30 டூ 40..இபிஎஸ்க்கு ஐடியா கொடுத்த ’வடக்கு’மாஜி! ம்ஹூம்..கிட்டவே நெருங்க விடாத ’மணி’ அதுதான் காரணம்?
சென்னை : அதிமுகவில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டி விடுவது தான் கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் என மூத்த முன்னாள் அமைச்சர் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தியதாகவும், ஆனால் பாஜக கூட்டணி நிச்சயம் வேண்டும் என கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இரு மூத்த முன்னாள் அமைச்சர்கள் பிடிவாதமாக இருப்பதால் தான் எடப்பாடி பாஜகவை விமர்சிக்க வேண்டாம் எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் என்றால் மறுபுறம் கூட்டணி தொடர்பாக பாஜக தலைமை தொடர்ந்து எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி அழைத்து வருகிறது.
சட்டமன்றத் தேர்தலில் தோற்றாலும் நீண்ட காலத்திற்குப் பிறகு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைவதற்கு காரணம் அதிமுக கூட்டணி தான் என்பதை மறுக்க முடியாது. ஒற்றை இலக்கத்தை விட குறைவாக வாக்கு சதவீதத்தை வைத்திருக்கும் அந்தக் கட்சியால் தமிழகத்தில் இருந்து ஒரே ஒரு எம்பியை மட்டுமே கடந்த தேர்தலுக்கு முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் பெற முடிந்தது.

பாஜக தலைமை
அதற்கு பிறகாக நடந்த இடைத்தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் பாஜகவால் ஜொலிக்க முடியவில்லை. காரணம் திமுக - அதிமுக எனும் இருவரும் திராவிட இயக்கங்கள் இருக்கும் வரை பாஜகவால் தமிழகத்தில் தனித்து செயல்பட முடியாது என்பதை அந்த கட்சியினர் நன்கு உணர்ந்திருக்கின்றனர். இதன் காரணமாகவே தற்போது நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுகவின் தோளை பற்றியே தேர்தல் பயணத்தை மேற்கொள்ள அந்த கட்சியை திட்டமிட்டு இருக்கிறது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி ஆகியோர் நான்கு அணிகளாக செயல்பட்டு வருவதால் வெற்றிக்கனியை பறிப்பது சிக்கலாக இருக்கும் என்பதால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அந்த கட்சி வலியுறுத்தி வருகிறது.

எடப்பாடி பிடிவாதம்
ஆனால் யாரையும் மீண்டும் அனுமதிக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்த பாஜக தலைவர்களிடமும் இதே கருத்தை தான் அவர் வலியுறுத்தி சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பேச வேண்டாம் என அந்த கட்சி தலைமை லோக்கல் நிர்வாகிகளிடம் கூறியுள்ளதாம். இந்த நிலையில் பாஜகவால் தான் அதிமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது குறிப்பாக சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் வாக்குகள் அதிமுகவுக்கு பெரும் பலமாக இருந்தது. ஆனால் பாஜக கூட்டணிக்கு வந்த பின் கிட்டத்தட்ட பத்து சதவீத வாக்குகள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சென்று விட்டது இதனால் பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மறைமுகமாக பேசி வந்தனர்.

வடக்கு மாஜி
ஒரு படி மேல் போய் சிவி சண்முகம் பாஜக திமுகவுடன் கூட்டணி அமைப்பதாக பேசினார். இது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பாஜக தலைமையும் தக்க பதிலடி கொடுத்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி சிவி சண்முகத்தை அழைத்து பாஜக குறித்து பேச வேண்டாம் என கண்டித்ததாகவும் இதனால் தான் அவர் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு தனியே சென்று அஞ்சலி செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி பாஜக அதிமுக விவகாரங்களில் தலையிடுவதில்லை எனவே அந்த கட்சி கொடுத்து விமர்சிக்க வேண்டாம் என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

கொங்கு மாஜிக்கள்
இந்த நிலையில் பாஜக கூட்டணி ஒத்து வராது அந்தக் கட்சியால் கிட்டத்தட்ட 40% ஆக இருந்த அதிமுக வாக்கு வங்கி முப்பது சதவீதமாக குறைந்துவிட்டது. தனித்துப் போட்டியிட்டால் கூட பிற கட்சிகளின் ஆதரவோடு குறிப்பிடத்தக்க இடங்களை பெற முடியும் எனவே பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்குவது குறித்து உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறினாராம். ஆனால் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பலம் வாய்ந்த இரு முன்னாள் அமைச்சர்கள் எடுத்த எடுப்பிலேயே பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்குவது சாத்தியம் இல்லாதது. ஏற்கனவே மத்திய விசாரணை அமைப்புகள் அடிக்கடி நெருக்கடி கொடுத்து வருகிறது. தேர்தல் சமயத்தில் மீண்டும் நெருக்கடி கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவே நாடாளுமன்ற தேர்தலை பாஜகவுடன் சந்திப்பதுதான் நல்லது என கூறினார்களாம்.

இரு அணிகள்
இதனால் வெகுண்டு எழுந்த அந்த மாஜி நான் சொல்வதை நீங்கள் கேட்க மாட்டீர்கள் என கோபமாகவே பேசி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிமுகவில் பாஜகவின் தலையீடு இல்லை என்றாலும் பாஜகவால் வரும் காலங்களில் தங்கள் தரப்புக்கு நெருக்கடி வரும் என்பதை உணர்ந்துள்ள சில முன்னாள் அமைச்சர்கள் பாஜக கூட்டணி வேண்டும் என வலியுறுத்துவதாகவும் வேறு சிலரோ என்ன நெருக்கடி வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் திமுக பாஜகவை எதிர்க்கவில்லையா எனவே கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும் என மற்றொரு தரப்பும் பேசி வருகிறது. பாஜக காரணமாக அதிமுகவுக்குள்ளேயே இரு கோஷ்டிகள் உருவாகி இருப்பது எடப்பாடி பழனிச்சாமியை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது என்கின்றனர் சில முக்கிய நிர்வாகிகள்.
-
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications