சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தங்கமே உன்னைத்தான் தேடி வந்தோமோ நாங்க.. சென்னையில் நகை வாங்குவோர் செம்ம உற்சாகம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை ஐந்து நாளில் மட்டும் 1784 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ37296.க்கு விற்பனையாகிறது. இதனால் நாகை வாங்க விரும்புவோர் உற்சாகம் அடைந்துள்ளனர். பலரும் நகைக்கடைகளை நோக்கி குவிந்து வருகிறார்கள்.

அமெரிக்க தேர்தலில் முடிவுகளில் ஏற்பட்ட குழப்பம், ரூபாயின் மதிப்புகளில் ஏற்பட்ட மாற்றம், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம் போன்ற காரணங்களில் சர்வதேச அளவில் தங்கம் விலை கடந்த 3 மாதமாக ஏறுவதும், பின்னர் இறங்குவதுமாக காணப்படுகிறது. தொடர்ச்சியாக 7 நாட்களில் மட்டும் சவரன் 1384 அளவுக்கு அதிகரித்தது. இதனால் சவரன் கடந்த 6ம் தேதி 39 ஆயிரத்தை தாண்டியது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த ஐந்து நாட்களில் மட்டும் தங்கம் விலை 1048 ரூபாய் சரிந்துள்ளது. இன்றும் சரிந்துள்ளது தங்கம் விலை. தற்போது ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ37296.க்கு விற்பனையாகிறது.

டிசம்பர் 30 மிக குறைவு

டிசம்பர் 30 மிக குறைவு

ஒரு சவரன் தங்கம் விலை கடந்த டிசம்பர் 30ம் தேதி 37696.க்கும், டிசம்பர் 31ம் தேதி 37808க்கும், ஜனவரி 1ம் தேதி 37880.க்கும், ஜனவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் 37984க்கும் விற்பனையானது. இப்படி படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை ஜனவரி 3ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு 536 ரூபாய் உயர்ந்து ரூ.38520க்கு விற்பனை செய்யப்பட்டது.

6ம் தேதி மாற்றம்

6ம் தேதி மாற்றம்

அதற்கு அடுத்த நாளான ஜனவரி 4ம் தேதி இன்னும் உச்சபட்சமாக 38848க்கும், ஜனவரி 5ம் தேதி 39080க்கும் விற்பனையானது. அதாவது ஒரு வாரத்தில் 1384 ரூபாய் அளவுக்கு ஒரு சவரன் உயர்ந்தது. 37696 ரூபாயில் இருந்து ரூ.39080க்கு உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் விலை 4712 ரூபாயில் இருந்து 4754 ரூபாய்க்கு உயர்ந்தது.

கிராமுக்கு 80 குறைவு

கிராமுக்கு 80 குறைவு

இதனிடையே கடந்த வியாழக்கிழமை காலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 80 குறைந்து ஒரு கிராம் ரூ.4,805க்கும், சவரனுக்கு 640 குறைந்து ஒரு சவரன் ரூ.38,440க்கும் சென்னையில் விற்கப்பட்டது.

நகை வாங்குவோர் உற்சாகம்

நகை வாங்குவோர் உற்சாகம்

அதே போல வெள்ளிக்கிழமை), தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 51 குறைந்து ஒரு கிராம் ரூ.4,754க்கும், சவரனுக்கு 408 குறைந்து ஒரு சவரன் 38,032க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு 432 ரூபாய் குறைந்தது. இதனால் தங்கம் விலை ஒரு சவரன் 37600க்கு சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக (ஞாயிறு விலையில் மாற்றம் இருக்காது) விற்பனையானது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தங்கம் விலை இன்றும் (திங்கள்கிழமை) குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம், ரூ.4662-க்கு விற்பனை செய்யப்படுகிறது

தங்கம் வியாபாரிகள்

தங்கம் வியாபாரிகள்

சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் இது பற்றி அண்மையில் கூறுகையில், அமெரிக்காவின் புதிய அதிபர் பிடன் பதவியேற்கும் வரை தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் தான் இருக்கும் என்றார். தற்போதைய நிலையில் எப்போது தங்கம் விலை ஏறும், எப்போது குறையும் என்பதை கணிக்க முடியாத நிலை சூழ்நிலை உள்ளது என்றும் கூறினார். அவர் கூறியதை போல் தங்கம் விலை சரசரவென ஏறியும் இறங்கியும் வருகிறது. தங்கம் விலையில் ஏற்பட்ட பெரும் சரிவு நகை வாங்குவோரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

English summary
Gold prices fall by 1784 rupees in two days alone. Gold prices in Chennai traded at Rs 37,296 per savaran. one gram gold price rs. 4662
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X