ஸ்டாலினின் ஸ்மார்ட் ஒர்க்.. இப்பவும் எடப்பாடி தப்பு செஞ்சுட்டாரோ.. பிரியும் வாக்குகள் .. தகதக களம்
திமுகவுக்கே தற்போது வெற்றி வாய்ப்புகள் சாதகமாக உள்ளதாக கூறப்படுகின்றன
சென்னை: நடக்க போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாகி உள்ளன.. மாநிலம் முழுவதும் அந்தந்த கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும், தலைவர்களும் மும்முரமாய் களத்தில் பணியாற்றி வருகிறார்கள்.. இந்த தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது..!
இதுவரை இப்படி ஒரு தேர்தலை தமிழகம் சந்தித்திருக்காது என்றே சொல்லலாம்.. திமுக, அதிமுக என்ற இரு பெரும் ஜாம்பவான் கட்சிகளை முன்னிறுத்தியே மற்ற கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டு வருவது வழக்கம்.
இதில் சீமான் மட்டுமே விதிவிலக்கு என்று சொல்லலாம்.. இப்போதுவரை கூட்டணி என்ற விஷயத்தில் அவர் யாருடனும் உடன்படுவதே கிடையாது.. தோற்றாலும் சரி, தோற்போம் என்று உறுதியாக தெரிந்தாலும் சரி, சிங்கிள் சிங்கமாகவே போட்டியிட்டு வருகிறார்.

தனித்து போட்டி
தேமுதிக உட்பட மற்ற கட்சிகள் சூழல் காரணமாக, உடன்பாடுகள் எட்டப்படாத நிலையில் சில சமயங்கள் தனித்தும், பல சமயங்களில் கூட்டணியிட்டும் போட்டியிட்டு வருகின்றன.. இந்த முறை தேர்தலில் திமுக கூட்டணியை எடுத்து கொண்டால், இழுபறியே நீடித்து வருகிறது.. காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகித்தாலும், இத்தனை நாள் இழுபறி எந்த தேர்தலிலும் வந்ததில்லை.. மதிமுக, விசிகவுக்கு தனிச்சின்னம் பிரச்சனை பிரதானமாக உள்ளது.. மற்றொரு பக்கம் ஒரே தொகுதிகளை வேறு கட்சியும் கேட்பதால், சமாதான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது..

விசிக
அதேசமயம் விசிக தன்னுடைய கறார்தன்மையை இழக்காமல் உள்ளது... ஒருவேளை மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் தாங்கள் கேட்கும் இடங்களை திமுக தரமுடியாத பட்சத்தில், அந்த குறிப்பிட்ட வார்டுகளில் மட்டும் தனித்து போட்டியிடுவது என்ற உத்தியை காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கையாண்டு உள்ளதாக தெரிகிறது. எனினும் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியையும் அதிருப்திக்கு ஆளாக்காமல் திமுக சரிக்கட்டிவிடும் என்றே தெரிகிறது.. காரணம், திமுகவுக்கு பலம் சேர்த்து கொண்டிருப்பதே கூட்டணி கட்சிகள் தான் என்பதை மறுக்க முடியாது.

திமுக
அதிமுகவை பொறுத்தவரை அங்கு கூட்டணியே இல்லை.. கடந்த முறை சட்டசபை தேர்தலில் அதிமுக மண்ணை கவ்வ காரணமே, பலவீனமான கூட்டணிதான்.. பாஜக, பாமக, கூட்டணியில் இருந்தும் அதிமுக சோடை போய்விட்டது.. இந்த முறை, பாஜகவும் இல்லை, பாமகவும் இல்லை.. முதல்முறையாக அதிமுக தனித்து போட்டியிடுகிறது.. ஏற்கனவே அக்கட்சியில் உட்பூசல்கள் தலைவிரித்தாடி வரும் நிலையில், கூட்டணி பிரச்சனையும் சேர்ந்து கொண்டுவிட்டது அதிமுகவுக்கு மைனஸாகவே பார்க்கப்படுகிறது.

பிளஸ் அதிமுக
அதேசமயம் பிளஸ் ஆக உள்ள விஷயங்கள் என்னவென்று பார்த்தால், 2, 3 வார்டுகளில் வெற்றிபெற்றால்கூட பேருராட்சி துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளை வாங்கிவிடலாம் என்று அக்கட்சி நம்புகிறது.. உள்ளூர் கூட்டணியிலும் அதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிகிறது... இதுபோக, திமுக மீதான பொங்கல் தொகுப்பு, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்களில் மக்களுக்கான அதிருப்தியையும் தங்களுக்கு சாதகமாக பிரச்சாரத்தில் பயன்படுத்தி கொள்ளக்கூடும்... எல்லாவற்றுக்கும் மேலாக, கிராமப்புறங்களில் இரட்டை இலைக்கு செல்வாக்கு இன்னமும் அக்கட்சிக்கு இருக்கவே செய்கிறது.. அதனால், பேருராட்சிகளில் அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கக்கூடும் என்றே கணக்கு போடப்படுகிறது.

அதிமுக கூட்டணி
எனினும், அதிமுக கூட்டணி விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டதோ என்றுகூட சலசலக்கப்பட்டு வருகிறது.. காரணம், பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்கியதை ஒரு சாரார் குறையாகவே பார்க்கிறார்கள்.. ஒன்று, பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட்டிருக்க வேண்டும்... அல்லது முழுமையாக கூட்டணியைவிட்டு விலகியிருக்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு, பாஜக எதிர்ப்பை கையில் எடுத்திருக்ககூடாது என்ற முணுமுணுப்புகளும் எழுகின்றன.

பலவீனங்கள்
அதிமுகவின் இந்த பலவீனங்கள்தான் திமுகவுக்கு தற்போது பக்கபலமாக மாறி கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, தங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும், போதுமான வாக்கு வங்கிகளை பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பாமக, பாஜக கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளன.. நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, விஜய் மக்கள் இயக்கம் போன்ற கட்சிகளும் களமிறங்கிவிட்டதால், ஓட்டுக்கள் பெரும்பாலும் பிரியக்கூடிய சாத்தியங்கள் உள்ளன..

தனித்து போட்டி
இந்த ஓட்டுக்கள் பிரிவது யாருக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்ற சந்தேகமும் எழுகிறது.. கூட்டணியுடன் களமிறங்கும் திமுகவைவிட, தனித்து போட்டியிடும் அதிமுகவையே அந்த ஓட்டுக்கள் பிரிக்கக்கூடும் என்கிறார்கள்.. வழக்கமாக, உள்ளாட்சி தேர்தல்கள் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றி பெறும் என்பது இயல்பான விஷயம்.. இந்த முறை அதிமுகவின் சறுக்கல்களும் சேர்ந்துள்ளதால், திமுக தங்களது வழக்கமான வாக்குவங்கியைவிட இந்த முறை வெற்றியை பெற்றுவிடக்கூடும் என்பதே தற்சமய களநிலவரமாக உள்ளது.
-
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications