தாய் பத்திரம் முதல் அசல் பத்திரம் வரை அலைய வேண்டாம்! சொத்து பத்திர நகல் பெற தமிழக அரசு ஸ்மார்ட் மூவ்
சென்னை: தமிழகத்தில் நிலம் மற்றும் வீடு தொடர்பான சொத்து பரிமாற்றங்களில் பத்திர நகல்களை பெறுவது என்பது பொதுமக்களுக்கு நீண்டகாலமாகவே ஒரு சவாலான காரியமாக இருந்து வருகிறது.. இதற்கு சில காரணங்களும் உள்ளன.. எனினும், சொத்து பத்திர நகல்களை உடனடியாக பெறுவதற்கு நம்முடைய அரசு ஒரு சூப்பர் முடிவை எடுத்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..
பொதுவாக ஒரு சொத்தை விற்பனை செய்யவோ அல்லது அதன் பேரில் வங்கி கடன் பெறவோ முற்படும்போது, அந்த சொத்தின் அசல் பத்திர நகல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல் ரொம்பவே முக்கியம்..

தாய் பத்திரம் - அசல் ஆவணங்கள்
ஆனால், சார்-பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக இந்த நகல்களைபெறுவதில் சமீப காலமாகவே கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது... அதிலும் விண்ணப்பித்த சில நாட்களிலேயே கைக்கு வர வேண்டிய இந்த ஆவணங்கள்கூட, நிர்வாக ரீதியிலான சிக்கல்களால் வாரக்கணக்கில் தாமதமாவது சொத்து சந்தையில் பெரும் தேக்கநிலையை உருவாக்கியுள்ளது.
இந்தத் தாமதத்திற்கு பின்னணியில் பல தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் காரணங்கள் உள்ளன. குறிப்பாக, பதிவுத்துறையின் வெப்சைட்டில் அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் சர்வர் வேகம் குறைதல் போன்றவை முக்கிய பிரச்சனையாகப் பார்க்கப்படுகின்றன.
தமிழக பதிவுத்துறை
மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான யூசர்கள் டேட்டாக்களை தேடுவதால், சாப்ட்வேர் செயல்பாட்டில் அடிக்கடி முடக்கம் ஏற்படுவதாக தெரிகிறது..
அதுமட்டுமின்றி, பழைய ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத சூழலில், சில குறிப்பிட்ட காலத்திற்கு முந்தைய பத்திரங்களை வெப்சைட்டில் தேடி எடுப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
அலுவலக நடைமுறைகளின்படி, பழைய ஆவணங்களின் நகல்களை தயாரிக்கும்போது அவற்றை மூல ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், பணியாளர்கள் பற்றாக்குறை நிலவும் அலுவலகங்களில் இந்த ஃபைல்கள் எல்லாம் மெதுவாக நகர்கிறதாம்.. இதுபோக, சில ஆவணங்கள் டேமேஜ் ஆகி இருப்பதும், இந்த தாமதத்திற்கு காரணமாக சொல்கிறார்கள்..
பத்திர நகல் உடனே பெற
எனினும் இத்தகைய இன்னல்களை களைந்து, பொதுமக்களுக்கு தடையற்ற சேவையை வழங்கும் நோக்கில் தமிழக பதிவுத்துறை இப்போது ஒரு சூப்பர் செயல்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது மாநிலம் முழுவதும் உள்ள 590 சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், சொத்து பத்திர நகல்களை இணையதளம் வாயிலாக உடனுக்குடன் பெரும் ஆன்லைன் வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இனிமேல் சொத்தின் அசல் பத்திரத்தை தொலைத்தவர்கள் அல்லது அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க விரும்புவோர், சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. புதிய நடைமுறையின்படி, பதிவுத்துறையின் இணையதளத்தில் விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தைச் செலுத்திய சில நிமிடங்களிலேயே, விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அந்த ஆவணத்தின் நகல் PDF வடிவிலேயே தானாகவே வந்து சேர்ந்துடுமாம்..
தமிழக அரசு ஸ்மார்ட் மூவ்
இந்த புதிய சேவையின் மிக முக்கியமான ஹைலைட் என்னவென்றால், இதில் சார்-பதிவாளர் அலுவலக அதிகாரிகளின் தலையீடு எதுவுமே இருக்காது.. ஆட்டோமெட்டிக்காகவே இது செயல்படுவதால், பொதுமக்களின் விண்ணப்பங்களை யாராலும் தடுத்து நிறுத்தவோ அல்லது தாமதப்படுத்தவோ முடியாது.
முதற்கட்டமாக, 1975-ம் ஆண்டு முதல் தற்போது வரை பதிவான அனைத்து பத்திரங்களின் நகல்களையும் இந்தத் தடையற்ற முறையில் பெற முடியும். இதற்கு வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக 400 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 1975-க்கு முந்தைய காலத்து ஆவணங்களுக்கு மட்டும் தற்போதைக்கு ஆன்லைன் விண்ணப்பம் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குச் செல்லும் நடைமுறை தொடர்கிறது. விரைவில் அந்த பழைய ஆவணங்களுக்கும் இந்த உடனடி சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.
சொத்து பத்திரங்கள்
இந்த தொழில்நுட்ப முன்னெடுப்பானது, நிலம் மற்றும் வீடு வாங்குவோர் அசல் ஆவணங்களின் நம்பகத்தன்மையை உடனடியாகச் சரிபார்க்கவும், வங்கிப் பணிகளை விரைவாக முடிக்கவும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ஒருபுறம் சர்வர் கோளாறு மற்றும் நிர்வாகத் தாமதங்கள் போன்ற சவால்கள் இருந்தாலும், மறுபுறம் பதிவுத்துறை மேற்கொண்டுள்ள இந்த டிஜிட்டல் சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் சொத்து தொடர்பான ஆவணப் பரிமாற்றங்களை மிகவும் வெளிப்படையானதாகவும், எளிமையானதாகவும் மாற்றும் என்பதில் ஐயமில்லை. இதன் மூலம் நடுத்தர மக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் சந்தித்து வந்த காலதாமத புகார்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு எட்டப்பட்டு விட்டது என்றே சொல்லலாம்...!!!
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications