• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

போன தேர்தலை விட.. தமிழகத்தில் ஓட்டு சதவீதம் குறைந்து போச்சு.. எந்த கட்சிக்கு லாபம்? ஆட்சி யாருக்கு?

|

சென்னை: 2016 சட்டசபை தேர்தலை விடவும் நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருக்கிறது.

இது எந்த கட்சிக்கு சாதகம்.. எந்த கட்சிக்கு பாதகம் என்பது பற்றிதான் இப்போது டீக்கடை முதல் இணைய தளம் வரை விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

வாக்கு பதிவு எப்படி? சாதகமாக இருக்கும்தானே? ஐபேக் ஆபீசுக்கும் வீட்டுக்குமாக போய்வந்த மு.க. ஸ்டாலின்

234 தொகுதிகளுக்கும் நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவில் மொத்தம் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வாக்கு சதவீதம் குறைந்தது

வாக்கு சதவீதம் குறைந்தது

நேற்று மாலை இதை அறிவித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இந்த எண்ணிக்கை லேசாக உயரக்கூடும் என்று தெரிவித்திருந்தார். இன்று காலை 11.30 மணிக்கு இறுதி வாக்குப் பதிவு சதவீதம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, 72.76 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாம். இருப்பினும் இது எதிர்பார்த்த அளவுக்கான வாக்கு சதவீதம் இல்லை என்பது மட்டும் உண்மை.

கடந்த தேர்தல் நிலவரம்

கடந்த தேர்தல் நிலவரம்

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி ஆகியவற்றில் தேர்தல் நடைபெறவில்லை. 232 தொகுதிகளுக்கும் மட்டும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அப்போது 73.76 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. இது ஆட்சிக்கு எதிரான அலை கிடையாது. எனவே அதிமுக மறுபடி ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஒரு சதவீதம் வித்தியாசத்தில் திமுக கூட்டணியை விட அதிமுக அதிக வாக்குகளை பெற்றது.

அதிக ஓட்டு ஆளும் கட்சிக்கு ஆபத்து

அதிக ஓட்டு ஆளும் கட்சிக்கு ஆபத்து

பொதுவாக அதிக அளவுக்கு வாக்குகள் பதிவானால் ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசுவதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுவார்கள். ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான அலை வீசியது. இதன் காரணமாக ஜெயலலிதா முதல் முறையாக ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. அதேபோன்றுதான் 1996ஆம் ஆண்டு கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் ரவுடிகள் அட்டகாசம் என்ற புகார்களை தொடர்ந்து ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய அலை வீசியது. அப்போது திமுக எளிதாக ஆட்சியை பிடித்தது . ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் தோற்றுப்போனார்.

தமிழகம் கண்ட அலைகள்

தமிழகம் கண்ட அலைகள்

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது இலங்கை பிரச்சனையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுகள் நடந்து கொண்ட விதம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அதிமுக அமோக வெற்றி பெற்றது. திமுக பிரதான எதிர்க்கட்சியாக கூட வரமுடியவில்லை. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக பிரதான எதிர்க்கட்சியாக வந்தது.

அதிருப்தி அலை வீசவில்லையா

அதிருப்தி அலை வீசவில்லையா

இதை எல்லாம் வைத்து பார்த்தால், இப்போது ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய அலை வீசவில்லை, எனவேதான் வாக்காளர்கள் யார் ஆட்சி செய்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் இருந்து உள்ளார்கள். வாக்குச்சாவடிக்கு அவர்கள் வராத காரணம் இதுதான். அல்லது 75 அல்லது 80 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகி இருக்க வேண்டும் என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள். இது அதிமுகவுக்கு ஓரளவு சாதகம் என்பது அவர்கள் கருத்து.

லோக்சபா தேர்தல் நிலவரம்

லோக்சபா தேர்தல் நிலவரம்

இங்குதான் சில அரசியல் பார்வையாளர்கள் பார்வை வித்தியாசப்படுகிறது. இதோ இந்த உதாரணத்தைப் பாருங்கள். 2019 லோக்சபா தேர்தலின்போது தமிழகம் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த தேர்தலின்போது 71.87 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஆனால் கிட்டத்தட்ட திமுக கூட்டணி ஸ்வீப் செய்தது.

மோடி அரசுக்கு எதிரான அலை

மோடி அரசுக்கு எதிரான அலை

மத்திய மோடி அரசுக்கு எதிராக தமிழகத்தில் அலை வீசியது என்று தான் சொல்ல வேண்டும். தேனி லோக்சபா தொகுதி தவிர பிற அனைத்து தொகுதிகளிலும் திமுக வென்றது. அதுவும் நிறைய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. எனவே ஓட்டு சதவீதத்தை வைத்து அதை அதிமுகவுக்கு ஆதாயம் என்று கூறிவிட முடியாது என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

5 முனை போட்டியாச்சே

5 முனை போட்டியாச்சே

அதே நேரம் இதிலும் ஒரு மாறுபட்ட கருத்து இருக்கிறது. அது என்ன தெரியுமா. லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மற்றும் திமுக காங்கிரஸ் கூட்டணி என்ற இரண்டு தான் பிரதான பாத்திரம் வகித்தன. மற்ற கட்சிகள் பெயரளவுக்கு தான் லோக்சபா தேர்தலில் பங்கெடுத்தன. எனவே குறைந்த வாக்குகள் பதிவாகி இருந்தாலும் அது இரண்டாக தான் பெரும்பாலும் பிரிந்தது. சட்டசபை தேர்தல் அப்படி கிடையாது. 5 முனை போட்டி நிலவிய களம். அதுவும் ரொம்பவே தீவிரமான போட்டி நிலவியது.

யாருக்கு வெற்றி கிடைக்கும்?

யாருக்கு வெற்றி கிடைக்கும்?

அதிமுக, திமுக , மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், என ஐந்து கட்சிகளும், மக்களால் வெகுவாக அறியப்பட்டவர்கள் தலைமைகளால் வழி நடத்தப்பட்டது. எனவே, இந்த வாக்குகள் இத்தனை தரப்புக்கும் பிரிந்து செல்லும். அது அதிமுகவுக்கு ஆதாயமாக மாறிவிடக்கூடும் என்கிறார்கள் சிலர் . ஆனால் பல முனை போட்டியால், பிரிந்து செல்லும் வாக்குகள் அதிமுக ஆதாயமா, அல்லது திமுகவுக்கு ஆதாயமா என்பது மட்டும்தான் எஞ்சியுள்ள கேள்வி. மே 2ம் தேதி அதற்கான விடை தெரிந்துவிடும்.

 
 
 
English summary
Which party will get benefit from low voting percentage in Tamil nadu, some political analysis says there is no anti-incumbency wave against CM Edappadi k Palaniswami's AIADMK government. Here we can find the possibilities.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X