அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா!
சென்னை: 2001இல் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 1996 தேர்தலில் முகம் தெரியாத திமுக வேட்பாளரிடம் அவர் தோற்றுப்போனபோது நிச்சயம் ஆடிப் போனார். ஆகவே, இந்த முறை புதிய ஆட்சியில் எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாகக் கையாளத் தொடங்கினார்.
புழுத்த அரிசியைக் கொள்முதல் செய்த குற்றத்தில் பொன்முடி கைதானார். உடன் செய்தி சேகரித்த சன் டிவி நிருபர் சுரேஷ் கைதானார். நிருபர் கைதை கண்டித்து பத்திரிகையாளர்கள் சென்னையில் 2001 ஜூன்29 ஆம் தேதி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 150 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர். காவலர்கள் தாக்கியதில் சிலரது மண்டை உடைக்கப்பட்டது.

அடுத்த அடி திமுக தலைவர் மீதே விழுந்தது. மேம்பாலங்கள் கட்டியதில் முறைகேடு எனக் கூறி நள்ளிரவு 1:30 மணிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டுக் கதவை உடைத்து காவலர்கள் கைது செய்தனர். உடனடியாக ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு விரைந்து வந்த டி.ஆர்.பாலு, 'முரசொலி' மாறன் ஆகிய இருவரும், காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டனர்.
அடுக்கடுக்கான கைதுகள்
மற்றொரு பக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய குற்றத்திற்காக மதிமுக பொதுச்செயலாளர் 2002, ஜூலை11 அன்று பொடா சட்டத்தில் தடாலடியாகக் கைதானார். ஆகஸ்ட் 1, 2002 அன்று அதே பொடா சட்டத்தில் பழ.நெடுமாறன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த இருவரின் வீடுகளிலும் ரெய்டுகள் நடந்தன. அக்டோபரில் துரைமுருகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.
டிசம்பரில் அன்பழகன் வீட்டில் ரெய்டு. இவர் வீட்டில் ஃபிரிட்ஜ், கலர் டிவி மற்றும் 12 சவரன் நகையைக் கைப்பற்றினர் என்றார் அன்பழகன். 2003 ஜனவரி மாதம் குமாரதாசுக்கு கொலை மிரட்டல் விட்டார் எனக் கூறி திமுக எம்.எல்.ஏ பரிதி பரிதி இளம்வழுதி கைதானார். மே மாதம் நடந்த தேர்தலில் போது இவரது தேர்தல் அலுவலகத்தை ஜான் பாண்டியன் தாக்கினார். அது பெரிய மோதலானது.
இறுதியாக ராணி மேரி கல்லூரியை இடிக்கப் போவதாகத் தகவல் பரவியது. மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவளிக்கச் சென்ற மு.க.ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டார். இவரது மேயர் பதவியைச் செயல் இழைக்கச் செய்வதற்காக ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தை உண்டாக்கி, ரிப்பன் பில்டிங் அதிகாரத்தை அவரிடமிருந்து பிடுங்கினார். ராணி மேரி வாட்ச் மேனை மிரட்டியதாகவும் காவல்துறைகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார். இவருடன் 5 திமுக எம்.ஏ.க்கள் கைதாகினர். இறுதியாக 'நக்கீரன்' கோபாலை பொடா சட்டத்தில் உள்ளே தூக்கிவைத்தார் ஜெயலலிதா.
ஜெ ஹெலிகாப்டர் பயணம்
பழைய ஆணவப்போக்கை அவர் மாற்றிக் கொண்டுவிட்டார் என்பது பொய்த்தது. திரையில் இனிய ஹீரோயினாக பெயர் எடுத்த அவர், அரசியலில் வில்லியாக மாறுவேடம் பூண்டிருந்தார். இடதுசாரி கட்சிகள் இதைக் கண்டித்தன. சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமாவளவன், "நான் சட்டமன்றத்திற்கேப் போவதில்லை. நேரம்தான் வீண் விரயம்" என்றார். அதிமுக அமைச்சர்கள் யாரும் ஊடகங்கள் முன்பு ஊமையாகவே நின்றனர். மறைமுகமாக அதிகாரிகளுக்கும் வாய் பூட்டிப் போட்டிருந்தார் ஜெயலலிதா.
ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் 10 அமைச்சரவை மாற்றங்கள் நடைபெற்றன. அதிகாரிகள் நினைத்த நேரத்தில் பொறுப்பிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டனர். முதன்முறையாக பாமக நிறுவனர் ராமதாஸ், 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி ஜெ ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றார். இதையே வேறு மொழியில், "நிதிநிலையைக் காரணம் காட்டி 6 மாதம் வரை மாநில அரசின் நிர்வாகத்தை மத்திய அரசு எடுத்துக்கொள்ளலாம்" என்றனர் சில திமுகவினர்.
இந்த முறை அரசு நலத்திட்ட விழாக்களுக்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் செல்லத் தொடங்கினார். 8 மாவட்டங்களுக்கு 2300 கோடி ரூபாயை வழங்கினார். ஆட்சிக்கு வந்ததும் அவர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் 6ஆயிரம் கோடி நிதிப்பற்றாக்குறை இருப்பதாகத் தெரியவந்தது. ஆனால், வருவாயைப் பெருக்க என்ன செய்யப்போகிறார் ஜெ என்பது மர்மமாகவே இருந்தது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் பெய்த மழையால் சென்னையே வெள்ளக்காடானது. அவர்களுக்கு வெள்ள நிவாரம் அறிவித்தார் ஜெ. அதைவாங்குவதில் கூட்டநெரிசல் உண்டாகி, 6 பேர் மாண்டுபோயினர். அது தலைப்புச் செய்தியானது. முன்னதாக 2004இல் ஏற்பட்ட சுனாமிக்காக வழங்கப்பட்ட நிவாரணத்தில் கொள்ளை நடித்துள்ளதாக ஸ்டாலின் பேசியிருந்தார்.
வீரப்பன் என்கவுண்டர்
இம்முறை அதிமுக ஆட்சியில் அச்சுறுத்தலாக இருந்துவந்த வீரப்பன் என்கவுண்ட செய்யப்பட்டதால், ஜெயலலிதா இழந்த செல்வாக்கை மறுபடியும் தக்கவைத்தார். குறிப்பாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது அவரை இரும்பு மனுஷியாக மக்கள் மனதில் நிலைகொள்ளச் செய்தது.
திமுக ஆட்சியில் அரசு கஜானா காலியாகவே, அரசு ஊழியர்கள் சலுகை பறிபோனது. இலவச மின்சாரம், பஸ் பாஸ், வேட்டி -சேலை திட்டங்கள் ரத்தாகின. 2004 மக்களவை தேர்தலில் திமுக 40 தொகுதிகளில் வென்றதை ஜெயலலிதாவால் சகிக்க முடியவில்லை. 12.5 லட்சம் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டது. நடு இரவில் போராடிய ஊழியர்கள் சிறைக்குள் அடைபட்டனர். கட்டாய மதமாற்றச் சட்டம் சர்ச்சையானது. ரேஷன் அட்டைகளில் புதிதாக 'ஹெச்' முத்திரை குத்தியது மக்களை வெறுப்புடைய செய்தது. 40 தொகுதிகள் கைவிட்டுப் போன பின் சட்டங்களை விலக்கிக் கொண்டார் ஜெ.
இந்நிலையில்தான் 2006 தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டுச்சேர்ந்தன. இருந்தும் துணிச்சலாக, "எனக்கு மாற்றாகத் தமிழகத்தில் யாரும் இல்லை" என்றார்.
அவர் கனவு இம்முறை பொய்த்தது. 2006 தேர்தலில் அதிமுக 61 இடங்களில் வெற்றி. திமுக 96 இடங்களில் வெற்றி. பாமக 18 இடங்களில் வெற்றி. காங்கிரஸ் 34, மதிமுக 6, சிபிஐ 6, சிபிஎம் 9, விசிக 2, என வெற்றியை உறுதிப்படுத்தின. தேமுதிக சார்பில் நின்ற விஜயகாந்த் விருத்தாசலத்தைக் கையகப்படுத்தினார்.
இந்த முறை சேப்பாக்கம் தொகுதிக்கு மாறிய மு.கருணாநிதி 34188 வாக்குகளைப் பெற்றார். ஆண்டிபட்டியில் களமிறங்கிய ஜெயலலிதா 73,927 வாக்குகள் பெற்று வெற்றி கண்டார். பெரும்பான்மை பலம் திமுகவுக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, கருணாநிதி அரசை 'மைனாரிட்டி அரசு' என வசைபாடி வந்தார் ஜெயலலிதா.
எழுதியவர்: கடற்கரய்
-
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications