் ஆகுறாரு.. இனி கெட்டவார்த்தையில் பேசுவார் போல! கலாய்த்த உதயநிதி -
செல்வந்தர் அதிமுக வேட்பாளர் ₹1000 கோடி.. தமிழக அமைச்சர்களின் மனைவியர் பெயரில் சொத்து மதிப்பு பாருங்க -
பைசா செலவில்லை.. வெறும் ஏஐ வீடியோக்கள் - சொகுசாகப் பரப்புரை செய்யும் காங்கிரஸ் -
ஸ்டாலின், விஜய் தொகுதிகளை விடுங்க.. ரெக்கார்டு படைக்கும் கரூர்.. தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள்! -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
எடப்பாடி பழனிசாமிக்கு கொலைவெறி அடங்கவில்லை.. 1979ல் நடந்த சம்பவம்.. ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்! -
159 வேட்புமனுக்கள் வாபஸ்.. இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்!












Click it and Unblock the Notifications