Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போனில் பேசிய வலதுகரம்.. “முன்வைத்த டீல்” - கொதித்த ஈபிஎஸ் டீம் புள்ளிகள்.. கட் அண்ட் ரைட்டாக நோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் சமாதான பேச்சுவார்த்தையை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கட் அண்ட் ரைட்டாக நிராகரித்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பு முன்வைத்த டீலிங் ஈபிஎஸ் தரப்பை கோபப்படுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    சின்னம்மாவும் வரனும்- பாசம் காட்டும் OPS

    அதிமுக பொதுக்குழு வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்புடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள்.

    ஈபிஎஸ் தரப்பின் முக்கிய புள்ளிகளிடம் அவர்கள் பேசும்போது கட்சியில் இரு அணியினரும், சரிபாதி பொறுப்புகளை வைத்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர்.

    அதனை ஏற்றுக்கொள்ளாத ஈபிஎஸ் தரப்பினர், இப்படி ஒரு எண்ணம் இருந்தால், அது சமரச பேச்சுவார்த்தையே கிடையாது, விதண்டாவாதம் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனராம்.

    தீர்ப்புக்குப் பிறகு

    தீர்ப்புக்குப் பிறகு

    ஈபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23க்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்றைய தேதியில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ்ஸூம் இருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

    ஓபிஎஸ் - ஈபிஎஸ்

    ஓபிஎஸ் - ஈபிஎஸ்

    இதற்கிடையே அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என அழைப்பு விடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். பழைய கசப்புகளை மறந்து செயல்படுவோம், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றார் ஓபிஎஸ். ஆனால் இந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக நிராகரித்தார். பொதுக்குழுவுக்கு வந்து தனது செல்வாக்கை நிரூபியுங்கள் என ஓபிஎஸ்ஸுக்கு சவால் விடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

    போனில் பேசிய வலது கரம்

    போனில் பேசிய வலது கரம்

    தீர்ப்பு வந்த நாளில் இருந்தே, ஓபிஎஸ் தரப்பினர் எடப்பாடி பழனிசாமியோடு பேசுவதற்கு முயன்று வருகின்றனர். ஆனால், அவர்களோடு பேசத் தயாராக இல்லை என ஈபிஎஸ் முரண்டு பிடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸின் வலது கரமான வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி தரப்பின் முக்கிய புள்ளிகளான வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரிடம் போனில் பேசி இருக்கிறார்.

    சமரசம்?

    சமரசம்?

    அப்போது, இதற்கு மேலும் பூசலை தொடர ஓபிஎஸ் விரும்பவில்லை, இணைந்து செயல்படுவதுதான் கட்சிக்கும், தொண்டர்களுக்கும், நமக்கும் நல்லது, இரு தரப்பும் அமர்ந்து பேசலாம். பிரச்சனை ஏற்பட்டதே இருவரும் சமமாக நடத்தப்படவில்லை என்பதால் தான். இரு அணிகளும் சமமான அளவு பொறுப்புகளை எடுத்துக் கொள்ளலாம், இதோடு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவோம் எனக் கூறியுள்ளார்.

    சரிபாதியா.. நெவர்

    சரிபாதியா.. நெவர்

    அவரது இந்த யோசனையைக் கேட்டதுமே ஈபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் கொதித்துப்போய் உள்ளனர். 90 சதவீத நிர்வாகிகள் ஈபிஎஸ் பக்கம் இருக்கும்போது, சரிபாதி என்ற கணக்கு எப்படி சரியாக வரும், உங்கள் தரப்பினர் அத்தனை பேருக்கும் பதவி கொடுக்க வேண்டும் என கேட்பதைப் போல இருக்கிறது இது எனப் பொங்கியுள்ளனர்.

    பிறகு பேசலாம்

    பிறகு பேசலாம்

    மேலும், இந்த நிபந்தனையோடு பேச வருவது வீண், எங்கள் தரப்பில் யாருமே இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள், சரி பாதி பொறுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, இந்த முடிவோடு பேச்சுவார்த்தைக்கு வரவே வேண்டாம் என கட் அண்ட் ரைட்டாக மறுத்துப் பேசியுள்ளனர். இதனை வைத்திலிங்கம், ஓபிஎஸ்ஸுக்கு பாஸ் செய்துள்ளார். அவர்கள் கொஞ்சம் கூட இறங்கி வரவில்லை என்றால் என்ன செய்வது, சரி பார்த்துக்கலாம் என பதிலளித்தாராம் ஓபிஎஸ்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+