சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடக்கப்பட்ட 117 ஏக்கர் சொத்து! வரிசை கட்டி வரும் சிக்கல்கள்! கோர்ட்டுக்கு ஓடிய இபிஎஸ் டீம் ’மாஜி’!

Google Oneindia Tamil News

சென்னை : 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வரிபாக்கியை வசூலிப்பதற்காக தனக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தை முடக்கியும், வங்கிக் கணக்கில் முடக்கியும் வருமானவரி துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போதும் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர் புதுக்கோட்டை விஜயபாஸ்கர்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பல அமைச்சர்கள் மாற்றப்பட்ட போதும் மருத்துவர் என்ற முறையிலும் சிறப்பாக பணியாற்றியதின் காரணமாக சுகாதாரத் துறையை தொடர்ந்து பத்து ஆண்டுகள் கவனித்து வந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! திடீர் தில்! வருமான வரித்துறைக்கு எதிராக வரிந்துகட்டும் விஜயபாஸ்கர்! என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! திடீர் தில்! வருமான வரித்துறைக்கு எதிராக வரிந்துகட்டும் விஜயபாஸ்கர்!

சி விஜயபாஸ்கர்

சி விஜயபாஸ்கர்

அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் பிரிவின்போது சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்த விஜயபாஸ்கர் ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது முதலில் டிடிவி தினகரனுக்கும் அதன் பின்னர் அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவரான மதுசூதனுக்கும் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதன் பின்னரும் தொடர்ந்து சர்ச்சை வளையங்களில் சிக்கி வந்தவர் தான் சி.விஜயபாஸ்கர்.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

ஜெயலலிதா மரண வழக்கு குட்கா விசாரணை மருத்துவக் கல்லூரி முறைகேடு உள்ளிட்ட பல வழக்குகள் தொடர்பாக அவரது இல்லத்தில் அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் கூட மருத்துவக் கல்லூரி விவகாரம் தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான சி விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனையில் சுமார் 18 லட்சம் பணம் 100800 கிராம் தங்கம் வெள்ளி 120 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

வரி ஏய்ப்பு புகார்

வரி ஏய்ப்பு புகார்

அவர் மீது வரி ஏய்ப்பு புகாரும் வருமான வரித்துறையில் உள்ளது. இந்நிலையில் 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வரிபாக்கிய வசூலிப்பதற்காக தனக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தை முடக்கியும், வங்கிக் கணக்கில் முடக்கியும் வருமானவரி துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

206.42 கோடி

206.42 கோடி

புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12 ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.

நீதிமன்றத்தில் மனு

நீதிமன்றத்தில் மனு

இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவில், இந்த வங்கி கணக்குகளில் தான் எம்எல்ஏவுக்கான சம்பளத்தையும், அரசு நிதிகளை பெறுவதாகவும், அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுவுக்கு நாளை மறுநாளைக்குள் பதில் அளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

English summary
Former Minister Vijayabaskar has filed a petition in the Madras High Court challenging the action taken by the Income Tax Department to freeze 117 acres of land belonging to him and freeze his bank account to collect tax of Rs 206 crore 42 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X