பேரறிவாளன் முதல் ஹிஜாப் வரை.. 2022ல் உச்சநீதிமன்றம் வழங்கிய 5 முக்கிய தீர்ப்புகள்! நீதி கிடைத்ததா?
சென்னை: 2022 ஆம் ஆண்டு பல்வேறு நல்ல விசயங்களையும், துயரங்களையும் நமக்கு தந்துவிட்டு விடைபெற்று செல்ல இருக்கிறது. இந்த சூழலில் இந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வெளியிட்ட 5 முக்கிய தீர்ப்புகளை பார்ப்போம்.
ஜனநாயக தாங்கி பிடித்து நிற்கும் 4 தூண்களில் மூன்றாவது முக்கிய தூணாக நிற்கிறது நீதித்துறை. அரசோ, தனிநபரோ, நிறுவனமோ தனி மனிதருக்கோ, ஒரு கூட்டத்திற்கோ அநீதி இழைக்கப்படும்போது அவர்களின் கடைசி வாய்ப்பாக இருப்பது நீதித்துறை.
கீழமை நீதிமன்றம் தொடங்கி உச்சநீதிமன்ற வரை பல தருணங்களில் மக்களுக்கு நீதியை தேடித் தந்து இருக்கின்றன. அரசுகள் புதிய சட்டங்களை இயற்ற காரணமாகி இருக்கின்றன. இப்படி நீதித்துறையின் தலைமை பீடமான உச்சநீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கிய 5 முக்கிய தீர்ப்புகளை பார்ப்போம்.

பேரறிவாளன் விடுதலை
கடந்த 1991 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் எனக்கூறி பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்களை விடுதலை செய்திடக்கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானமும் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 142-வது பிரிவைச் செயல்படுத்தி கடந்த மே மாதம் அவரை விடுதலை செய்தது.

6 தமிழர்கள் விடுதலை
பேறிவாளன் விடுவிக்கப்பட்டதைபோன்று தங்களையும் விடுதலை செய்திட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மற்ற 6 தமிழர்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 6 தமிழர்களுக்கும் விடுதலை வழங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த நளினி மட்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டார். ஏனைய 5 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள்.

ஹிஜாப் வழக்கு
கடந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்த விவகாரம் ஹிஜாப். கர்நாடக கல்வி நிறுவனங்கள் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஒரு நீதிபதி ஹேமந்த் குப்தா வழக்கை தள்ளுபடி செய்தார். மற்றொரு நீதிபதியான துலியா தடையை நீக்குவதாக அறிவித்தார். இருவேறு தீர்ப்புகள் வந்ததால் கர்நாடக அரசின் தடையே தொடர்ந்தது.

உயர்சாதி இடஒதுக்கீடு
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் குறைவாக சம்பாதிக்கும் உயர்சாதியினரை பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்று கருதி அவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அதில், 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10% பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

சித்திக் காப்பான் ஜாமீன்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் கடந்த 2020 ஆம் ஆண்டு 19 வயது தலித் பெண் 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொல்லப்பட்ட இந்த சம்பவம் இந்திய அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அங்கு செய்தி சேகரிக்க சென்ற கேரளாவை சேர்ந்த சித்திக் காப்பான் மீது யுஏபிஏ உள்ளிட்ட வழக்குகளை போட்டு கைது செய்தது உத்தரப்பிரதேச காவல்துறை. தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி பலமுறை அவர் தொடர்ந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு சென்றார் சித்திக் காப்பான். கடந்த செப்டம்பர் மாதம் இவரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான அமர்வு "பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திடம் பேட்டி எடுக்க இவர் சென்றது குற்றமா? என்று கேள்வி எழுப்பி ஜாமீன் வழங்கினர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications