ரூமுக்குள்.. கடைசி நேரத்தில் என்னாச்சு.. ஹேம்நாத்திடம் விசாரணை.. ஹேன்ட்பேக்கில் இருந்தது என்ன?
சென்னை: கடந்த 3 நாட்களாக ஹேம்நாத்திடம் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், இன்று 4வது நாளாகவும் விசாரணையை விரிவுபடுத்தி வருகின்றனர்.. சித்ரா தற்கொலைக்கான காரணம் தெரியும்வரை, ஹேமந்த்திடம் விசாரணை தொடரும் என்று காவல் துணை ஆணையர் தீபா சத்யன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சித்ரா தற்கொலை நடந்து இன்றுடன் 4 நாட்களாகிறது.. குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட தற்கொலை மரணம் என்று முதல்கட்ட போஸ்ட் மார்ட்ட ரிப்போர்ட்டில் சொன்னாலும், சித்ராவை இந்த அளவுக்கு தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கேள்வியை முன்வைத்து விசாரணை நடக்கிறது.
அந்த வகையில், சித்ராவின் கணவர் ஹேமந்த்திடம் இன்றும் விசாரணை தொடர்கிறது.. இந்த விசாரணையின் முடிவை வைத்துதான், அடுத்தக்கட்ட வழக்கின் தன்மையும் நகர உள்ளது.
சித்ராவின் செல்போன் ஸ்கிரீனிலும்.. வாட்ஸ் ஆப் DP-யிலும் என்ன புகைப்படம் வைத்திருந்தார் தெரியுமா?

கடைசி நேரம்
எனவே, சித்ரா தங்கியிருந்த அறையில் கடைசி நேரத்தில் நடந்தது என்ன என்ற அடிப்படையில் இன்றைய விசாரணை நிகழ்கிறது. இதற்கு காரணம், ஹேமந்த் ரொம்பவும் பொசசிவ் ஆனவர்... இதனால்தான் சித்ராவுக்கும் அவருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.. ஒருமுறை இதற்காகவே தன் கையை வெட்டிக் கிழித்துக்கொண்டதும் நடந்துள்ளது.

சந்தேகம்
அந்த வகையில், சமீப காலமாக ஷூட்டிங்கிற்கு சித்ராவை ஹேமந்த்தான் அழைத்து சென்று வருவதாலும், சம்பவத்தன்று ரூமில் ஹேமந்த்தான் உடன் இருந்தார் என்பதாலும் அவர் மீதான சந்தேகம் அதிகரித்துள்ளது.. மேலும், சித்ரா இறந்த தினத்தன்று, சித்ரா குளிக்க போவதால் தன்னை வெளியே நிற்க சொன்னதாகவும், அதனால்தான் வெளியே வந்து நின்றேன், நீண்ட நேரம் கதவை திறக்காததால் மாற்று சாவி போட்டு உள்ளே நுழைந்தேன் என்றார்.

குழப்பம்
ஆனால், இன்னொருமுறை, காரில் உள்ள ஹேண்ட்பேக்கை எடுத்து வரும்படி சித்ரா சொன்னதால், தான் வெளியே சென்றதாகவும், ஹேண்ட்பேக்குடன் வரும்போது, கதவு உள்பக்கமாக மூடப்பட்டிருந்தாகவும் சொல்கிறார்.. ஆக, கடைசி நேரத்தில் அந்த ரூமில் என்னதான் நடந்தது என்பதுதான் குழப்பமாக உள்ளது.

4வது நாள் விசாரணை
ஹேமந்த் முரண்பட்ட தகவலை சொல்வதாகவும் நேற்று செய்திகள் வெளியான நிலையில், துணை கமிஷனர் தீபா சத்யன் நேரடியாகவே ஸ்டேஷனுக்கு வந்து ஹேமந்திடம் தனி ரூமில் தீவிரமான விசாரணையை நடத்தி உள்ளார். இன்றும் 4வது நாளாக விசாரித்து வருகிறார்.. சித்ரா தற்கொலைக்கு காரணம் தெரியும்வரை ஹேமந்திடம் விசாரணை நடக்கும் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.