சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மலச்சிக்கலா?.. 6-லிருந்து 60 வரை கவலையை விடுங்கள்.. இந்த கசாயத்தை கையில் எடுங்க.. டாக்டர் கவுதமன்

Google Oneindia Tamil News

சென்னை: மலச்சிக்கலால் அவதிப்படுவோர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தக் கூடிய அருமருந்து குறித்து வர்மா ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கவுதமன் விளக்கியுள்ளார்.

Recommended Video

    மலச்சிக்கலை சரிசெய்யும் கசாயம் குறித்து டாக்டர் கவுதமன் விளக்கம்

    இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவத்தின் டாக்டர் கவுதமன், ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் காலையில் எழுந்தவுடன் உடலில் இருக்கக் கூடிய கழிவுகள் முழுமையாக வெளியேறுவதற்கு உதவி செய்ய ஒரு கசாயம் குறித்து பார்ப்போம்.

    மலச்சிக்கல் என்றால் என்ன என்பது குறித்து நம் அனைவருக்கும் தெரியும் உடலில் இருந்து வெளியேற வேண்டிய கழிவுகள் உடலை விட்டு வெளியேறாமல் தேவையற்ற அளவு உடலில் தங்கிவிடும்.

    கோவாக்சின்... குரங்கு பரிசோதனையில்... அபாரமான நோய் எதிர்ப்பு சக்தி... முழு வெற்றி!! கோவாக்சின்... குரங்கு பரிசோதனையில்... அபாரமான நோய் எதிர்ப்பு சக்தி... முழு வெற்றி!!

    கழிவுகள்

    கழிவுகள்

    உடலில் எல்லாவிதமான நோய்களுக்கும் அது காரணமாக அமைகிறது. உடலில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்றி உடலை ஆரோக்கியப்படுத்துகிற அருமருந்து மலமிளக்கி கசாயம் ஆகும்.

    இந்த கசாயம் செய்ய வேண்டிய பொருட்களை பார்ப்போம்:

    நில ஆவாரை இலை

    சோம்புசுக்குதனியா

    மேற்கொண்ட பொருட்களின் பொடிகளை ஒவ்வொன்றும் 3 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 300 மில்லி தண்ணீரில் இவற்றை போட்டு அந்த நீர் 100 மில்லியாக இருக்கும் போது அதை வடிக்கட்டி விட்டு குடிக்க வேண்டும். தேவைப்பட்டால் அதனுடன் கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். காலையில் எழுந்தவுடன் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி உடலை சுத்தமாக்கக் கூடிய அருமருந்து இது.

    வயதானவர்கள்

    வயதானவர்கள்

    இந்த பிரச்சினை வயதானவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இதய நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மலம் வரவில்லை என முக்க ஆரம்பித்தால் அது அவர்களுக்கு சோர்வை கொடுக்கும். இந்த பிரச்சினையெல்லாம் இல்லாமல் காலையில் எழுந்தவுடன் உடலில் இருந்து மலம் வெளியேற மலமிளக்கி கசாயத்தை பயன்படுத்துங்கள்.

    மலம் கழித்தல்

    மலம் கழித்தல்

    இரவு படுக்க போகும் முன் ஒருவேளை சாப்பிட்டால் போதும். உடலில் ஏற்படும் நோய்கள் பெரும்பாலும் 3 தோஷங்களால்தான் ஏற்படுகிறது. அவை வாத தோஷம், பித்த தோஷம், கப தோஷம் ஆகும். இவற்றில் பித்தத்தால் வரும் பிரச்சினைகள் என பார்க்கும் போது செரிமானக் கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள், வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல். கடுமையான மலச்சிக்கல் பிரச்சினைகள். அடிக்கடி மலம் கழித்தல் போன்றவை ஏற்படுகிறது.

    நோய்கள்

    நோய்கள்

    பித்த பிரச்சினை வரும் போது பித்தத்தை உடலிலிருந்து வெளியேற்றிவிட்டோமேயானால் பெரும்பாலான நோய்கள் கட்டுக்குள் வரும். அந்த வகையில் இந்த மலமிளக்கி கசாயம் மலத்தை மட்டுமல்ல பித்தத்தையும் வெளியேற்றக் கூடிய அருமருந்தாகும். தினமும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தினந்தோறும் காலை உணவை தவிர்ப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

    குழந்தைகள்

    குழந்தைகள்

    காலையில் குழந்தை எழுந்த 5ஆவது நிமிடத்தில் வயிறு சுத்தமாகி விட்டால் அவர்கள் நிச்சயம் உணவை சாப்பிட்டுவிட்டு செல்வர். குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய மலச்சிக்கலை இந்த கசாயம் போக்கும். இப்போது பள்ளிகள் விடுமுறையில் உள்ளன. குழந்தைகள் தங்கள் இஷ்டத்திற்கு உணவுகளை உட்கொள்வார்கள்.

    பூச்சிகள்

    பூச்சிகள்

    வீட்டில் இருக்கும் அவர்களுக்கு இந்த மலமிளக்கி கசாயத்தை கொடுக்கலாம். இந்த கசாயத்தை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 டீஸ்பூன் (10 எம்எல்) கொடுக்க வேண்டும். 5 முதல் 15 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு 20 மில்லி கொடுக்கலாம். 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவு படுக்க போகும் போது 50 மில்லி முதல் 100 மில்லி வரை குடிக்கலாம். வயிற்றில் இருக்கும் பூச்சிகளால் இருக்கும் கழிவுகளையும் இது போக்கும்.

    வயதானவர்கள்

    வயதானவர்கள்

    கர்ப்பிணிகள், வயதானவர்கள், இதய நோய் உள்ளவர்கள் முதல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வரை அனைவரும் இதை உட்கொள்ளலாம். இந்த மலமிளக்கி கசாயத்தை தினசரி சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தாலே நம்மாலும் ஆயுள் முழுவதும் நோயின்றி இருக்க முடியும் என்றார்.

    English summary
    Sri Varma Ayurveda hospital Dr Gowthaman says relief for constipation for all age groups.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X