சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓபிஎஸ் டீமுக்கு தாவும் பொதுக்குழு உறுப்பினர்கள்! டெல்டாவில் கிடைத்த ‘பச்சை சிக்னல்’! அதிரடி எண்ட்ரி?

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி ஒன்னும் 3 மாதங்களில் தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், தற்போது சில பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஓபிஎஸ் தரப்புக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் இருந்து மேலும் சில பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர்கள் ஓபிஎஸ் பக்கம் சாய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Recommended Video

    ADMK | கூட்டணி குறித்து எங்க பொதுச்செயலாளர் முடிவெடுப்பாரு - Sellur Raju *Politics | Oneindia Tamil

    ஒரு பக்கம் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம், பழனி விசிட் என செல்லும் இடமெல்லாம் மக்களை திரட்டி அதிமுகவில் தனக்குத்தான் ஆதரவு இருக்கிறது என மாஸ் காட்டி வருகிறார் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி.

    மறுபுறம் சென்னை தேனி என மாறி மாறி பயணம் செய்து வரும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு போட்டியாகவும் அதிமுகவில் தான் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி வருவதோடு அவருக்கு எதிராக போட்டி பொதுக்குழு ஒன்றை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    வேலி தாண்டிய ஆடு! அதிமுக- திமுக- பாஜக! சென்னை மாநகராட்சி கவுன்சிலரை தூக்கிய அண்ணாமலை! ட்விஸ்ட் தான்!வேலி தாண்டிய ஆடு! அதிமுக- திமுக- பாஜக! சென்னை மாநகராட்சி கவுன்சிலரை தூக்கிய அண்ணாமலை! ட்விஸ்ட் தான்!

     ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு எதிராக இருப்பவர்களை திரட்டியும், ஏற்கனவே தன் தரப்பில் உள்ள ஆதரவாளர்களை வைத்தும் இந்த பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட இருக்கும் நிலையில் சசிகலாவும் விரைவில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவளிப்பார் என கூறப்படுகிறது. மேலும் டிடிவி தினகரன் சேரும்போது மூவரும் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஓரங்கட்டி அதிமுகவில் கைப்பற்ற திட்டம் திருப்பதாக கூறப்படும் நிலையில் தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்பது இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

    எடப்பாடி பழனிச்சாமி

    எடப்பாடி பழனிச்சாமி

    தற்போதைய சூழலை எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே தேர்தல் ஆணையம் ரிசர்வ் வங்கி ஆகியவற்றிற்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் இதுவரை எவ்வித முடிவுகளையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை எடப்பாடி பழனிச்சாமி மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்பை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் தான் தேனி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக நிர்வாகிகள் பலர் ரகசியமாக சந்தித்ததாகவும் அவர்கள் மேலும் பல பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர் ஓபிஎஸ் தரப்பில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

    சசிகலா, தினகரன் ஆதரவு

    சசிகலா, தினகரன் ஆதரவு

    மேலும் ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவு மாவட்டங்களை எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உள்ளவர்களையும் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு நிர்வாகிகளில் ஒருங்கிணைக்க தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது அவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தற்போது வந்துள்ள தகவல் ஓபிஎஸ் தரப்பில் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சசிகலா தினகரன் ஆதரவு மாவட்டங்களான டெல்டா பகுதிகளில் இருக்கும் நிர்வாகிகள் சில எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

    திட்டம் தொடரும்

    திட்டம் தொடரும்

    இதன் காரணமாக விரைவில் அவர்கள் ஓபிஎஸ் தரப்பில் ஐக்கியமாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பில் தற்போது இருக்கும் வைத்தியலிங்கம் இதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வரும் நிலையில் விரைவில் அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து நிர்வாகிகளை இழுக்கவும் ஓபிஎஸ் தரப்பு திட்டம் திட்டி வரும் நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் வரும் வரை தங்கள் திட்டம் தொடரும் என்கின்ற ஓபிஎஸ் தரப்பினர்.

    English summary
    While Edappadi Palaniswami, who has been elected as the Interim General Secretary of the AIADMK, will face the election in 3 months, now some general committee members and union secretaries are jumping to the side of OPS. In this case, it has been reported that some more general committee members and union secretaries from Delta districts are leaning towards OPS.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X