TN Budget: தனி கல்விக்கொள்கை : மனப்பாட முறைக்கு கட்...சிந்திக்கும் முறைப்படி பாடம் கற்பித்தல்

பள்ளிகளில் மனப்பாட முறைக்கு மாற்றாக சிந்திக்கும் முறைப்படி பாடங்கள் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடிப்படைக் கல்வி அறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய 'எண்ணும் எழுத்தும் இயக்கம்' ரூ. 66.70 கோடி மதிப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித்திறன்களை இளம் வயதிலேயே உறுதி செய்ய ரூ.114.18 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் மனப்பாட முறைக்கு மாற்றாக சிந்திக்கும் முறைப்படி பாடங்கள் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரை ஆற்றினார்.

அதில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பாக முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டுக்கு தனித்துவமான தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

எண்ணும் எழுத்தும் திட்டம்

எண்ணும் எழுத்தும் திட்டம்

பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அடிப்படை கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்ல 'எண்ணும் எழுத்தும் திட்டம்' தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயதில் மாணவர்களுக்கு கணினி திறன் மேம்பட நடவடிக்கை, ஸ்மார்ட் வகுப்பறை, கல்வி, பள்ளிக்கல்வி குறித்து பல்வேறு முன்னெடுப்புகளை கூறியுள்ளார். எண்ணும் எழுத்தும் இயக்கத்துக்கு ரூ.66.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 ரூ. 409 கோடி

ரூ. 409 கோடி

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு இலவச பள்ளி சீருடைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் இதற்கு 409 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். 25 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும்.

ரூ.10கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள்

ரூ.10கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள்

865 உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும். 25 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ரூ.10கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். உயர்கல்வித்துறைக்கு ரூ.5369 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை விகிதம்

மாணவர் சேர்க்கை விகிதம்

உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் அகில இந்திய அளவில் 27.1% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அது 51.4 சதவிகிதமாக உள்ளது. 17 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தையும் கொண்டு நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கல்விக்கான அறிவிப்பு

கல்விக்கான அறிவிப்பு

அரசுப்பள்ளிகள் என்றாலே அடிப்படை வசதியற்றவை என்ற நிலை இருக்கும். குடிநீர் வசதி, கழிவறை வசதியில்லாத பல பள்ளிகள் உள்ளன. அத்தகைய பள்ளிகளின் நிலையைப் பார்த்துதான் தற்போது உள்ள பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அதிக பணம் கொடுத்து தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். தற்போது கொரோனா காலமாக இருப்பதால் பல பெற்றோர்களின் வேலையிழப்பு மீண்டும் அரசுப்பள்ளிகளின் பக்கம் திருப்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் தனி கல்விக்கொள்கை பற்றியும் அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் பற்றியும் அறிவித்துள்ளார். வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் மாணவர்களின் கல்விக்காக அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+