சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பள்ளிக் கல்வி இயக்குநர் பதவி ரத்து.. ஐஏஎஸ் அதிகாரியை எளிதில் அணுக முடியாது.. கல்வியாளர்கள் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: 150 ஆண்டுகளாக இருந்து வரும் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவியை ரத்து செய்திருப்பது எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பள்ளி கல்வி இயக்குனர் பதவியை நீக்கிய தமிழக அரசு அதற்கான பொறுப்புகளை துறை சார்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறையை பொறுத்தவரை, அரசின் சார்பில் செயலர் செயல்படுவர்.

அவர்களின் கீழ் பல்வேறு பிரிவு இயக்குனர்கள் இயங்குவர். பள்ளி கல்வி இயக்குனர் என்ற பதவி மட்டுமே தலைமை பொறுப்பாக கருதப்படுகிறது. இந்த இயக்குனர் பதவி ரத்து செய்திருப்பது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேதமான அரசு பள்ளி.. சீரமைக்குமாறு முதல்வருக்கு கடிதம் எழுதிய சிறுமி.. மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை சேதமான அரசு பள்ளி.. சீரமைக்குமாறு முதல்வருக்கு கடிதம் எழுதிய சிறுமி.. மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை

பள்ளிக் கல்வி

பள்ளிக் கல்வி

பள்ளிக்கல்வி இயக்குனருக்கான அதிகாரம் ஆணையரிடம் ஒப்படைக்கப்படுவது சரியானதா? என்பதற்கு மூத்த கல்வியாளர், ராஜ ராஜன் பேசுகையில், பள்ளிக்கல்வி நிர்வாகத்தை, பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர், தலைமை ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர், மண்டலக் கல்வி அலுவலர் என அனுபவம் சார்ந்து படிப்படியாகப் பொறுப்பு உயர்வு பெற்றவர்கள் தான் பள்ளிக்கல்வி இயக்குனராக முடியும்.

பொறுப்பு

பொறுப்பு

இவ்வாறான, நிர்வாகத் திறன் வாய்ந்த பொறுப்பினை ரத்து செய்து ஆணையராக மாற்றிருப்பது மிகத்தவறான முடிவாகும். பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக, பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே மேற்கொள்வார் என்பது ஏற்புடையதாக இல்லை.

பரிந்துரை கடிதம்

பரிந்துரை கடிதம்

மேலும் ஆணையராக இருந்தால், பரிந்துரை கடிதம், ஆசிரியர்கள், அதிகாரிகள், பணி நியமனம், பதவி உயர்வு, பென்ஷன், பணியிட மாற்றம் போன்றவற்றுக்கு, பள்ளி கல்வி இயக்குனரை சந்தித்து, பரிந்துரை கடிதம் பெறுவர். இனி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு இந்த அதிகாரங்கள் வருவதால், அவரை ஆசிரியர்கள் மற்றும் சங்கத்தினர் எளிதில் அணுக முடியாது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அனுபவங்கள்

இருப்பினும், பள்ளிக் கல்வி இயக்குனரால் எந்த முடிவுகளையும் விரைவாக எடுக்க முடிவதில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரி அனைத்து மண்டலங்களிலும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி விரைவாக முடிவுகளை எடுப்பார். இதற்காக துறைரீதியான அனுபவங்களைக் கொண்டவர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும் என்பது சரியானது இல்லை என்றாலும் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளது. அரசின் முடிவு வரவேற்க்கத்க்கதாக பார்க்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

English summary
Educationists opposes for sacking the post of Director of School Education.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X