ஸ்டார் ஓட்டலில் நடிகையை கட்டிப்பிடித்த ரூம் பாய்.. சென்னையில் ஒரு மாதம் தங்க வந்த இடத்தில் இப்படியா
சென்னை: சென்னையில் உள்ள ஒரு காஸ்ட்லி நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் நடிகையிடம் கல்லூரி மாணவர் அத்துமீறி நடக்க முயன்ற அதிர்ச்சி சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் விருந்தினர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் இது எழுப்பியுள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட நபர் யார் என்ற விவரமும் வெளியாகி உள்ளது.
கேரள திரையுலகை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க பிரபல நடிகை ஒருவர், சென்னையில் நடைபெற்று வரும் சினிமா ஷூட்டிங் தொடர்பாக தி.நகர் தாமஸ் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார்.

நட்சத்திர ஓட்டல் இண்டர்காம் போன்
கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாலையில், நடிகையின் ரூமில் இருந்த இண்டர்காம் தொலைபேசி வேலை செய்யவில்லை. இதுகுறித்து புகார் அளிப்பதற்காக அவர் ஹோட்டலின் ரிசப்ஷன் பகுதிக்கு நேரடியாகச் சென்று தகவல் தெரிவித்துவிட்டு மீண்டும் தனது அறைக்கு திரும்பினார்.
கொஞ்ச நேரத்தில் நடிகையின் அறைக்கதவை ஒரு நபர் தட்டியுள்ளார். கதவைத் திறந்தபோது, வரவேற்பு அறையில் சொல்லப்பட்ட புகாரின் அடிப்படையில் தொலைபேசியை சரி செய்ய வந்திருப்பதாக அந்த நபர் கூறினார். ஊழியர் என நம்பி நடிகையும் அவரை ரூமுக்குள் நுழைய அனுமதித்தார். ஆனால், அந்த நபர் தொலைபேசியைச் சரி செய்வது போல நீண்ட நேரம் அங்கேயே நடித்துக்கொண்டிருந்துள்ளார்.
கட்டிப்பிடித்த ஊழியர்
திடீரென அந்த நபர் நடிகையிடம், "நீங்கள் நடிகை தானே, உங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளலாமா?" என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகை சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அந்த நபர் விடாப்பிடியாக "செல்பி எடுத்தே தீருவேன்" என்று அடம் பிடித்துள்ளார்.
நடிகை சரி என்று ஒத்துக்கொண்ட நிலையில், செல்பி எடுப்பது போல நடிகைக்கு மிகவும் நெருக்கமாக வந்து அவரைத் திடீரென கட்டிப்பிடித்துள்ளார். மேலும் அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதனால் நிலைதடுமாறிய நடிகை பயத்தில் சத்தமிட்டு கூச்சலிடவே, அந்த நபர் உடனடியாக அறையை விட்டு தப்பி ஓடினார்.
போலீஸ் நடவடிக்கை - யார் அந்த நபர்
பாதிக்கப்பட்ட நடிகை உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு ரூமுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஹோட்டலில் இருந்த அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். குற்றவாளி கல்லூரி மாணவர் என்பதால், அவரது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எச்சரித்து அனுப்ப போலீசார் முயன்றனர்.
ஆனால், இதற்கு நடிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. "ஒரு பெண்ணாக எனக்கு நேர்ந்த இந்த அத்துமீறலை சட்டப்படி சந்திக்க விரும்புகிறேன்" என நடிகை உறுதியாக நின்றார். அத்துடன் மாம்பலம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரையும் தந்தார்..இந்த புகாரை தொடர்ந்து, அந்த மாணவரை கைது செய்தனர்...
அவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சையது அப்ரிடி (20) என்பதும், சென்னையில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டே அந்த ஹோட்டலில் பகுதி நேர வரவேற்பாளராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.. தற்போது சையது அப்ரிடி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்..
ரூமை காலி செய்த நடிகை
ஆரம்பத்தில், அவர் ஒரு கல்லூரி மாணவர் என்பதாலும், அவரது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதாலும், போலீஸார் அவரை எச்சரித்துவிட்டு, மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு விடுவிக்க நினைத்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட நடிகை இதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம்..
-
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications