தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.. யூனிட்டுக்கு எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது. அடுமட்டுமல்லாமல் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு 28 முறை கடிதம் அனுப்பியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இலவச திட்டத்தில் மாற்றமில்லை
ஆனால் 42.19 சதவிகிதம் வீடு மற்றும் குடிசைக்கான மொத்த மின் கட்டணத்தில் மாற்றமில்லை. மக்களுக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்திலும் மாற்றம் இல்லை. அதேபோல் விசைத்தறிகளுக்கான 750 யூனிட் இலவச மின்சாரத் திட்டமும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

புதிய கட்டண விவரம்
தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக கட்டணம் கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மாதம் 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கான கட்டணம் ரூ.72.50 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மொத்தமாக 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு ரூ.297.50 வரை கட்டணம் உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155, 700 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.275, 800 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு.395, 900 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.565 உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது.

புதிய திட்டங்கள்
இதுமட்டுமல்லாமல் வணிக மின் நுகர்வோருக்கு மாதம் ரூ.50 மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1 உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசால் வழங்கப்பட்டும் வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், ஒரு வீட்டில் கூடுதலாக வாடகை அல்லது குத்தககைக்கு விடப்பட்டதைத் தவிர மற்ற கூடுதல் மின் இணைப்பிற்கு மாதம் ரூ.225 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Recommended Video

விரைவில் அமலுக்கு வரும்
மேலும் மின்சார உற்பத்திக்காக மூன்றில் இரு பங்கு தனியாரிடம் நிலக்கரி வாங்க வேண்டிய நிலை உள்ளது என்றும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மேலும், இந்த திருத்தி அமைக்கப்பட்ட மின் கட்டணத்திதன அமல்படுத்துவதற்கான உரிய மனு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்த பின் அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications